ஞாயிறு, 8 டிசம்பர், 2019
பாலும் மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள் - நூல் அறிமுகம்
வியாழன், 5 டிசம்பர், 2019
ஜோன் ஆஃப் ஆர்க் - நூல் விமர்சனம்
புதன், 27 நவம்பர், 2019
காற்று வாசித்த கவிதை - நூல் அறிமுகம்
திங்கள், 25 நவம்பர், 2019
கிளியோபாட்ரா - நூல் அறிமுகம்
கிளியோபாட்ரா - நூல் அறிமுகம்
பொதுவாக வரலாற்று நூல்கள் படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கும். அப்படித்தான் கிளியோபாட்ரா வின் வரலாற்றை படிக்கும் சந்தர்ப்பம் இந்த நூலின் ஆசிரியர் முகிலின் வாயிலாக கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
இந்த உலகின் மாபெரும் இரண்டு அரசர்களான ஜூலியஸ் சீசரும் , மார்க் ஆண்டனியும் ஒரு பெண்ணின் முன்னாள் வீழ்ந்து கிடந்திருக்கிறார்கள் என்றால் ஒரு அரசி தன்னுடைய அழகால் மட்டும் அவர்களை வீழ்தியிருக்க முடியாது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை அவளுடைய அழகை கொண்டுதான் ரோம் என்னும் பெரும் சாம்ராஜ்யத்தின் இரு வீரர்களை அடக்கிவிட்டால் என்பது உண்மையாக இருந்தால் அவள் எவ்வளவு பெரிய பேரழகியாக இருந்திருக்க வேண்டும் என்றும் பிரம்மிக்க தோன்றுகிறது. நிச்சயமாக 2000 வருடத்திற்கு முன்னால் ஒரு பெண் இவ்வளவு தைரியமாக இருந்திருக்கிறார் என்றால் அவளை நான் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. 2000 வருடங்களாக அவளுடைய பெயர் ஏதோ ஒரு ரூபத்தில் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது இதோ இன்று என் மூலமாக உச்சரிக்கப்படுகிறது.
கிளியோபாட்ராவின் தந்தையான பன்னிரண்டாம் தாலமிக்கு நாம் ஒருவகையில் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனெனில் தன்னுடைய இரண்டு மகள்களையும் கல்வி கற்க அனுமதித்திருந்தார். ஒருவேளை கல்வி கற்றதனால் தான் என்னவோ புத்தி சாதுரியத்தால் இரண்டு மாபெரும் வீரர்களை தன்னுடைய மனோ தைரியத்தாலும் ராஜா தந்திரத்தாலும் கிளியோபாட்ரா வீழ்த்தியிருக்கக்கூடும். கல்வி கற்காமல் போயிருந்தால் வரலாறு மாறி இருக்குமோ என்னமோ.
இன்னும் கொஞ்சம் விளையாட்டாக அதிகப்படியாக சொல்லபோனால் அலெக்சாண்டர் என்ற மாபெரும் வீரன் இல்லாமல் போயிருந்தால் தாலமி இல்லாமல் போய் இருப்பார், ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி, புரூட்டஸ், கிளியோபாட்ரா, அகஸ்டஸ் போன்ற எவரும் இல்லாது போயிருப்பர்.
போகட்டும் புத்தகத்தில் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:
1. அலெக்ஸாண்டர் எகிப்து படையெடுப்பின்போது எகிப்தை வெற்றி கொண்டு அங்கே அலெக்ஸாண்ட்ரியா என்ற அழகான நகரத்தை நிறுவியிருக்கிறார்.
2. அலெக்ஸாண்டிரியாவில் பன்னிரண்டாம் தாலமியால் ஒரு அழகான அருங்காட்சியகம் அவற்றோடு கூடிய நூலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது இந்த நூலகத்தில் தான் கிளியோபாட்ராவும் அவளது அக்காவான பெரினைசும் கல்வி கற்றிருக்கிறார்கள்.
3. எகிப்தியர்கள் தங்களுடைய சொந்த சகோதரர்களே திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தினை கொண்டிருந்திருக்கிறார்கள்.
4. ரோமில் செல்வந்த குடும்பத்தில் பிறந்த மார்க் ஆண்டனி கேபினியஸ் என்ற துணைத்தளபதி மூலம் தற்செயலாகத்தான் ரோம் படையில் சேர்ந்து இருக்கிறார்.
5. அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாட்ரா குளிப்பதற்காக 700 கழுதைகள் வளர்க்கப்பட்டு இருக்கிறது. பணியாளர்கள் காலையில் எழுந்து கழுதைப்பால் சேகரிக்க வேண்டுமாம். தொட்டியில் நிரப்பப்பட்ட பாலில் கிளியோபாட்ரா குளிப்பாறாம்.
5. எகிப்து நாட்டை அரசாட்சி செய்ய தன்னுடைய பதினொரு வயது சகோதரன் பதிமூன்றாம் தாலமியை மணந்து முதன்முதலில் அரியணை ஏறினால் கிளியோபாட்ரா.
6. கிளியோபாட்ரா ஜூலியஸ் சீசரிடம் நெருங்கி பழகும் போது ஜூலியஸ் சீசருக்கு வயது 52 கிளியோபாட்ராவுக்கு 23 வயதுதான். ஜூலியஸ் சீசர் மூலமாக கிளியோபாட்ராவுக்கு சீசரியன் என்ற மகன் பிறந்தான்.
7. தன்னுடைய தினசரி உணவில் விஷம் கலந்து இருக்கிறதா என தெரிந்துகொள்ள ஒரு அடிமையை வைத்து அவள் முதலில் சாப்பிட்ட பிறகு தான் அதை கிளியோபாட்ரா சாப்பிடுவாராம்.
8. ஜூலியஸ் சீசர் குறுங்கத்தியால் 23 இடங்களில் குத்தி கொல்லப்பட்டார். இதை உறுதி செய்தவர் மருத்துவர்
அண்டிஸ்டியஸ். முதலில் குத்தியவர் சிம்பர் என்ற உறுப்பினர். ஜூலியஸ் சீசர் இறந்த பிறகு கிளியோபாட்ரா மனம் கொதித்து போய் ரோமில் இருந்து வெளியேறினார்.
9. எகிப்தியன் கோப்ரா வகை சேர்ந்த கொடிய விஷம் உள்ள நஜா வகை பாம்பை தன்னுடைய மார்பின் மீது கடிக்க விட்டு இறந்து போனால் என்பது சொல்லப்படும் செய்தி.
இப்படி கிளியோபாட்ரா என்ற மாபெரும் பேரழகியின் வாழ்க்கையை கூறுவதாக அமைந்திருக்கிறது இந்த புத்தகம். மிக அரிய தகவல்களை இந்த நூல் நமக்கு வழங்குகிறது. கிளியோபாட்ராவை பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள எலிசபெத் டெய்லர் 1963 ல் நடித்த கிளியோபாட்ரா படம் யூடியூபில் நமக்கு கிடைக்கிறது.
எல்லா வரலாறுகளும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தை வழங்குகின்றன. கிளியோபாட்ராவும் அதற்கு விதிவிலக்கல்ல.
நூல் : கிளியோபாட்ரா
ஆசிரியர்: முகில்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.175/-
அன்புடன் ,
ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்
திங்கள், 11 நவம்பர், 2019
முன்னோடி - நூல் அறிமுகம்
சமீபத்தில் படித்து முடித்திருப்பது கலில் ஜிப்ரான் அவர்களின் முன்னோடி என்ற புத்தகம். தமிழில் மொழிபெயர்த்து இருப்பது கவிஞர் இளவல் ஹரிஹரன். அருமையான கவிதைகள் மற்றும் குட்டி குட்டி கதைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. படிப்பதற்கு மிகவும் அலாதியான புத்தகம். இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது உங்களுக்குள்ளேயே ஒரு கவிதை எழுதும் திறன் மிகச் சாதாரணமாக வந்து விடும், மனம் மிகுந்த அமைதியையும் தனிமையையும் தேடும்.
கலில் ஜிப்ரான் கவிதைகளை உங்களால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்றால் நிச்சயமாக முடியும். கவிதைகளின் ஜீவன் உங்கள் உயிரோடு கலந்து மிகுந்த மன அமைதியை ஏற்படுத்தவல்ல வார்த்தைகள் கதையிலும் கவிதையிலும் நிறைந்திருக்கிறது .
மிகுந்த தீர்க்கதரிசனமான வார்த்தைகளை மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி எழுத்தின் தரம் மாறாமல் கவிதைகளின் சாரம் குறையாமல் ஒரு அருமையான மொழிபெயர்ப்பை கவிஞர் இளவல் ஹரிஹரன் தந்திருக்கிறார். கவிதைகளை முழுமையாக உள்வாங்காமல் இத்தகைய வார்த்தைகள் வந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை.
