செவ்வாய், 22 அக்டோபர், 2019

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்

*தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு*. 

மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது . நூலை திறந்தவுடனேயே கலைஞர் அவர்களின் நூல் மதிப்புரை நம்மை வரவேற்கிறது. அவரது உரை இந்த நூலை உடனடியாக வாசிக்க தூண்டுவதாக தூண்டுவதாக அமைந்திருக்கிறது. சமூக இயக்கங்கள் மீது அவர் சொல்லிய ஒரு கருத்து கம்யூனிச இயக்கம் என்றால் இயக்கம் என்றால் அது ஏதோ திராவிட இயக்கத்திற்கு முரண்பாடானது அல்ல, அதே போல திராவிட இயக்கம் என்றால் அது கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு முரணான ஒன்றல்ல என்று சொல்லும் போதே பெரியாரோ  திராவிட இயக்கமோ இல்லாது போயிருந்தால் இந்த கருணாநிதி கம்யூனிஸ்டாக தான் இருந்திருப்பான் என்று அவர் கூறியது நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

அடுத்ததாக பேராசிரியர் அருணன் அவர்கள் ஐந்தாம் பதிபிற்கான முகவுரையில் ஒன்றை அருமையாக சொல்லிவிட்டுப் போகிறார்  "இறந்த காலம் ஆனது  முழுமையாக ஒருபோதும் இறந்து போவதில்லை.அது தனது சாரத்தை நிகழ்காலத்தில் எப்படியோ தக்கவைத்துக் கொள்கிறது. அதனாலேயே கடந்த காலத்தை சரியாக புரிந்து கொள்ளாமல்  நிகழ்காலத்தை உருப்படியாக உள்வாங்க முடியாது.இன்றைய காலத்தின் படிப்பினைகள் எதிர்காலத்திற்கான பாதையையும்  செப்பனிட்டு தருகிறது. இப்படி முக்காலமும் ஒன்றை ஒன்று தொட்டு நிற்கிறது" . அதுபோலவே பெரியாரியவாதிகள் அம்பேத்கரிய வாதிகளும் கம்யூனிசவாதிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்று சொல்கிறார் இன்றளவும் இதில் ஒன்றுபட்டிருக்கிறோமா என்ற கேள்வியை விமர்சனத்தின் வாயிலாக உங்கள் முன் வைக்கிறேன். 

முதலாவதாக அருணன் அவர்கள்  சமூக சீர்திருத்தம் என்பதற்கு என்பதற்கு வரையறையை நமக்கு தருகிறார் , "சமூக சீர்திருத்தம் என்பது அடித்தளமான பொருளியல் துறையில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது" என்கிறார்.  சமூக சீர்திருத்தத்தின் வரலாறு என்பது மனிதகுல வரலாறு என்கிறார். நம்முடைய தமிழ்நாட்டை பொருத்தளவில் சமூக சீர்திருத்தம் என்பது இன்று வரையும் கூட கூட சாதிய ஒடுக்குமுறைக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிரான செயல்பாடுகளாக தான் இருக்கிறது. 

அடுத்த அத்தியாயத்தில் சமூக மாற்றம் என்பது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது ஆங்கிலேயருக்கு நாம் அடிமைப்பட துவங்கிய காலகட்டத்தில் இங்கே இருந்த ஜமீன்தார்களும் , பெரிய நிலப்பிரபுக்களும் பஞ்சாயத்தின் பேரிலும்,  சாதி ஒடுக்குமுறைகள் பெயரிலும் மக்களை அடிமைப்படுத்தி இருந்தார்கள். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு அவர்களுக்கு நாம் என்னதான் அடிமைப்பட்டு கிடந்தாலும்  இது உள்ளூரில் நடந்த சமூக பிரச்சனைகளில் இருந்தும் இருந்தும் தமிழக மக்களே வெளியே வர உதவியாக இருந்ததாக அருணன் அவர்கள் குறிப்பிடுகிறார். 

