வியாழன், 3 செப்டம்பர், 2015

வலைபதிவர் திருவிழா VERSION 6.0

அனைவருக்கும் வணக்கங்கனா.....

                                ஏதோ எனக்கு தெரிஞ்ச கோயமுத்தூர் பாசைல பேசுரேனுங்க... வெர்சனு 6.0- னாக்க  வேரொன்னுமில்லிங்க ஆறாவது ஆலோசன 
கூட்டத்ததானுங்க அப்டி சொல்லியிருக்கேன் .... நேத்து  கூட்டத்துல  ஒரே கூட்டமுங்க அங்கே இருந்த பெஞ்சியெல்லாம் புல்லாகிபோச்சுனா  
பாத்துகங்க எம்புட்டு ஆர்வமுன்னு... இதுல நா லாப்டாப்பு கொண்டுபோய் இருக்குற எல்லாரையும் பதிவுபண்ண சொல்லிபுட்டேன்... நேத்து என்ற  வேல அது மட்டும்தான் ...

                 14 குழு இந்த திருவிழாவுக்கான வேலைய பாக்குரோமுங்க .... இப்போ நம்ம மொத வேல என்னனாக்க  பதிவு பண்றதுதான்... பதிவு பண்ண ஒரு பத்து நொடிகள்தான் ஆகும்... நேரா இப்போ  என்ற வலைப்பக்கதுல   வலது மூலைல இருக்க போட்டோவ சொடுக்குங்க, அது நேரா திண்டுக்கல் தனபாலன் அய்யாவோட வலைப்பூவுக்கு கூட்டிபோகும்.... பதிவுபண்ணிட்டு வெரசா வாங்க... ஒரு முக்கியமான விசயம் சிறப்பு விருந்தினர் யாரு தெரியுமா? எனக்கு தெரியுமே!!! அதையும், நேத்து நடந்த கூட்டத்த பத்தியும்  இந்த வலைப்பதிவர் திருவிழாவா பத்தியும் இன்னும் நெறைய செய்தி தெருஞ்சுக்க எங்க வரணும்னாக்க...

அட அதேதானுங்க 
மின்னஞ்சல் முகவரி 
bloggersmeet2015@gmail.com
                               என்றா சம்முகம் வண்டிய விட்றா வலைபதிவர் திருவிழாக்கு பாக்க வேண்டிய வேல இன்னும் பாக்கி இருக்கு.....

                                                                                      நன்றியுடன் ஸ்ரீ 

22 கருத்துகள்:

  1. அட இது என்ற கடைக்குட்டித் தம்பிங்களா இது? கலக்கிப்புடுச்சில்ல? அம்முணிய மறக்காம கூட்டிவந்திருங்க தம்பி! அட என்னாது? அதுக்கு இன்னும் வழி பொறக்கலயாங்காட்டியும்? அட எட்றா வண்டிய நம்ம பொள்ளாச்சிப் பக்கம் உடுறா...(?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத கருத்து போட்டதுக்கு நன்றிகய்யா... அடுத்த திருவிழாவுக்கு அம்மணிய கூடியாந்துறேங்கய்யா...

      நீக்கு
  2. அடி ஆத்தாடி என்ன இப்புடி கலக்குறீக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு தெரியதுங்கலாக்கும் அம்மா... எல்லாமே நம்ம சனங்க சொல்லித்தந்ததுதானுங்கமா...

      நீக்கு
  3. ஆஹா..! அருமை! அருமை!.. சகோதரரே!

    டயலாக் சூப்பர்!
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. போற போக்க பாத்தா நாங்கல்லாம் கருப்புல (அதாங்க பிளக்குல) தான் பாக்க முடியும் போல இருக்கே வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  5. தம்பி செம !!! அந்தர் பண்நீடீங்க!!! தர மாஸு!!!

    பதிலளிநீக்கு
  6. நீங்க கூப்பிட்ட பிறகும் வராமல் இருப்பேனா :)
    கட்டாயம் அன்று சந்திக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா6 செப்., 2015, 6:32:00 PM

    gee nalla etherkaranga ana thayavu sengu coimbatore bashnu sollathenga. Kandia athu illa ithu

    பதிலளிநீக்கு
  8. இன்று பத்து மணிக்குக் கூட்டம் அவசியம் வந்துவிடுகிறேன்
    நீங்களும் வாங்க

    பதிலளிநீக்கு
  9. எந்த வட்டார வழக்கா இருந்தா என்ன? நமக்கு பணியாரம் பக்குவமா வரணும் அம்புட்டுதான்.

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...