மனித வாழ்வின் எதார்த்தத்தை இந்த நூல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மனிதனின் ஆசை, பொறாமை, வஞ்சம், கோபம், வாழ்வில் நிலையில்லாத தன்மை இப்படி பல்வேறு தலைப்புகளில் கதைகளும் கவிதைகளும் இருக்கிறது. கலில் ஜிப்ரான் எழுத்துலகின் ஒரு தீர்க்கதரிசி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நிச்சயமாக இந்த புத்தகத்தின் தலைப்பு போல் அவர் நமக்கு முன்னோடியாக தான் இருக்கிறார்.
நூல் : முன்னோடி
ஆசிரியர் : கலில் ஜிப்ரான்
தமிழில் : கவிஞர் இளவல் ஹரிஹரன்
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
விலை : ரூ. 40
திங்கள், 4 நவம்பர், 2019
பாரதி நினைவுகள் - நூல் அறிமுகம்
சனி, 2 நவம்பர், 2019
இவான் - நூல் விமர்சனம்
செவ்வாய், 22 அக்டோபர், 2019
தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்
திங்கள், 21 அக்டோபர், 2019
எல்லோரிடமும் ஒரு கதை
"எல்லோரிடமும் ஒரு கதை" ஆங்கிலத்தில் சவிதா ஷர்மா எழுதிய நாவலை தமிழில் மாலதி கிருஷ்ணன் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கதையில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு நம் உணர்வுகளை கட்டிப் போட்டிருக்கிறார் சவி சர்மா அவர்கள். இந்த நூறு அறிமுகமாகி அறிமுகமாகி 100 நாட்களில் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் தாண்டி விற்பனையில் சாதனை புரிந்திருக்கிறது.
ஒரு பெண் எழுத்தாளராக விரும்புகிறாள், அவளுக்கு கதை கிடைக்கவில்லை அந்த சமயத்தில் காபி கபேவில் ஒரு இளைஞனை சந்திக்கிறாள் அவனை கொண்டு ஒரு கதைக்கரு அவளுக்கு கிடைக்கிறது அவனோடு பயணிக்கிறாள், அவன் பயணம் செய்வதையே பெரிதும் விரும்புகிறான் அதைப்பற்றி எழுத நினைக்கிறார் நினைக்கிறார், இவளுக்கு அவன்மீது தன்னை அறியாமல் காதல் பிறக்கிறது அவனுக்கும் இவள் மீது காதல் பிறக்கிறது இருந்தாலும் இவளை விட்டுவிட்டு அவன் பயணம் செய்வதையே விரும்புகிறான். திரும்பவும் இவர்கள் பார்த்துக் கொண்டார்களா கொண்டார்களா என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமான முடிச்சுகளோடு கதையை முடிக்கிறார் சவி ஷர்மா.
மொழியாக்கம் செய்ததில் மாலதி கிருஷ்ணன் அவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த புத்தகத்தில் இருந்து இருந்து சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் அடைகிறேன் மகிழ்ச்சி அடைகிறேன் அடைகிறேன்.
1. மக்களுக்கு கதைகள் தேவை.காதலின், நம்பிக்கையின், வாழ்க்கைப் போராட்டத்தின், ஞானத்தின், சில சமயம் வலியின் கதைகள் தேவை.
2. ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒரு கதை உண்டு உண்டு. ஒவ்வொருவரும் ஒரு எழுத்தாளர். சில புத்தகங்களில் எழுதப்படும், சில மனதிற்குள் அடைந்துவிடும்.
3. காதல் சக்தி வாய்ந்தது. நாம் கற்பனையில் செய்ய முடியும் முடியும் முடியும் என்று எண்ண முடியாததையும் முடியாததையும் செய்ய வைக்கும்.
4. எல்லா நம்பிக்கைகளும் விட்டுப் போனாலும், சில பந்தங்களை உடைக்க முடியாது, நாம் யார் என்னவாக இருந்தோம், என்னவாக ஆக கூடும் என்பதை எடுத்துக்காட்டும். அனைத்திற்கும் நடுவில் இயல்பானது நம்மை வந்தடையும்.
5. ஒரு ஆண் செய்யக் கூடியவற்றில் மோசமானது ஒரு பெண்ணை தன் மேல் மேல் தன் மேல் மேல் காதல் கொள்ள வைத்து அவளை பதிலுக்கு காதலிக்காமல் இருப்பதுதான்.