 ஒடுக்கப்பட்ட மக்கள் மனுநீதி மூலம் எவ்வளவு இன்னல்களை சந்தித்திருக்கிறார்கள் எனும் ஆதார விளக்கங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் நமக்கு ஒன்று தெளிவாகிறது  உயர் சாதியாக தன்னை நினைத்துக்கொள்ளும் எவரும் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமைகளாக நடத்த விரும்பினார்கள் அதுமட்டுமல்லாது எந்த சாதியினராக இருந்தாலும் தன்  வீட்டு பெண்களை தங்களைவிட அடிமை நிலையில் இருக்க  வைக்கவே ஆணாதிக்க சமூகம் அனைத்து சாதியிலும் இருந்திருப்பது நமக்கு தெளிவாகிறது. 

இப்படி இருக்க 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமூக சீர்திருத்தத்திற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் கிறிஸ்தவ போதகர்கள் இவர்கள் மூலமாகத்தான் தமிழகத்தில் சமூக மாற்றம் என்ற கருத்தை துளிர்விட்டு இருக்கிறது என்பதை   அறியமுடிகிறது. 

இந்து மதத்தில்  இருந்துகொண்டு முதன்முதலில் உயர் சாதியை வன்கொடுமைகளை  எதிர்த்தவர்கள்  பற்றி நூலில் நிறைய செய்திகளை சொல்லியிருக்கிறார். 

அடுத்ததாக வந்த பிரம்ம சமாஜம்  முக்கியமாக கல்வி வளர்ச்சிக்கும், பெண்கல்விக்கும், சதி ஒழிப்பிற்கும் மிக முக்கியமான  இயக்கமாக தமிழகத்தில் இருந்திருக்கிறது. 

வைகுண்ட சாமிகளும், வள்ளலாரும் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன், மாயூரம் வேதநாயகம்பிள்ளை ,  தியாசபிகல் சொசைட்டி உறுப்பினர்கள் ஜி சுப்ரமணிய ஐயர் போன்றவர்கள் சமூக சீர்திருத்தத்திற்கு எவ்வளவு கருத்துக்களை கூறி இருக்கிறார்கள் என இந்தப் புத்தகத்தைப் படிப்பது வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. 

வள்ளலாருக்கு என்றே ஆறு அத்தியாயங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய இளமை காலத்தில்  வள்ளலார் அவர்கள் இந்து சமயத்தை தழுவி இருந்தாலும் தன்னுடைய 6 திருமுறைகளில் கருத்துக்களை கூறி இருந்தாலும் அவருடைய 41-வது வயதில் இருந்து அவர் இறக்கும் வரையில் சாதிகளையும் மதத்தினையும் கடுமையாக சாடியிருக்கிறார் ஆனால் இன்றோ அவை அத்தனையும் ஆன்மீகம் பரப்பும் இடங்களாக தான் இருந்து வருகிறது. 

மிக முக்கியமாக சுப்ரமணிய ஐயர்  விதவைகள் மறுமணத்தை முழுமையாக ஆதரிக்கிறார். தன்னுடைய பெண்ணிற்கு மறுமணம் செய்து வைத்து  அந்த காலத்திலேயே மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வைத்தார்.  தியாசபிகல் சொசைட்டி பொருத்தவரையில் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக வலியை ஏற்படுத்தியது மிகப்பெரும் செயலாகும்.  

பத்தொன்பதாம் நூற்றாண்டை பொருத்தளவில் நேரடியாக மிகப்பெரிய சமூக சீர்திருத்த மாற்றத்தை கொண்டுவர பிடித்தவரா மாதவையா அவரைப் பற்றிய குறிப்புகளும் புத்தகத்தில் நிறைய இருக்கின்றன. அதேபோல இரட்டைமலை சீனிவாசன்  அவர்களின் பங்கு மிகப் பெரியது. நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம் பற்றியும் நிறைய செய்திகளைத் தருகிறது இந்நூல். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்புரட்சியின் வாயிலாக சிறிதுசிறிதாக சமூக சீர்திருத்த மாற்றம் தமிழகத்தில் வளரத்தொடங்கியதாக நூல் குறிப்பிடுகிறது. அதைத்தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற சமூகப் போராளியாக மகாகவி சுப்ரமணிய பாரதியார்  பற்றிய குறிப்புகளை இன்னும் அதனை தெளிவாக விளக்குகிறது.  பாரதியாரின் பல்வேறு சமூக சிந்தனைகள் பற்றி அன்றைய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆசிரியர் ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி விளக்குகிறார்.  

