நம்மூர் மராத்தான் போல் அல்லாமல் உலக அளவில் மிகவும் பயங்கரமான , கேட்பதற்க்கே பதைபதைக்கும் அளவுக்கு நடக்க கூடிய ஏழு வகையான மராத்தான் போட்டிகளை உங்களுக்கு இந்த ஏழு நாட்களுக்கும் அளிக்கிறேன் ... உள்ளே செல்வோமா !!!!
௧. டிராகன்ஸ் பேக் ரேஸ்
தூரம் : 300 கி.மீ
நேரம் : 120 மணி நேரம்
இடம் : வேல்ஸ், ஸ்காட்லாந்து
இடர்கள் : குளிர் , மலை விலங்குகள் , திசை அறியமுடியா சிக்கல்
( டிராகன் பேக் ரேஸ் மலை , வேல்ஸ் )
முதன்முதலில் 1992 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது . மலையேற்றம் செய்து பழக்கப்பட்டவர்கள் மட்டுமே இதில் பங்கேற்ப்பது நல்லது .
இதில் உள்ள மிகப்பெரும் சவால் 16000 மீட்டர் தூரத்தை மலை ஏறியே கடக்க முடியும் . ஐந்து நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் காடு , மலை , பாதையே இல்லாத சாலைகள் , தொலைந்து போனால் கண்டுபிடிக்க முடியாத வழிகள் ( கணவன்மார்கள் கவனிக்க ) வழிகள் அதிகம் .
மிகப்பெரிய சிக்கலே வழித்தடம்தான் . அதாவது எந்தப்பாதையில் செல்வது என்பதே மிகப்பெரிய குழப்பமாக இருக்குமாம் . ( இதில் கலந்துகொண்ட ஒருவர் ஏழு நாட்களுக்கு பிறகே மீட்ட்கப்பட்டு இருக்கிறார் )
இன்னுமொரு சிக்கல் நடுநடுவே ஆயிரக்கணக்கில் உட்புகும் மலைகள். இவைகள் எளிதாக நாம் செல்லும் வழித்தடத்தை மாற்றக்கூடியது.
ஒரே ஆறுதல் நமக்கு கொடுக்கபட்டிருக்கும் மேப்பில் தினமும் காலை ,மாலை , இரவு வேளைகளில் சாப்பாடு கொடுக்கப்படும் இடம் குறிக்கப்பட்டிருக்கும் . நீங்கள் அந்தந்த இடங்களை கண்டுபிடித்து விட்டாலே பாதி வெற்றி நிச்சயம் .
ஆனால் ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித்தனி ரூட் மேப் உண்டு ..
மேலும் டிராகன் பேக் ரேஸ் பற்றிய விவரங்கள் அறிய
நாளை இன்னுமொரு மராத்தானோடு சந்திப்போம் நண்பர்களே.....
சாகசப் போட்டிகள்.
பதிலளிநீக்குபதற வைக்றாங்க சார்
நீக்குஓடு ராசா ஓடு--- ஓடுவோம் வாழ்கையில் ஓட முடியும் வரையில் ஓடுவோம்..
பதிலளிநீக்குஓடிகிட்டே இருப்போம் ... வருகைக்கு நன்றி
நீக்குவியந்தேன்நண்பரே
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அய்யா
நீக்குவிளையாட்டு வினையாகிவிட போகிறது என்பார்கள் இது உண்மையிலேயே வினை பிடிச்ச விளையாட்டா இருக்குதே! தகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா
நீக்குநல்ல விஷயம் - இந்த விளையாட்டு பற்றி இங்கே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொடருங்கள்.
பதிலளிநீக்கு