இப்படி பல்வேறு அருமையான சொற்றொடர்களை அமைத்திருக்கிறார் சவி ஷர்மா இப்படிப்பட்ட வரிகளை அருமையாக மொழிபெயர்த்த மாலதி கிருஷ்ணன் அவர்களுக்கும் நம்முடைய நன்றியை சொல்லித்தான் ஆக வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும்போது இந்த கதை உங்களை சுற்றிக்கொள்ளும் அது ஒரு கதை சொல்லும். ஆம் சவி ஷர்மா சொல்வதைப்போல எல்லோரிடமும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.
நூல் : எல்லோரிடமும் ஒரு கதை
ஆசிரியர்: சவி ஷர்மா
தமிழில்: மாலதி கிருஷ்ணன்
பதிப்பகம்: வெஸ்ட்லேண்ட்
விலை: 150
பக்கம்: 157
சனி, 19 அக்டோபர், 2019
மரங்களும் மனிதர்களும்
திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் மரங்களும் மனிதர்களும் என்ற நூலில் மரத்தின் தலைப்புகளில் 10 சிறுகதைகளை எழுதியிருக்கிறார் ஒவ்வொன்றும் மரத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவினை குறிப்பதாக இருக்கிறது.
கதையின் தலைப்புகளே வேப்பமரம், புளியமரம், பலாமரம், முருங்கை மரம், ஆலமரம், அரசமரம்என்று மரங்களின் பெயர்கள் வரிசையாக இருக்கிறது. மரங்களோடு நமக்கு இருக்கும் உறவுகளை அவற்றுடன் நாம் பகிர்ந்துகொள்ளும் உணர்வுகளை சார்ந்து கதைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெரிய மொழிநடை இல்லையென்றாலும் நம்மால் கதையோடு சிறிதேனும் பயணிக்க முடிவதாக நடை அமைந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
மரங்களோடு நமக்கு இருக்கும் உறவு என்பது ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. மாறாக நாம் இப்போது வாழும் காலத்தில் மரங்கள் மீதான விழிப்புணர்வு சற்று குறைந்து இருக்கிறது. இதை எடுத்துக்காட்டும் விதமாக இரண்டு மூன்று கதைகள் அமைந்திருக்கிறது. அதிலிருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு படிப்பினையை நமக்கு வழங்குவதாக நமக்கு வழங்குவதாக இருக்கிறது, இருந்தாலும் கதை சொல்லப்பட்ட விதத்தில் சற்று தொய்வு இருப்பதாகவே தோன்றுகிறது.
மரத்தையும் குழந்தைகளையும் நாம் வேறுவேறாக நினைப்பதில்லை என்பதை என்பதை ஒவ்வொரு கதையுமே எடுத்துச் சொல்கிறது. வாசிப்பதற்கு மிக எளிதான புத்தகம் புத்தகம். புதிய வாசகர்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல புத்தகம் இது. இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி என்னவெனில் மரம் இல்லையேல் மனிதர்கள் இல்லை மரங்களை நம்மை விட வேறு யாரும் பார்த்துக் கொள்ளவும் முடியாது பாதுகாக்கவும் முடியாது என்பதை புரிந்து கொண்டால் மரங்களும் வளரும் நல்ல மனங்களும் வளரும்!!!
நூல் : மரங்களும் மனிதர்களும்
ஆசிரியர்: சாந்தகுமாரி சிவகடாட்சம் பதிப்பகம் : சாந்தி சிவா பப்ளிகேஷன்
விலை :100 ரூபாய்
செவ்வாய், 26 பிப்ரவரி, 2019
முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"
"முத்தன் பள்ளம்" -
"கண்ணீரும் கனவுகளும்"
இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது வெளிப்படையாக சொல்லப்பட்ட புனையப்படாத ஒரு ஊரின் உண்மைக் கதை அல்லது உண்மை நிலை இப்படி எப்படி வேண்டுமானாலும் இதற்கு பெயர் வைத்துக்கொள்ளலாம்.
ஒரு தேர்ந்த வரலாற்று அறிஞர் ஒரு அரசை பற்றியோ, ஒரு சமுகத்தை பற்றியோ, ஒரு அரசனைப் பற்றியோ, வாழ்ந்த மக்களை பற்றியோ, இயற்கை சூழல்கள் பற்றியோ, இப்படி எத்தனை பற்றிகளை பற்றி விவரிப்பாரோ அத்தனை பற்றிகளைப் பற்றியும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து அலசி ஆராய்ந்து அரங்கேற்றியிருக்கிறார்.
