திங்கள், 21 ஜனவரி, 2019

விருந்துக்கு பிறகான வெற்றிலை பாக்கு

சிவா முத்தொகுதி என்ற பெரிய பெரிய விருந்தை முடித்தவுடன் போடும் வெற்றிலை பாக்காக நேற்று இந்த புத்தகத்தை எடுத்தேன். அண்ணன் யூமா வாசுகி அவர்கள் மொழிபெயர்த்த புத்தகம்.

சின்னச் சின்ன கதைகளாக எடிசனின் வாழ்க்கையில் நடந்தவற்றை சொல்லும் 15 கதைகள் அடங்கியுள்ளது. சிறுவயது குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம். காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்களும் தேர்ந்தெடுத்து சொல்லலாம். அறிவியல் ஆசிரியர்கள் புதிய பாடத்தை துவங்கும்போது இந்த கதைகளில் ஒன்றை சொல்லி ஆயத்தப்படுத்தலாம்.

அற்புதமான புத்தகம். மலையாளத்தில் பி.பி.கே. பொதுவால் எழுதியிருக்கும் புத்தகம். தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடு. விலை ரூ.50/-

#புத்தக_விமர்சனம்
#இந்த_ஆண்டில்_வாசித்தது_இதுவரை_2

6 கருத்துகள்:

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...