கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் ஷாஜகான் சார் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து ஒரு செய்தியைப் பார்த்தேன் , "பாரதியார் நினைவுகள்" புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தை அவர் பதிவாகி எழுதி அந்தப் புத்தகம் வேண்டுமானால் நான்
ராஜாமகள் அவர்களை இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும் என்று சொல்லி இருந்தார். உடனே நான் ராஜா மகள் அவர்களை இன்பாக்ஸில் தொடர்புகொண்டு பாரதி நினைவுகள் புத்தகத்தையும் பூனைகுட்டிகாரன் புத்தகத்தையும் குரியர் மூலமாக பெற்றேன். இப்போதுதான் அந்த புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.
இந்தப் புத்தகத்தின் வாயிலாக பாரதியாரை மிக அண்மையில் நெருங்கி அவரை புரிந்துகொள்ள முடிகிறது. அவரைப் புரிந்து கொண்டேன் என்பதைவிட பாரதியாரின் மனைவி செல்லம்மாள் அவர்களை சிறிதாவது புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு அமைந்ததை எண்ணி மகிழ்கிறேன். செல்லம்மாள் அவர்கள் பாரதியார் பாடும் பாடல்களின் முதல் ரசிகை என்பது நமக்கு தெரியவருகிறது. இந்தப் புத்தகத்தின் ஒரு இடத்தில்கூட பாரதியார் அவர்கள் ஒரு பாடலை பாடுகிறார் அது செல்லம்மாள் அவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. எத்தனை ரசிகையாக இருந்தால் அந்த கண்ணீர் வந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆரம்ப காலகட்டத்தில் பாரதியார் கலகலப்பாகவும் மிகுந்த உற்சாகம் உடையவராகவும் இருந்திருக்கிறார், பிற்பாடு பலநாட்கள் மௌன விரதங்களை மேற்கொண்டிருக்கிறார். இந்த நூலின் ஆசிரியர் யதுகிரி அம்மாள் பாரதியாரின் இந்த மௌன விரதத்தை பற்றிச் சொல்லும்போது " அவர் மேற்கொண்ட மௌன தவமே அவர் இத்தனை காவியமான கவிதைகளை எழுதுவதற்கு காரணமாக அமைந்திருக்கும் என்று பிற்பாடு தாம் உணர்ந்ததாக கூறுகிறார். இந்தக் கூற்றை நாம் இப்போது ஆராயும்போது இக்கால கவிஞர்களும் மிக ரசனையான கவிதைகள் எழுத மலைகளுக்கும், கடற்கரைக்கும் சென்று வருவதை காண்கிறோம். மௌனம் மிகச் சிறந்த கவிதைகளை ஜனிக்கும் என்பது பாரதியார் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
மிக முக்கியமாக இந்தப் புத்தகத்தின் வாயிலாக பாரதியார் அவர்கள் மிகச்சிறந்த குரல் வளத்தை கொண்டவர் என்றும் அருமையாக பாடல் பாடுபவர் என்றும் நாம் அறிய முடிகிறது அதேசமயம் செல்லம்மா கேட்டாலும், தங்கம்மா கேட்டாலும், சகுந்தலா கேட்டாலும், யதுகிரி கேட்டாலும் மிகுந்த வாஞ்சையோடு அவர் அவர்களுக்காக பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒருசமயம் முருகேசன் பிள்ளை என்பவரது மகன் ராஜ்பகதூர் வெளிநாட்டிலிருந்து கடல்மார்க்கமாக வந்துகொண்டிருந்தபோது இறந்துவிட்டானென ஒரு தந்தி வருகிறது. மகன் வருவான் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த முருகேசன் பிள்ளை இந்த செய்தி கேட்டு மூர்ச்சையாகி பின்னர் படுத்த படுக்கையாகி விடுகிறார். அந்த தம்பதியினரை தேற்றுவதற்காக பாரதியார் பாடல்களைப் பாடுகிறார். அந்த பாடல்களை கேட்டு சிறிது நேரமாவது அந்த தம்பதியினர் ஆசுவாசம் கொள்கின்றனர். மனிதர்கள் மீது மனிதன் கொண்டவர் பாரதியார் என்பது இதன் மூலம் திண்ணமாகிறது.
இப்படி யதுகிரி அம்மாள் தனக்கு அருகாமையில் இருந்த தன்னோடு வாழ்ந்த பாரதியாரை நமக்கு தன்னுடைய எழுத்தின் மூலம் காட்டி இருக்கிறார். பாரதியார் பொருளாதாரத்தில் மிகுந்த தாழ்ந்த நிலையில் இருந்தார் என்பது நாம் அறிந்ததே. இந்த புத்தகத்தில் கூட ஒரு இடத்தில் தமிழைப் போற்ற வேண்டும் வாழ வைக்க வேண்டும் என்றால் அதை உயிராய் போற்றும் தமிழ் கவிதைகள் தமிழ் மண்ணின் மைந்தர்கள் அடையாளம் கண்டு வாழ்த்தி வாழ வைக்க வேண்டும். நிச்சயமாக அந்த காலத்தில் பாரதியாருக்கு அப்படி யாரேனும் ஒருவர் உத்வேகம் கொடுத்திருந்தால் இன்னும் பல கவிதைகளை நான் பெற்றெடுக்க முடியும் பல நாள் பாரதியாரே நாம் உயிரோடு வைத்திருந்திருக்க முடியும். தன் குடும்பத்தை காக்க பாரதியார் மிகுந்த சிரமப்பட்டு இருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் பெற வேண்டிய அறிவு என்னவெனில் இக்காலத்தில் வாழ நல்ல எழுத்தாளர்களை வறுமையில் வாடும் எழுத்தாளர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களுக்கு உத்வேகம் அளித்தது மேலும் எழுத வைத்து தமிழை காக்க வேண்டும் என்ற சபதம் எடுக்க வேண்டும்.
பாரதியாரைப் பற்றி சிறிதேனும் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல புத்தகம் இந்த "பாரதி நினைவுகள்" . இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு பாரதியாரின் அத்தனை படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது, அது வாசிப்பில் வேறு கோணத்தை எனக்கு வழங்குவதாக அமையுமென்று நான் நம்புகிறேன். பாரதியின் படைப்புகளை படியுங்கள் பாரதியாரை கொண்டாடுங்கள்!!!
நூல்: பாரதி நினைவுகள்
ஆசிரியர் : யதுகிரி அம்மாள்
பதிப்பகம்: கோதை
விலை : ரூ. 120/-
அன்புள்ள,
ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்.
அருமை... சபதம் எடுக்க வேண்டியது இன்றைய சூழல்...
பதிலளிநீக்குஇந்தப் புத்தகம் நான் வைத்திருக்கிறேன், படித்திருக்கிறேன். பாரதியார் பற்றிய புத்தகங்களில் முக்கியமான சில புத்தகங்களில் ஒன்று.
பதிலளிநீக்குஎன்னை முதன் முதலாக மிக சிறிய வயதிலேயே கவர்ந்த கவிதைகள் பாரதியாரின் கவிதைகளே ... >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
பதிலளிநீக்கு