கந்தர்வக்கோட்டை காந்தி சிலை முக்கத்தில் இருந்து போக்கிமான் பூச்சி விளையாட்டின் மூலம் புறப்படும் பயணம் முத்தன் பள்ளத்தை பற்றி மட்டும் சொல்வதற்காக அல்ல முத்தன் பள்ளத்தின் மூலமாக அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் அதன் வரலாறுகளை சிறப்பம்சங்களை குறைகளை சொல்வதாக பகுதி 1 அமைந்திருக்கிறது. பகுதி ஒன்னு முறையே அக்கச்சிபட்டி, மல்லிகை நத்தம், பெரியகோட்டை, ஒட்டப்பாலம், சொக்கம் பேட்டை, வேலாடிப்பட்டி, மஞ்சம்பட்டி, வெள்ளாள விடுதி, கல்லாக்கோட்டை இப்படியே இறுதியாக முத்தன் பள்ளம் நோக்கி போக்கிமான் பூச்சி சொல்ல சொல்ல எழுத்தாளர் செல்வதாக கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி போக்கிமான் பூச்சி ஒவ்வொரு ஊருக்குள்ளும் எழுத்தாளரை கொண்டு செல்லும்போது அவர் கண்ணில் தென்படும் அத்தனை பதாகைகளும் ஊரை மட்டுமல்ல நாவலில் பெரும்பகுதியை மறைத்துக் கொண்டு விட்டது என்றே எனக்குப் படுகிறது.
போக்கிமான் பூச்சி, பதாகைகளை காட்டாமல் வேறு எதையாவது அடையாளமாக காட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இருப்பினும் மேற்கோள் காட்டி இருக்கும் அத்தனை பதாகைகளும் தற்கால அரசியலை, அரசியல்வாதிகளை, நடிகர்களை, சுயநலவாதிகளை, சாதிகளை, கட்சிகளை பதம் பார்த்து தான் செல்கிறது. இந்த ஒன்றிற்காக பதாகைகளையும் போக்கிமான் பூச்சியயையும் வரவேற்கலாம்.
அடுத்ததாக பகுதி இரண்டில் போக்கிமான் பூச்சி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் முத்தன் பள்ளம் இருக்கிறது. அஜித் படத்தில் வரும் அத்திப்பட்டியை விட அங்கு வாழும் மக்களின் நிலை மிக மோசமாக மோசத்திலும் மோசமான ஒன்றாக இருப்பது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. கவலையளிக்கிறது.
முத்தன் பள்ளம் ஏதோ திடீரென்று விண்வெளியில் இருந்து பறந்து வந்து அவதரித்த ஊர் அல்ல. அதன் வரலாறு மிகப்பெரியது. அதை எழுத்தாளர் மிக கவனமாக கையாண்டு இருக்கிறார். முத்தன் பள்ளம் உருவாக அதன் பின்னால் இருக்கும் பாட்டன் , அவரின் முந்தைய வரலாறு, பாட்டனின் பாட்டன் வரலாறு என்று அத்தனைக்குள்ளும் பயணித்து ஒரு வரலாற்றுப் பெட்டகமாக குறிப்பாக முத்தரையர்கள், பல்லவர்கள், பல்லவராயர்கள், சோழர்கள், நாயக்கர்கள் என அத்தனை அரசர்களும் முத்தன் பள்ளம் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இதில் முத்திரையர்களின் வீரம் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது புதுக்கோட்டை சமஸ்தானத்தை பற்றியும் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் முத்தன் பள்ளம் உருவாக எவ்வாறான உதவிகளை செய்தார் என்றும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் பாட்டனின் உழைப்பு, முத்தாயியின் மீது அவருக்கு இருந்த காதல் மிக லாவகமாக சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையாகவே அந்த ஒரே இரவில் காதல் வந்ததா என்று கொஞ்சம் நம்பத்தான் முடியவில்லை இருந்தாலும் அந்த பத்தாவது பகுதி மிகுந்த சுவாரசியமாக இருந்தது.
இறுதியாக போக்கிமான் பூச்சி முத்தன் பள்ளத்தை நோக்கி விரைந்து இறுதியாக ஊரின் கடைக்கோடியில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்து இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு மனிதனின் தொடைக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது மிகுந்த வேதனை தான். இறுதிப்பக்கங்கள் என்னை மிகவும் இதயம் நொறுங்க வைத்துவிட்டது.