அடுத்ததாக நீதிக்கட்சியின் தொடக்கம் மற்றும் தமிழக சாதிக் கட்டமைப்புகளை அதை எதிர்த்த செய்திகளையும் தோடு அடுத்ததாக தென் இந்தியாவின் முதல்  கம்யூனிஸ்ட்  போராளியான சிங்கார வேலன் பற்றி நான்கு அத்தியாயங்களில் அவர்செய்த அரும்பெரும் பணிகள் பற்றி எடுத்துச் சொல்கிறார்.  

அடுத்ததாக ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஒரே உள்ளொளியாக இருந்த காந்திஜி அவர்கள் சாதி பிரச்சனை பற்றியும் காந்திஜி மகளிர் விடுதலைக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் விவரிக்கிறார்.  

அடுத்ததாக சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றிய இரு பெரும் தலைவர்களான பெரியார் பற்றியும் அம்பேத்கர் பற்றி அதேபோல முத்துராமலிங்க தேவர் பற்றியும் அவர்கள் செய்த அரும் பெரும் பணிகள் பற்றியும் நிறைய செய்திகளை அடுக்கிக்கொண்டே வருகிறார் ஆசிரியர். 

இதில் சாதி கட்டமைப்புகளால் எவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டார்கள் அவர்களை அந்த கொடிய தீமையிலிருந்து வெளியே கொண்டுவர இந்த தலைவர்கள் எல்லாம் எந்த அளவிற்கு தியாகம் செய்து  பாடுபட்டு வந்தார்கள் என்று சொல்வதோடு அவர்கள் தங்களுடைய கொள்கையிலிருந்து சிலவேளைகளில் வெளியே வந்து அவர்கள் பாதுகாத்த அத்தனையும் தவிடு பொடியான வரலாறையும் சொல்கிறார். 

 இந்த நூல் இன்றைக்கும் பொருந்துவதாக இருக்கிறது அதற்குக் காரணம் யார் எதற்காகப் போராடினார்கள் எந்த கொள்கைக்காக போராடினார்கள் அதே கட்சியினரோ இல்லை அந்தக் கொள்கையை கடைபிடித்தவரோ இன்று அந்தக் கொள்கை பிடிப்பவராக இல்லாமல் போனதே அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை சமூக மாற்றம் நிகழாமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது. மேலும் சமூக மாற்றம் என்பது உடனடியாக நிகழ்வது அல்ல என்பதும் நாம் அறந்ததே!!! 

இந்த மாதிரியான நூல்களை இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் நிச்சயமாக படிக்க வேண்டும். அதற்கு அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய கலை இலக்கிய அமைப்புகள் இதை மாணவர்களுக்கு கொடுத்து படிக்கவைத்து விளக்கம் கொடுக்க வேண்டும். நம்முடைய வீதி இலக்கிய கூட்டத்திலும் மீண்டும் ஒரு முறை இந்த நூல் திருப்பதி ஐயாவாள் முழுமையாக விமர்சிக்க படவேண்டும் என்பது என்னுடைய அவா! !! 

நூல்: தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் 
ஆசிரியர்:  அருணன் 
பதிப்பகம்: வசந்தம் 
பக்கங்கள்: 385 
விலை : ரூ. 250/-
                                           அன்புடன்
                 ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்

2 கருத்துகள்:

  1. நன்றி நன்றி. விமர்சகர் மலையப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள். இன்றைய தலைமுறைக்குத் தேவையான பதிவு.

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...