என்ன நண்பர்களே நேற்று ஓடி ஓடி களைத்துப்போய் இருப்பீர்கள் !!
சும்மா விடுவோமா என்ன ?
தமிழ்நாட்டில் தற்போது " வச்சு செய்வது " என்ற பதம் வழக்கத்தில் உள்ளது . நான் சொல்லப்போகும் அடுத்த வகை மாரத்தானும் அதைப்போன்ற ஒன்றுதான். வாட்டி வதக்கி வச்சு செய்யும் மாரத்தான் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பீர்கள் என்று புரிகிறது...
வாங்க ஓடலாம் !!!
மாரத்தான் டேஸ் செபில்ஸ் :
தூரம் : 251 கிலோ மீட்டர்
நேரம் : மூன்று நாட்கள்
இடம் : சகாரா பாலைவனம்
இடர்கள் : நுரையீரல் வறட்சி , தண்ணீர் தாகம் , கடுமையான வெயில் மற்றும் மணல் புயல் அபாயம்.
1986 ஆம் ஆண்டு பேட்ரிக் பூவர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த மாரத்தான்.
உலகின் நீளமான மற்றும் சிக்கலான மாரத்தான் என்று இதை அழைக்கிறார்கள்.
கொஞ்சமே கொஞ்சம் பேர் மட்டுமே இதுவரை வெற்றிபெற்று இருக்கிறார்கள் இதுவரை.
சாதாரணமாக ஒவ்வொரு முறையும் உங்கள் முழங்கால் வரை மணலுக்குள் புதைவதால் நடப்பது மிகவும் சிரமம். சுமாராக 100 பாரன்கீட்டில் நடக்கவேண்டி இருக்கும். இதனால் நீங்கள் எளிதில் சோர்வடைந்து போவீர்கள்.
திறம்பட பயிற்சி மேற்கொள்பவர்களால் மட்டுமே வெற்றிபெற முடியும்.
கால் முழுக்க கோணி சாக்குகளை சுற்றிக்கொண்டு நீங்கள் போட்டியில் கலந்துகொள்வது பெஸ்ட்.
ஒரே ஆறுதல் நீங்கள் பயணம் மேற்கொள்ளும் மூன்று நாட்களும் ஆங்காங்கே தண்ணீர், ஜூஸ், தங்கிக்கொள்ள கூடாரம் ஆகியவை அமைத்து தரப்படும்.
மூன்று நாட்களுக்குள் நீங்கள் பயண தூரத்தை கடத்து வெற்றிபெற்றால் மிகப்பெரும் பரிசுத்தொகை கிடைக்கும் கூடவே சீயர் கேள்சின் முத்தங்களும்...
என்ன நீங்க போட்டிக்கு தயார்தானே!!!
மேலதிக விவரங்களுக்கு :
நாளைக்கு நாம இமயமலையில் ஒடப்போறோம்..
இது நம்ம ஊரூ மாரத்தானுங்கோ ..
நன்றியுடன் ஸ்ரீ
ஓ மை காட்! எனக்கு முத்தமும் வேண்டாம். பரிசும் வேண்டாம். என் உயிர் இருந்தால் போதும்!!!
பதிலளிநீக்குநிச்சயமாக வேண்டாமா ?
பதிலளிநீக்குகடுமையான ஓட்டம்...... முத்தத்திற்காக இத்தனை அவஸ்தை தேவையில்லை! :)
பதிலளிநீக்குஹா ஹா... வருகைக்கு நன்றி அய்யா
நீக்குநாளைக்கு நாம இமயமலையிலா ஒடப்போறோம்....?????
பதிலளிநீக்குஆமாம் அய்யா ...வருகைக்கு நன்றி
நீக்கு