இறுதியாக சமகாலத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் முத்தன் பள்ளத்தின் மீதும் அங்கு வாழும் மக்களின் மீதும் அவர்கள் படும் துயரத்தின் மீதும் கொஞ்சமேனும் இரக்கப்பட வேண்டும் இல்லையேல் அவர்கள் ஆட்சியிலிருந்து இறக்கப்படவேண்டும்.
ஒற்றை வரியில் இந்த முத்தன் பள்ளம் நாவலைப் பற்றி சொன்னால் போக்கிமான் பூச்சியின் மூலம் அண்டனூர் சுரா என்ற Common மேன் கண்டுபிடித்த பழங்கால வரலாற்று சொர்க்கபூமி.
#இந்த_ஆண்டில்_இதுவரை_5
#புத்தக_விமர்சனம்
திங்கள், 25 பிப்ரவரி, 2019
மரப்பசு - புன்சிரிப்பு
இறுதியாக 20 நாட்களுக்கு பிறகு மரப்பசு படித்து முடித்துவிட்டேன். தி.ஜா அவர்கள் இந்த கதையை ஒவ்வொரு புள்ளியிலும் மெருகேற்றியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த நாவலை படிக்க எனக்கு பிடிக்கவில்லை ஏனென்றால் ஒவ்வொரு பத்து பக்கத்தை தாண்டும்போதும் கொஞ்சம் சலிப்போடு கடந்து வந்தேன். காரணம் பேசப்பட்ட கதை என்பது நான் சந்திக்காத சந்திக்க விரும்பாத ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இறுதியாக இந்த கதை எனக்குள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
பெண்களுக்கான சுதந்திரம் என்பது இந்த நாட்டில் இருக்கிறதா என்ற கேள்வியை வைத்தால் நிச்சயமாக அது ஒரு ஹைபோதெடிக்கள். ஒரு பெண் இந்த சமூகத்தில் இன்னும் குறிப்பாக இந்திய திருநாட்டில் சுய சிந்தனையின் படி வாழ விரும்பினால் அவளுக்கு பெயர் வேறு என்று இந்த சமூகம் அர்த்தம் சொல்லி வைத்திருக்கிறது. அந்த நிலையில் ஒரு பெண் சுய சிந்தனையோடு வாழ முடிவெடுத்தால் என்னென்னவெல்லாம் நிகழுமோ அதுவே இந்த நாவல்.
மாறாக என்னுடைய சிந்தனையில் இந்த கதையில் வரும் அம்மணி போன்றே நாட்டிலுள்ள அனைத்து பெண்களும் அப்படித்தான் இருப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.
ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்பச் சூழல் என்பது வேறு சமூகம் என்பது வேறு.
அப்படி இருக்க ஏன் இப்படி ஒரு நாவலை செய்திருக்க வேண்டுமென்று யோசித்தால் அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நாவல் சமூகத்தில் தேவைப்பட்டிருக்குமோ என்னவோ? இந்த காலகட்டத்திற்கு இந்த நாவல் தேவையா என்றால் மூட நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு பெண்களை பொருளாக எண்ணம் கொள்ளும் ஆண்களுக்கு இந்த புத்தகம் நிச்சயம் தேவைப்படும்.
இதையெல்லாம் மீறி எனக்கு அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் போன்ற பாலச்சந்தர் படங்கள் இந்த நாவலை படிக்கும் போது என் கண்முன்னே ஓடியது. காரணம் பாலச்சந்தர் தன் படங்களில் ஒவ்வொரு சீனுக்கும் அப்படி ஒரு உழைப்பைகொடுத்திருப்பார். பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் பேசும் பாலச்சந்தர் கதாபாத்திரங்கள் போல ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த நாவலிலும் பேசுவது போல் எனக்கு தோன்றிற்று. பாலச்சந்தர் படம் போன்றே இந்த நாவலை பிளாக் அண்ட் ஒயிட்டில் காட்சிப்படுத்திக்கொண்டேன்.
