இன்றைய நாள் தீவிர தொண்டைக்கட்டுடன் ஆரம்பித்தது. காலை ௧௦ மணிக்கு அறந்தையில் ஆசிரிய பெருமக்களுக்கு , ஒன்பதாம் வகுப்பில் உள்ள டிஸ்லெக்சியா குழந்தைகளை கண்டறிவது எப்படி எனபது பற்றிய ( டிஸ்லெக்ஸ்சியா எனபது பற்றி அறிய நீங்கள் ஆமீர் கான் நடித்த தாரே சாமின் பர் என்ற படம் பார்த்தல் நலம் ) பயிற்சி அளித்தாக வேண்டிய சூழ்நிலை.
என்னசெய்வதென்று புரியாமல் தவிப்புடன் பயிற்சிக்கு கஸ்தூரி சார் அவர்களுடன் சென்றிருந்தேன். ஒருவேளை அங்கு செல்லும்போது வாயிலிருந்து வெறும் காற்று மட்டும் வந்தால் எல்லாத்தையும் மேலே இருக்கவர் பார்த்துக்கொள்வார் (கஸ்தூரி சார்) என்ற மனநிலையுடன் சென்றுவிட்டேன். ஒரு சின்ன மனதைரியம் என்னவென்றால் ஒரு மணி நேரம் தான் பயிற்சி அளிக்க வேண்டும்.
எங்கள் வண்டி பள்ளியின் முன்கேட்டில் நுழைந்தபோதே அங்கு இருந்தவர்கள் நல்ல இரண்டு அடிமைகள் சிக்கிவிட்டதாகவே எங்களை எண்ணியது அங்கு அமர்ந்த பின்பு என் மரமண்டைக்கு புரிய வந்தது காலம் செய்த கோலம். சரி நடந்தது நடந்துவிட்டது சரி பயிற்சி பற்றிய செய்திக்கு வருகிறேன்.
டிஸ்லெக்ஸ்சியா என்பது குறைபாடுதான். மாறாக அது நோய் அல்ல என்பது என்னுடைய புரிதல். கற்றலில் அதுவும் வாசித்தலில் , எழுதுதலில் , கணிதத்திறனில் ஏற்படும் ஒருவகை குறைபாடு. இவர்கள் சாதாரணமாக இவர்கள் பாடங்களை கற்பதில்தான் குறைபாடுடைய மாணவர்கள் மற்றபடி மற்ற மாணவர்களைவிட வேறு சில திறன்களில் முற்போக்கானவர்கள்.
உதாரணமாக இவர்கள் செய்யும் தவறுகள் எழுத்துக்களை மாற்றி எழுதுவது அதாவது (PIT = BID) என எழுதுவது , வாசிக்க தெரியாமல் இருப்பது, சோம்பேறித்தனமாக இருப்பது போன்ற சிலவகை பிரச்சனைகளை மட்டுமே உடையவர்கள்.
இவர்களை சரி செய்வது எப்படி என்பதை பற்றி MDA ( Madras dyslexia assosiation ) ஒரு கையேடை தயாரித்து பள்ளிக்கல்விதுறையிடம் கொடுத்துள்ளது. டிஸ்லெக்ஸ்சியா பற்றிய இன்னும் விரிவான கட்டுரை மற்றும் அவர்களை சரி செய்யும் வழிமுறைகள் பற்றிய கூறுகளையும் ஆராய்ந்து அது பற்றிய விரிவான அலசல்களுடன் அடுத்த பதிவில் வருகிறேன் ...
நன்றியுடன் ஸ்ரீ