ஒரு வாரத்திற்குள் ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்று தோன்றி ஒரு வாரத்திற்குள் அந்த புத்தகத்தை வரவழைத்து ஒரு வாரத்திற்குள் அதைப் படித்து முடித்திருக்கிறேன். நிச்சயமாகவே எனக்கு இது ஒரு புதிய அனுபவம்.
அப்படி என்ன புத்தகம்?
அய்யப்பமாதவன் அவர்கள் எழுதிய "பாலும் மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள்". மொத்தமாக 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இதன் முதல் பதிப்பு 2009- இல் வெளிவந்திருக்கிறது.
புத்தகத்தில் உள்ள அனைத்து சிறுகதைகளும் மிகவும் காத்திரமான கருத்துகளை எடுத்துக் கூறுபவை. ஒரு கதையினை படித்து முடித்த பிறகு அடுத்த கதைக்கு போவதற்கு நிறைய அவகாசம் தேவைப்படுகிறது. இவருடைய கதைகளை படிக்கும் போது மனிதர்களை விட விலங்குகளை பச்சிளம் குழந்தைகள் போல் ஏன் நாம் பேண வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது. அதில் இறுதி கதையான ரோஸி என்னை மிகவும் கவர்ந்தது.
ஒரு திறமையான மனிதனை இந்த உலகம் பாடாய் படுத்துவதில் அவன் எவ்வாறு தடம் மாறுகிறான், ஒருத்தி எவ்வளவு அழகாக இருந்தாலும் ஒரு சிறு குறை அவளது வாழ்வினை எவ்வாறு புரட்டிப்போடுகிறது, பூனைகளை மட்டுமே துணையாக்கி கொண்டிருக்கும் ஒருத்தியை இந்த சமூகம் பார்க்கும் விதம், ஒரு எலியால் துன்பப்படும் ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்வுகள், மனைவியிடம் ஒரு சிறு பொய் சொல்லி அதை அதை மறைப்பதற்குள் ஒரு கணவன் அல்லல்படும் விதம் என்று இவர் தொட்டிருக்கும் ஒவ்வொன்றுமே கிளாசிக் ரகம்.
நடுத்தர வர்க்கத்தின் மைண்ட் வாய்ஸ் இவருக்கு மட்டும் ரொம்ப அழுத்தமாக கேட்டிருக்கிறது.இருப்பினும் முதல் மூன்று சிறுகதைகளுக்கும் 18+ இல் உள்ளவர்கள் மட்டுமே படிக்க வேண்டியவை. என்னை பொறுத்தவரை இதை கொஞ்சம் சென்சார் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அந்த மூன்று கதைகளின் முடிவுகளும் கதைக்கு நியாயம் செய்யாமல் இல்லை. இருந்தாலும் ஒரு உச் கொட்டாமல் இருக்க முடியவில்லை.
இறுதியாக நடுத்தர மனிதர்களின் உணர்வுகளை அப்படியே படமெடுத்து , கலரூட்டி, பிரேம் போட்டு அனைவரும் பார்க்கும் படியாக மாட்டிவிட்டிருக்கிறார் அய்யப்பமாதவன் அவர்கள்... இந்த சிறுகதைகளின் வாயிலாக இன்னும் கொஞ்சம் உயிரூட்டியிருக்கிறார்.
பாலும் மீன்களையும் யாரோ ஒருவர் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்காமல் நாமும் வாங்கி கொடுக்க முன்வந்து நம்முடைய மனநிலையை தகவமைத்துக் கொள்ளும்போது மனிதம் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நூல் : பாலும் மீன்களுமே வாங்கிகொண்டிருந்தவள்.
ஆசிரியர் : அய்யப்பமாதவன்
வெளியீடு : ஜீரோ டிகிரி
விலை : ரூ.100/-
நல்லதொரு விமர்சனம் மலையப்பன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்
நீக்குவரிசையாக புத்தகங்கள் முடிக்கிறீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்கு