வியாழன், 5 டிசம்பர், 2019

ஜோன் ஆஃப் ஆர்க் - நூல் விமர்சனம்

*ஜோன் எனும் பணிப்பெண்*

பிரான்ஸ் நாட்டில் தொம்ரெமி என்ற சாதாரண கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து  பிரிட்டிஷ் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஒற்றை ஆளாக சென்று வென்று சார்லஸ் மன்னனுக்கு முடிசூட்டிய வீரப் பெண்மணி தான் இந்த நூலின் தலைவி *ஜோன் ஆஃப் ஆர்க் அவளது மொழியில் சொல்லப்போனால் ஜோன் எனும் பணிப்பெண்*.

இந்த நூல் நம்முள்ளே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக ஒரு விஷயத்தை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறேன். ஒரு 16 வயதே ஆன சிறுமி மிகப்பெரிய படையை ஒற்றை ஆளாக வழிநடத்தி செல்வது என்பது அவள் கொண்ட மனோதிடத்தினால் மட்டுமே இருக்கலாமே அன்றி ஜோன் சொல்வதை போல அது கடவுளின் சித்தம் என்றெல்லாம் என்னால் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. 

இது ஒருபுறமிருக்க இந்த காலத்திலேயே பெண்கள் எந்த சாதனை செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் ஆண் சமுதாயம் இருக்கும்போது அன்றைய காலகட்டத்தில் அதுவும் 1420 களில் ஒரு பெண் தனியாக இத்தனை பெரிய போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி கொள்வது என்பதெல்லாம் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஆண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாமல் போனதே ஜோன் எனும் பெரிய வீரமங்கையை நாம் இழந்ததற்கு காரணமாக இருக்க முடியும்.

இத்தனை பெரிய சிந்தனை நமக்கு எழும் அளவிற்கு இந்த நூலின் ஆசிரியர் *ரஞ்சனி நாராயணன்* ஜோன் ஆஃப் ஆர்க் பற்றிய ஒவ்வொரு குறிப்புகளையும் தேடித்தேடி எடுத்து  புத்தகத்திற்குள் வைத்து இந்த புத்தகத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம் ஜோன் ஆஃப் ஆர்க் விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி பதில் சொல்லும் விதம் அத்தனை அழகானது. ஒரு 19 வயது பெண் இப்படி எல்லாம் பதில் சொல்வாளா என்று ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. இறுதியாக அத்தனை தூரமான தண்டனையை  அந்த சிறு வயதுப் பெண்ணிற்கு அன்றைய கிறிஸ்தவ போதகர்கள் வழங்கியது வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கொடூரமான தீர்ப்பு. அவள் கழுவிலேற்றி தீக்கிரையாக்கப்படும் அந்த வரிகளை புத்தகத்தில் கடக்கும் போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வருகிறது. அதோடு மதத்தின் மீதும் அதன் மூடநம்பிக்கைகளின் மீதும் பெருத்த கோபமும் வருகிறது. 

*ஜோன் பணிப்பெண் போர்வையில் வந்த புனிதப் பெண் என்பதை ரஞ்சனி நாராயணன் தன்னுடைய எழுத்தின் மூலம் நமக்கு புரிய வைக்கிறார்.* 

நூல் : ஜோன் ஆஃப் ஆர்க்
ஆசிரியர் : ரஞ்சனி நாராயணன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ. 225/-

10 கருத்துகள்:

  1. நம் வலைப்பதிவர் ரஞ்சனி அம்மாவுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. இந்தப் புத்தகம் எழுதும்போது அவருக்கு ஏகப்பட்ட தடங்கல்கள்.   அப்படியும் வெற்றிகரமாக முடித்து விட்டார்.   

    பதிலளிநீக்கு
  3. எனது புத்தகம் பற்றிய விமரிசனம் எழுதியதற்கு முதலில் என் நன்றி. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டேன் இந்தப் புத்தகத்தை முடிக்க. அந்த காலத்தில் எழுதப்பட்ட ஒரு ஆங்கில நூலை பதிப்பாளர் எனக்கு அனுப்பியிருந்தார். அதைப் படித்து ஒன்றும் புரியாமல் தடுமாறிப் போனேன். காரணம் இதுவரை அறிந்திராத பிரான்ஸ் ஆங்கிலப் போர்கள் பற்றிய நீண்ட புத்தகம் அது. நீண்ட நீண்ட நீண்ட வாக்கியங்கள். ஆசிரியர் ஜோனை முன் நிறுத்தி இந்தப் போர்களை பற்றி எழுதியிருந்தார். அதனால் ஒரு வரியைக்கூட விடமுடியவில்லை. எப்படி எழுதப் போகிறேன் என்று மலைத்துப் போனேன். சிக்கல்களும் அதிகம். இணையத்தில் தேடித்தேடி கிடைத்த விஷயங்களையும் சேர்த்து எழுதி முடித்தேன். உங்கள் கருத்துரை நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் காணாமல் போகச் செய்துவிட்டது.திரு ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல வீட்டிலும் பல சோதனைகள். நல்லபடியாக எழுதி முடித்து உங்கள் பாராட்டையும் பெற்றது மன நிறைவைத் தருகிறது.
    நன்றி திரு ஸ்ரீ மலையப்பன்.

    பதிலளிநீக்கு
  4. ஜோன் ஆஃப் ஆர்க் பற்றி மதிப்புக்குரிய சுப வீரபாண்டியன் சார் மூலமாக அறிந்திருக்கிறேன். மேலும் முழுமையாக அறிந்துகொள்ள முயற்சிப்பேன் ஆசிரியர் ரஞ்சனி நாராயணன். அவர்களுக்கும் கிழக்கு பதிப்பகததற்கும் நன்றிகள் பல... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...