வீதி வாசிக்கிறது குழுவின் மூலமாக பரிசு பெற்ற முதல் புத்தகம் இது. வீதி வாசிக்கிறது குழுவிற்கு மிக்க நன்றி.
இந்த கதையானது ரஷ்யாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையே நடந்த போரின் போது ஒரு சிறுவனது குடும்பம் அனுபவித்த இன்னல்களையும் அதன் மூலம் அந்த சிறுவன் தன்னுடைய நாட்டிற்காக தன்னை எவ்வாறு தகவமைத்துக் கொண்டான் என்பதைப் பற்றிய குறுநாவல்.
போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் தன்னுடைய குடும்பத்தை போரினில் இழந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் அந்த இழப்பினால் மிகுந்த வேதனையுடன் தன் குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக தானே ஒரு கொரில்லா போர் வீரனாக மாறி எதிரி நாட்டுக்கு செல்வதற்காக தன்னை எந்த வகையில் எல்லாம் தயார்படுத்திக் கொண்டான் என்பது கதை.
நிச்சயமாக இது ஒரு உண்மை கதை. இதில் நீங்கள் மிகுந்த கவனம் கொள்ள வேண்டியது என்னவெனில் 12 வயது சிறுவன் இந்த அளவிற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள முடியும் எனில் அவன் தன்னுடைய குடும்பத்தின் மீது எவ்வளவு பாசம் கொண்டவனாக இருப்பான் என்பதும் என்பதும் அதேசமயம் மனதிற்குள் எவ்வளவு வேகம் உடையவனாக இருந்திருக்கிறான் என்பதையும் நாம் நிச்சயம் உணர்ந்து கொள்ள வேண்டும் .
கதை தொடங்கும்போது அவன் தன்னுடைய நாட்டின் ஒரு எல்லைப்பகுதியில் இருக்கும் ஒரு ஆற்றங்கரையோரம் தன்னுடைய நாட்டு வீரர்களாலேயே பிடிக்கப் படுகிறான். அங்கிருக்கும் உயர் அதிகாரி நான் உன்னை யாரென்று கேட்கும் பொழுது அவரை அதிகாரம் செய்பவனாக பதிலளிக்கிறான். ராணுவத்தில் இருக்கும் மிக உயரிய அதிகாரிகளை அவன் தெரிந்தவனாக இருக்கிறான் எத்தனை முறை பள்ளிக்கு அனுப்பி விட்டாலும் போர் செய்வதிலேயே குறியாக இருக்கிறான். இறுதியாக அவனுக்கு போர் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. உளவு பார்க்கும் வேலையை அவனுக்கு ஒதுக்குகிறார்கள் எந்த தயக்கமும் இன்றி அதை ஏற்றுக் கொள்கிறான்.
ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு இரண்டு உயர் அதிகாரிகள் அவனை அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவன் எதிரி நாட்டை வேவு பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கேயே அவனை விட்டு விட்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ராணுவத்தின் சகல தைரியம் பொருந்திய ஒருவனாலேயே அந்த இடத்தில் தாக்குப்பிடிப்பது கடினம். ஆனால் இவான் எல்லாவற்றையும் கடந்து என்ன செய்தான் என்பதே கதை.
இந்த நாவலை ரஷ்ய மொழியில் விளாதிமிர் பகமோலவ் எழுதி இருக்கிறார். தமிழில் முகம்மது செரீபு மொழிபெயர்த்திருக்கிறார்.
மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை மிகவும் மோசமான மொழிபெயர்ப்பு என்று தான் சொல்வேன். இந்த மாதிரியான அதுவும் உணர்ச்சிவசமிக்க நாவலை மொழிபெயர்க்கும் போது கூடுதல் கவனம் தேவை. அதை ஒரு துளி கூட சரியாக செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. கூகுள் மொழிபெயர்ப்பான்கூட இன்னும் நன்றாக மொழிபெயர்த்திருக்கும். அவ்வளவு எழுத்துப்பிழைகள். புத்தகத்துக்கு உள்ளே எழுத்துப்பிழை என்றால்கூட பரவாயில்லை புத்தகத்தின் பின்னட்டையில் அதுவும் முதல் வரியில் எழுத்துப் பிழை. இதே நாவலை வேறு யாரும் மொழிபெயர்த்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை அப்படி ஏதும் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.
பேசப்பட வேண்டிய ஒரு குறுநாவல் அனைவரும் படிக்கவேண்டிய நாவல்
" இவான் ".
நூல் : இவான்
ஆசிரியர் : விளாடிமிர் பகமோலவ்
தமிழில் : முகமது செரீப்
விலை : ரூ. 130/-
விமர்சனம்: ஸ்ரீமலையப்பன்
நல்லதொரு விமர்சனம். மொழிபெயர்ப்பு ரொம்பவும் கவனித்து செய்ய வேண்டிய விஷயம். போலவே சரிபார்த்தல்.
பதிலளிநீக்குநிச்சயமாக கவனிக்கவேண்டிய ஒன்று சார்
நீக்குகுறைகளையும் நிறைகளையும் அருமையாக சொன்னதற்கு நன்றி மாப்ள...
பதிலளிநீக்குநன்றி மாமா
நீக்குஅருமை அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குஉயர் அதிகாரி நான் உன்னை யாரென்று கேட்கும் பொழுது அவரை அதிகாரம் செய்பவனாக பதிலளிக்கிறான்.//
பதிலளிநீக்குஇதற்கு என்ன பொருள்? யார் யாரை கேட்கிறார்கள்?
அவனை என்பது தான் நான் உன்னை என்றாகிவிட்டது அய்யா...
நீக்குகூகுளாண்டவர் துணையுடன் மொழிபெயர்த்திருப்பார் .... அதனாலதான் இத்துணை பிழைகள்... ஆனாலும் ஒரு தமிழறிஞரின் உதவியுடன் தவறுகளை களைந்திருக்கலாம்... >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
பதிலளிநீக்கு