சமீபத்தில் படித்து முடித்திருக்கும் புத்தகம் திருமிகு சயந்தன் அவர்கள் எழுதிய "பெயரற்றது". இதில் மொத்தம் 8 சிறுகதையில் இருக்கின்றன. அனைத்து சிறுகதைகளுமே ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வின் முரண்களையும் அவர்கள் படும் துன்பத்தையும் வேதனைகளையும் சொல்வதாக இருக்கிறது.
இன்னும் கூடுதலாக ஈழத்தின் நடையிலேயே இருப்பது புத்தகத்திற்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமைகிறது. மாறாக சில சிறுகதைகளில் சொல்லப்படக்கூடிய வார்த்தைகள் எனக்கு கொஞ்சம் புரியாமல் இருந்தது அது கதையை விட்டு என்னை வெளியே நடத்திச் சென்றுவிட்டது.
இருக்கும் 8 கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதைகள் சின்ராசு மாமா கதை மற்றும் 90 சுவிஸ் பிராங்குகள் இரண்டு கதைகளுமே சிறிது நேரம் என்னை மற்ற வேலைகளை செய்ய விடாமல் செய்தது அதிலும் சின்ராசு மாமா கதையில் வரும் அந்த குழந்தையின் சடலம் கடலில் மிதப்பது போன்ற ஒரு சொல்லாடலில் என்னையும் மீறி கண்ணீர் வடித்தேன்.
இதில் ஈழத்தில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்க்கை அங்கு விடுதலைப்புலிகளின் செயல்கள் அங்கே இருக்கக்கூடிய ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அது அப்பாவி மக்களை எப்படி அங்கிருந்து புலம் பெயர செய்கிறது என்பதை ஒவ்வொரு கதையிலும் மிகவும் விரிவாகவும் அதேசமயம் மீண்டும் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிவந்து விடமாட்டோமா என்ற ஏக்கத்தை அழுத்தமாக எழுத்தாளர் கதைகளில் படைத்துள்ளார்.
இன்னொரு முறை வாசித்தால் மட்டுமே எனக்கு மேலும் இதிலிருந்து கூடிய கதைகள் விளங்கும் என்று நினைக்கிறேன். வெளியிட்டு இருப்பது தமிழினி பதிப்பகம் விலை ரூபாய் 90.
இந்த புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய Devatha Tamil அம்மாவிற்கு மகனின் நன்றிகள்...
விமர்சனம் மனதை கனக்க வைத்தது நண்பரே...
பதிலளிநீக்குநல்லதொரு அறிமுகம்.
பதிலளிநீக்கு