வியாழன், 16 ஜூன், 2016

ஓடு ராசா ஓடு - பகுதி 5 (இமயமலை )

         
     இன்று நம்முடைய இமயமலையில் ஒடப்போகிறோம் என்று நேற்றே கூறியிருந்தேன். நம்ம ஊர சும்மா நினைத்துவிடாதீர்கள் நண்பர்களே ! அப்படி நினைத்தீர்கள் என்றால் உங்களை முதலில்     புரட்டி எடுக்கப்போவது நம்முடைய மாரத்தான் தான். 


வாங்க ஓட துவங்குவோம் ...


லா அல்ட்ரா - தி ஹை


தூரம்         : 333 கிலோ மீட்டர் 


நேரம்        : 72 மணி நேரம் 


இடம்         : இமயமலை , இந்தியா 


இடர்கள் : மூச்சு திணறல் , வெயில் , குளிர் 







            மாராதான் ஓட்டத்திலும் நம்ம மலையை யாராலும் தோற்கடிக்க முடியாது. சிங்கிள் ஸ்டேஜ் போட்டியான இதை " தி ஹை" என்று அழைக்கிறார்கள்.( மலேடா இமயமலை )



            மைனஸ் டிகிரிக்கு டக்கென வானிலை மாறுவது , காலை நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிப்பது , ஆக்சிஜன் குறைபாட்டால் முச்சுதிணறல் ஏற்படுவது, பல மலைத்தொடர்களை கடக்க வேண்டிய நிலை . எல்லாவற்றையும் மீறி கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் இந்த சவாலை முடித்தால் நீங்கள்தான் வின்னர். ( இதுவும் ஒருவகை வைத்து செய்தலே )


           இந்த பயிற்சியை தேர்ந்தெடுக்க தனி தன்னம்பிக்கை தேவை என்கிறார்கள் இதற்குமுன் போட்டியில் பங்குபெற்றவர்கள். ( நல்லா கிளப்புராங்கடா பீதிய )



             இன்னொரு வாய்ப்பும் இதில் உண்டு நீங்கள் 333 கிலோமீட்டர் ஓட முடியாது எனில் 222 கிலோ மீட்டரை தேர்ந்தெடுத்து ஓடலாம் , அதுவும் முடியாதென்றால் 111 கிலோ மீட்டரை தேர்ந்தெடுக்கும் வசதி இந்த வகை மாரத்தானில் உள்ளது. ( நம்ம பயலுக கெட்டிகாரங்க என்பதற்கு மற்ற நாட்டைவிட இதுவே சாட்சி )


           பல அபாயங்கள் இதில் உள்ளது குறிப்பாக சில இடங்களில் 40 % ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கும். இதனால் சிலர் இறந்த சம்பவங்களும் உண்டு . (மெய்யாலுமே )



          "லின் ஹுவேல்ட் " என்ற ஆஸ்திரேலியர் 222 கிலோ மீட்டர் பிரிவில் வெற்றிபெற்று இருக்கிறார். 

                "ஐந்து நாட்களில் ஐந்து மாரத்தான்களை வென்று சாதனை படைத்த எனக்கு லே ,முதல் லடாக் வரை கால் விறைத்து ஓடி வந்ததை நினைத்தால் இந்து வரை கதி கலங்குகிறது எனபது லின் ஹுவேல்டின் பதிவு (போவியா ? போவியா ?)

என்ன மக்களே நம்ம ஊர் வீர சூரர்களை கலந்துகொள்ள செய்து நமது பெருமையை நிலைநாட்டலாமே ( பெண் கொடுக்கும் வீட்டார்கள் கவனத்திற்கு )



மேலும் இதை பற்றி அறிய :




நாளைக்கு வேற ஒரு நாட்டுல ஓடுவோம் தயாரா இருங்க நண்பர்களே !!!

                                                                                                                             நன்றியுடன் ஸ்ரீ 

5 கருத்துகள்:

  1. லே - லடாக் - ஓட வேண்டாம... அந்தப் பகுதிகளில் சாதாரணமாக நடந்தாலே மூச்சுத் திணறல் வரும், ஆக்சிஜன் குறைவு! இதுல எங்கே ஓடறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கும் போதே எனக்கும் மூச்சு வாங்கிவிட்டது

      நீக்கு
  2. நல்ல தகவல்தான் நண்பரே சுவாரஸ்யமாக செல்கின்றது.
    தங்களது தளத்தில் ஃபாலோவர் பாக்ஸ் வைக்கவும் பதிவு வெளியாவது அறிய முடியவில்லை - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. இதோ வைத்துவிட்டேன் அய்யா ... நன்றி தகவலுக்கு

    பதிலளிநீக்கு
  4. நண்பரே நான் சொன்னது

    இந்தத் தளத்தில் இணைக
    Google Connect

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...