ஒவ்வொரு பக்கத்திலும் வசனநடை, எதுகை மோனை கொண்ட சொற்கள், ஏராளமான கற்பனை நிறைந்த உவமைகள், நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொற்கள். அப்பப்பா!! தி.ஜா, தி.ஜாதான். கோபாலி, அம்மணி, மரகதம், பச்சையப்பன், ப்ரூஸ், கண்டு மாமா, அம்மணி பெரியம்மா, பெரியப்பா இப்படி ஒவ்வொன்றும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தை ஒரு வாசகனுக்கு கடத்திவிட முடியும் என்றால் நிச்சயமாக அந்த நாவல் நல்ல நாவல் தானே.
தி.ஜா போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு, ஜாம்பவான்களுக்கு விமர்சனம் சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா என்றால் தெரியவில்லை. மாறாக ஒரு வாசகனாக ஒரு எழுத்தாளன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கதையும் விமர்சிக்கப்படும் போது அந்த நாவல் அந்தக் கதை இன்னும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் சென்றடையும் என்றால் நான் செய்யும் விமர்சனம் தகுதிக்குரியதே!!!
பல்வேறு பதிப்பகங்கள் இந்த நாவலை பதிப்பித்திருக்கிறது. காலச்சுவட்டில் கொஞ்சம் நல்ல பிரண்டாக இருப்பதைப் பார்த்தேன் வாங்கிப் படியுங்கள்.
ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு பெண்ணுக்கு உங்களால் எந்த வகையிலும் துன்பம் நேராமல் இருந்தால், கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியை அவர்களுக்கு உங்களால் கொடுக்க முடியுமென்றால், அவர்களுடைய சுதந்திரத்திற்கு எவ்விதத்திலும் நீங்கள் தடையாக இல்லாமல் இருந்தால் நிச்சயம் ஒரு மரப்பசு தேவையில்லை.
ஒற்றை வரியில் மரப்பசு பற்றி சொல்ல வேண்டும் என்றால் அம்மணி போன்றே ஒரு புன்சிரிப்போடு இந்த விமர்சனத்தை முடிக்கிறேன்.
#இந்த_ஆண்டில்_இதுவரை_4
#விமர்சனம்
சனி, 2 பிப்ரவரி, 2019
பெயரற்றது
திங்கள், 21 ஜனவரி, 2019
விருந்துக்கு பிறகான வெற்றிலை பாக்கு
சின்னச் சின்ன கதைகளாக எடிசனின் வாழ்க்கையில் நடந்தவற்றை சொல்லும் 15 கதைகள் அடங்கியுள்ளது. சிறுவயது குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம். காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்களும் தேர்ந்தெடுத்து சொல்லலாம். அறிவியல் ஆசிரியர்கள் புதிய பாடத்தை துவங்கும்போது இந்த கதைகளில் ஒன்றை சொல்லி ஆயத்தப்படுத்தலாம்.
அற்புதமான புத்தகம். மலையாளத்தில் பி.பி.கே. பொதுவால் எழுதியிருக்கும் புத்தகம். தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடு. விலை ரூ.50/-
#புத்தக_விமர்சனம்
#இந்த_ஆண்டில்_வாசித்தது_இதுவரை_2
செவ்வாய், 28 நவம்பர், 2017
PADMAN
ஜனவரி 26 அன்று அக்க்ஷய் குமார் நடிப்பில் "PADMAN" என்றொரு திரைப்படம் வெளிவர இருக்கிறது... நம்முடைய கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமிகு . அருணாசலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டிருக்கிறது...
யார் இந்த அருணாச்சலம் முருகானந்தம்?
இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1998 ஆம் வருடம் சாந்தி என்பவரை மணக்கிறார். அவருடைய மனைவி மாதவிடாய் காலங்களில் பட்ட சிரமங்களை பார்க்கிறார். சானிட்டரி நாப்கின்களை தருவிக்கிறார். பல முன்னணி நிறுவனங்களின் நாப்கின்கள் விலை அதிகமாக இருக்கிறது. எனவே தானே அதற்கான வழியை தேடுகிறார்.
குறைந்த விலையில் தயாரிக்கக்கூடிய நாப்கின் இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார்... இன்று நம் நாட்டிலும் பிற நாடுகளுக்கும் அந்த இயந்திரத்தை செய்து கொடுக்கிறார்... இவை அனைத்தும் சாத்தியமாக அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பது படமாக வரவிருக்கிறது..
2016 ஆவது வருடம் இந்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவம் செய்திருக்கிறது... Times நாளிதழ் வெளியிட்ட 100 influence நபர்களில் இவரும் ஒருவர்...
