செவ்வாய், 14 ஜூன், 2016

ஓடு ராசா ஓடு - பகுதி 3 (ஜங்கிள் அமேசான் அல்ட்ரா )

                என்ன நண்பர்களே அடுத்த ஓட்டத்தை தொடங்குவோமா !

               இன்று நான் பதியப்போகும் ஓட்டத்தை "மாரத்தான்களிலேயே மிகவும் கடினமான மாரத்தான் " என்று அழைக்கிறார்கள். 

         ஹாலிவுட் படங்களில் "அந்த மிருகம் நம்மள தொரத்திட்டு வருது" என்று கேட்டிருப்பீர்கள்,    இந்த ஓட்டத்தில் நீங்கள் பங்கேற்பாளராக சென்றால் அதை நிச்சயம் நீங்கள் நேரிலேயே ரசிக்கவும் உணரவும் செய்யலாம்...

அப்படி என்னடா மாரத்தான்.... உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது!!!


ஜங்கிள் அமேசான்  அல்ட்ரா :

தூரம்            : 254 கிலோ.மீட்டர் 

நேரம்           : 168 மணி நேரம் 

இடம்            : அமேசான் காடு , பிரேசில் 

இடர்கள்    : புதை குழிகள் , ஜாகுவார் , அனகோண்டா , பிரானா ,
                           மற்ற காட்டு விலங்குகள் , கொசுத்தொல்லை மற்றும் 
                           கொஞ்சமே கொஞ்சம் அட்டைப் பூச்சிக்கடி .






                          அடர்த்தியான அமேசான் காடுதான் பயணப்பாதை. இதை ஒரு ரவுண்ட் முடித்துவிட்டால் நீங்கள் பியர் கிரில்ஸ் போன்ற மாமேதைகள் ஆகிவிடலாம்.


                         ஓடிக்கொண்டே இருக்கும்போது நீங்கள் பாதாளத்தில் இருந்தீர்கள் என்றால் புதைகுழிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

                     
                        ஜாகுவார் , கரடி , அனகோண்டா , பிரானா மீன்கள் , வகை வகையான குரங்குகள் , நீங்கள் பார்த்திராத ஏனைய விலங்குகளை போன்றவற்றை  நண்பர்களாக நினைத்துக்கொண்டே ஓடுதல் நலம்.


                       இந்த போட்டி மொத்தம் ஐந்து கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகிறது. 


                       இந்த போட்டியில் இதுவரை பங்கேற்ற கணிசமான அன்பர்கள் " அமைச்சரே இன்னும் பயிற்சி வேண்டுமோ " என்றபடி பாதியிலேயே நடையை கட்டிய கதைகள்தான் அதிகம்.


                     நீங்கள் ஒருவேளை பாகுபலியாகவோ அல்லது ஜங்கிள் புக் சிறுவனாக நினைத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்.


                     இந்த போட்டியில் நீங்கள் பங்குபெற வேண்டுமென்றால் பிரத்யேக பயிற்சி வகுப்பில் பயிற்சியெடுத்த பிறகுதான் விண்ணப்ப படிவத்தையே கையில் தொடமுடியும்.


    "நமக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்ட்ற மாதிரி "என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வளைதலத்திற்குள் செல்லவும்....




லிங்கை சுட்டுக 

https://www.facebook.com/JungleMarathon/



கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள் .... அடுத்த ஓட்டத்தோடு அடுத்த பதிவில் வருகிறேன் நாளை ... 

                                                                                                           நன்றியுடன் ஸ்ரீ 

                   



10 கருத்துகள்:

  1. தொடர்கின்றேன் நீங்க ஓடுங்கள்)))நடந்தே வாரேன்)))

    பதிலளிநீக்கு
  2. மக்கள் த்ரில்லை விரும்புகிறார்கள். ரோடிலேயே ஓட முடியவில்லை. காட்டிலா! அம்மாடி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இருக்கிறது திகீர் திகீர் ... வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  3. காட்டுக்குள்ளும் ஓடுவோம்.... :))) Adventurous Trip! வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணமைதான் அய்யா ... வாழ்கையை வாழத் தெரிந்தவர்கள் ... வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. பதில்கள்
    1. அடுத்த பகுதிகள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் அய்யா ... தொடர்வோம்

      நீக்கு
  5. ஓட்டமும் நடையுமாக...தொடருகிறேன்..

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...