இரண்டாவது வகை மராத்தானை பற்றி அறிய விருப்பமாக இருப்பீர்கள்... நம்மூரில் கட்டாந்தரையில் ஓடுவதே சிரமம்!!!
ஆனால் இந்த மாராதான் நடைபெறும் இடம் எங்கு தெரியுமா ?
முழுக்க பனிமலையில். குளிர் நடுக்கத்தில், நூறல்ல இருநூறல்ல மொத்தாமாக எழுநூறு கிலோ மீட்டர்.. என்ன மூச்சடைக்கிறதா ?
வாங்க ஓடிக்கிட்டே படிப்போம் அந்த இரண்டாவது மராத்தான் பற்றி.....
ஆர்டிக் அல்ட்ரா மாரத்தான் :
தூரம் : 700 கிலோ. மீட்டர்
நேரம் : 312 மணி நேரம்
இடம் : கனடா
இடர்கள் : வெப்ப குறைபாடு , கடுங்குளிர் உடல் அசைவற்று போதல்
உலகின் சில்லென்ற மராத்தான் இந்த வகை மராத்தான். கனடாவின் பனி பிரதேசத்தில் மைனஸ் டிகிரியில் ஓடவேண்டும்.
மொத்தம் மூன்று பிரிவுகளாக இந்த வகை ஓட்டம் பிரிக்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களில் 100 மைல், எட்டு நாட்கள் 12 மணி நேரத்துக்குள் 300 மைல் கடைசியில் மீதமுள்ள 130 மைல்களை கடந்தால் நீங்கள் வெற்றியாலராகலாம்.
இதில் ஆசுவாசபடுத்திக்கொள்ளும் ஒரே விஷயம் உங்களை ஒரு குழு பின்தொடர்ந்து வரும். எனவே நீங்கள் பேரிடர்களில் சிக்கினால் காப்பாற்றப்படுவீர்கள் என கொஞ்சமாவது நம்பலாம்.
ஒவ்வொரு செக் பாயன்டையும் கடக்கும்போது கையெழுத்துப்போட மறந்துவிடக்கூடாது. பதறவேண்டாம் நீங்கள் கையெழுத்திடும் நேரத்திற்கும் உங்கள் டைமிங்கிர்க்கும் சம்மந்தம் இல்லை. எல்லைகோட்டை தொடுவதுதான் இங்க வெற்றியே சோ பயப்படவேண்டாம்.
உங்களின் அன்றாட உணவுகளுக்காக இந்த போட்டியை நடத்தும் டீமின் சூப்பர்மார்கெட் மற்றும் உணவகங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்தனை நாள் ஓட வேண்டியிருப்பதால் தனி நபராக ஓடாமல் ஒரு குழுவாக ஓடினால்தான் நீங்கள் சோர்வடையாமல் வெற்றி கனியை பறிக்க முடியும்...
என்ன ஓட தயாரா ?
மேலும் இந்த மராத்தான் பற்றிய விவரம் அறிய :
அடுத்த பதிவுல இன்னும் வேகமா ஓடுவோம் ...
நன்றியுடன் ஸ்ரீ
அட இப்படி வேற இருக்கா ஓட்டம் பற்றி பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள் சகோ!உங்கள் தளத்துக்கு புதியவன் இனி ஓடுகின்றேன் வேகமாக)))
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்...
நீக்குதமிழ்மணம் ஓட்டுப்பட்டை எங்கே??
பதிலளிநீக்குஇன்னும் வைக்கவில்லை
நீக்குரிஸ்கான ஓட்டம். இதிலும் ஆர்வமாகப் பங்கு பெறுபவர்கள் இருக்கிறார்களே... ஆச்சர்யம்தான்.
பதிலளிநீக்குஅடுத்தடுத்த பதிவுகள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்... வருகைக்கு நன்றி
நீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குஇப்படியும் போட்டியா
வியப்புதான் மிஞ்சுகிறது
இப்படியெல்லாம் போட்டி வச்சு வயிர கலக்குறானுக அய்யா ... வருகைக்கு நன்றி
நீக்குமாரத்தான் போட்டிகளில் பல வகைகள்.... ஒவ்வொன்றும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
பதிலளிநீக்குBadwater Ultramarathon உலகத்தின் மிகக் கடினமான ஓட்டங்களில் ஒன்று. கடக்க வேண்டிய மொத்த தூரம் 217 கி.மீ. கடல்மட்டத்திலிருந்து 282 அடி கீழே இருக்கும் Badwater Basin [கலிஃபோர்னியா] என்ற இடத்திலிருந்து கடல் மட்டத்திலிருந்து 8360 அடி மேலிருக்கும் Whitney Portal [கடினம் தானே… அதுவும் கடினமான வெயில் 49 டிகிரி இருக்கும் இடத்தில் இருந்து 10 டிகிரி குளிர் பிரதேசம் வரை]. இதில் கலந்து கொண்டு வெற்றி கரமாக முடித்தவர் எனது தில்லி நண்பர் அருண் பரத்வாஜ். அவர் பற்றி எனது பக்கத்தில் முன்பே சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். இரண்டு சுட்டிகள் கீழே.
http://venkatnagaraj.blogspot.com/2012/01/blog-post_30.html
http://venkatnagaraj.blogspot.com/2012/10/blog-post_31.html
அம்மாடியோவ்... அருண் பரத்வாஜ் அய்யா அவர்களுக்கு பாராட்டுக்கள்... வருகைக்கு நன்றி அய்யா
நீக்குதகவல் அருமை...
பதிலளிநீக்குநல்லாத்தான் இருக்கு தகவல்இ நன்று இருந்தாலும் எனக்கு சரியா வராது தொடர்கிறேன்
பதிலளிநீக்குநம்ம யாருக்கும் சரி வராதுனுதான் நினைக்றேன்... நன்றி அய்யா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்கு