அருணாசலம் முருகானந்தம், அக்ஷய் குமார், இயக்குனர் பல்கி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி!!!
https://en.m.wikipedia.org/wiki/Arunachalam_Muruganantham
#காத்திருக்கிறேன்
திங்கள், 6 நவம்பர், 2017
புங்கன் மரம் சிறப்புகள்
புங்கன் மரம்
மருத்துவப்பயன்கள்-: புங்கன் அழுகலகற்றி (ANTI-SEPTIC) செய்கையுடன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது.
புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும்.
புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம்.
புங்கன் இலையை ஆரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம்.
புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.
புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும்.
நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம்.
புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.
சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும்.
புங்கிலிருந்து கிடைக்கும் பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.
புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.
புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும்.
புங்கன் புளி,மா,வேம்பு, கறிவேம்பு ஆகியவற்றின் இலை வகைக்கு 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு வகைக்கு 3 கிராம் 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 2 முடக்கு வீதம் குடித்து வர மாந்தம், உள் சூடு, பித்த சுரம் ஆகியவை போகும். குழந்தைகளுக்கு 30 மி.லி. வீதம் தினம் 1 வேளைகொடுக்கலாம்.
பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மது மேகம் மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும்.
புங்கம் பூ, புளியம் பூ, பூண்டு, சீரகம், நன்னாரி வேர், வெப்பாலை அரிசி, வசம்பு, வகைக்கு 50 கிராம் இடித்து 1 லிட்டர் பசும்பாலில் அரைத்துக் கலக்கி 1 லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடிகட்டி அரை முதல் 1 தேக்கரண்டி வரை காலை மட்டும் 1 மண்டலம் கொள்ள சகலக் கரப்பானும், தோல் நோயும் தீரும்.
புங்க வேர், சிற்றாமணுக்கு வேர், சங்கன் வேர் வகைக்கு 40 கிராம் பூண்டுச்சாறு அரை லிட்டர், விளக்கெண்ணெய் 2 லிட்டர் கடுகு ரோகினி 10 கிராம் வாதரசு(வாதமடக்கி) வேர்ப் பட்டை 20 கிராம் இடித்துப் போட்டு 15 நாள் வெயில் புடம் வைத்துக் காலை மட்டும் 1 தேக்கரண்டி கொடுத்து வர எவ்வித சரும ரோகமும், கரப்பான், சொறி, சிரங்கு, புண், புரைகளும் தீரும்
#நன்றி_யோகா_சார்
ஞாயிறு, 15 அக்டோபர், 2017
விதைக்KALAM 112
அய்யா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று விதைக்கலாமின் 112 ஆவது வார நிகழ்வில் நரிமேடு, புதுகையில் 5 கன்றுகள் நடப்பட்டது...
வெள்ளி, 13 அக்டோபர், 2017
ஜெவிச்சுட்டோம்
இதில் அனுஷா கலந்துகொண்ட 1500மீ போட்டியில் மாநில அளவில் முதலிடத்திலும் 3000மீ போட்டியில் 3 ஆவது இடமும் பெற்று தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்...
செல்வி . வனிதா 3000மீ போட்டியில் பங்குபெற்று 5 ஆவது இடம்பிடித்தார்...
பள்ளிக்கும் நம் புதுகைக்கும் பெருமை சேர்த்த இரு மாணவிகளையும் பாராட்டி பெருமை அடைவதில் மகிழ்கிறோம்...
இதற்கு பயிற்சியளித்த ஆசிரியர்களை பாராட்டுகிறோம்...
#மகிழ்ச்சி
செவ்வாய், 25 ஏப்ரல், 2017
சுட்டி
நூல் விமர்சனம் - அஞ்ஞாடி
அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...
-
சற்றுமுன் முகநூலில் "சுடச்சுட ஒரு விழிப்புணர்வு பதிவு" என்று பதிவிட்டேன் . மக்களிமிருந்து அமோக வரவேற்பு ,என்னடா என்று பா...
-
வீதி இலக்கியக் களம் - புதுக்கோட்டை கடந்த ஞாயிறு (20-06-2016) அன்று நடைபெற்ற வீதி இலக்கியக் கூட்டத்தில் நான் வாசித்த கவிதை :...
-
அனைவருக்கும் வணக்கங்கனா..... ஏதோ எனக்கு தெரிஞ்ச கோயமுத்தூர் பாசைல பேசுரேனுங்க... வெர்சனு 6.0- னாக்க வே...




