சனி, 19 அக்டோபர், 2019

மரங்களும் மனிதர்களும்

நூல் விமர்சனம்:
திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் மரங்களும் மனிதர்களும் என்ற நூலில் மரத்தின் தலைப்புகளில் 10 சிறுகதைகளை எழுதியிருக்கிறார் ஒவ்வொன்றும் மரத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவினை குறிப்பதாக இருக்கிறது.

கதையின் தலைப்புகளே வேப்பமரம், புளியமரம், பலாமரம், முருங்கை மரம், ஆலமரம், அரசமரம்என்று மரங்களின் பெயர்கள் வரிசையாக இருக்கிறது. மரங்களோடு நமக்கு இருக்கும் உறவுகளை அவற்றுடன் நாம் பகிர்ந்துகொள்ளும் உணர்வுகளை சார்ந்து கதைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெரிய மொழிநடை இல்லையென்றாலும் நம்மால் கதையோடு சிறிதேனும் பயணிக்க முடிவதாக நடை அமைந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

மரங்களோடு நமக்கு இருக்கும் உறவு என்பது ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. மாறாக நாம் இப்போது வாழும் காலத்தில் மரங்கள் மீதான விழிப்புணர்வு சற்று குறைந்து இருக்கிறது. இதை எடுத்துக்காட்டும் விதமாக இரண்டு மூன்று கதைகள் அமைந்திருக்கிறது. அதிலிருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு படிப்பினையை நமக்கு வழங்குவதாக நமக்கு வழங்குவதாக இருக்கிறது, இருந்தாலும் கதை சொல்லப்பட்ட விதத்தில் சற்று தொய்வு இருப்பதாகவே தோன்றுகிறது.

மரத்தையும் குழந்தைகளையும் நாம் வேறுவேறாக நினைப்பதில்லை என்பதை என்பதை ஒவ்வொரு கதையுமே எடுத்துச் சொல்கிறது. வாசிப்பதற்கு மிக எளிதான புத்தகம் புத்தகம்.  புதிய வாசகர்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல புத்தகம் இது. இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி என்னவெனில் மரம் இல்லையேல் மனிதர்கள் இல்லை மரங்களை நம்மை விட வேறு யாரும் பார்த்துக் கொள்ளவும் முடியாது பாதுகாக்கவும் முடியாது என்பதை புரிந்து கொண்டால் மரங்களும் வளரும் நல்ல மனங்களும் வளரும்!!!

நூல்        : மரங்களும் மனிதர்களும்
ஆசிரியர்: சாந்தகுமாரி சிவகடாட்சம் பதிப்பகம் : சாந்தி சிவா பப்ளிகேஷன்
விலை       :100 ரூபாய்

3 கருத்துகள்:

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...