திங்கள், 13 ஜூன், 2016

மனிதம் உயிர்வாழ்கிறது - நெகிழ்ச்சி பதிவு

      நான் எப்பொழுதெல்லாம் மனிதத்தின்மீது சந்தேகிக்கிறேனோ அப்பொழுதெல்லாம் மனிதம் சாகவில்லையென செவிட்டில் அறைந்தாற்போல் எவரோ ஒருவர் நிருபித்துவிடுகிறார்கள்.



           என் மாணவர்களில் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன் தாங்க முடியாத துன்பம் வந்துசேர்ந்தது. அவன் குடும்பம் மீண்டுவிடவில்லை இன்னும். படிப்பை தொடர ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த நேரம்... என்னால் எதுவும் செய்யமுடியாத போதாகாலமாகிவிட்டது.

               அந்தகணம் என்னை நானே கோபித்துக்கொண்டேன். மனிததின்மீதும் தீரா கோபம்.. நான் முன்னமே சொன்னதுபோல என் செவிட்டில் அறைந்தவாறு என் கண்முன்னே விழுந்தது நண்பர் பிரபாகரன் அவர்களின்முகநூல் பதிவு இவ்வாறாக "ஏழை மாணவருக்கு உதவக்கூடிய நண்பர் ஒருவர் இருக்கிறார் யாருக்கேனும் தேவையென்றால் அணுகவும்" என்றிருந்தது.

   உடனே அலைபேசிவிட்டு அதை என் மாணவருக்கென்று உறுதி செய்துகொண்டேன். இன்று துபாயில் வசிக்கும் நண்பரின் நண்பர் திரு. இமானுவேல் ரூபன் அவர்களிடமிருந்து ரூ. 25,000/- நண்பர்கள் அருண், முருகன் மற்றும் பிரபாகரன் அவர்கள் மூலமாக தலைமை ஆசிரியர் அவர்கள் கைகளால் மாணவருக்கு வழங்கப்பட்டது. இப்பொழுது பெருமூச்சுடன் நிம்மதி. மகிழ்ச்சி.

       நல்ல உள்ளங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன என்ற நம்பிக்கையோடு இரவை வரவேற்றுக்கொண்டிருக்கிறேன்.

      தலைமையாசிரியர், பள்ளி ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள். மீண்டும் ஒருமுறை நன்றி நண்பர்கள் இமானுவேல் ரூபன் , பிரபாகரன் , அருங்குலமுருகன் மற்றும் நண்பர் அருண் .

நன்றி நண்பர்களே ... ஓடு ராசா ஓடு பகுதி - 3 நாளை....

14 கருத்துகள்:

  1. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல மனம் வாழ்க........ நாடு போற்ற வாழ்க!

    நல்லுள்ளம் கொண்ட நண்பர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. உண்மை. நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி அம்மா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்

      நீக்கு
  5. நண்பர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. இப்பதிவு இந்த தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வாழ்த்துகள் நண்பரே இதோ சுட்டி

    http://engalblog.blogspot.com/2016/06/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  7. சிலருக்கு பணம் இருக்கும் மனம் இருப்பதில்லை .. சிலருக்கு உதவும் மனம் இருக்கும் பணம் இருப்பதில்லை. சிலருக்கு இரண்டும் இருக்கும் ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமைவதில்லை... மனமுள்ள நண்பருக்கு மனமுள்ள நண்பராகிய நீங்கள் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள் ... இருவருக்கும் வாழ்த்துக்கள் பல !! >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...