ஞாயிறு, 19 ஜூன், 2016

ஓடு ராசா ஓடு - பகுதி 6

      மறுபடி ஓட தயாராகுங்கள் நண்பர்களே... 


 இந்தமுறை ஓடப்போவது அமெரிக்காவில். ஓட்டம் அதன் பெயருக்கேற்றாற்போல் பொறுமையான ஓட்டம்தான். ஆனால் ஓடி முடிக்கையில் நாக்கு தள்ளிவிடும் என்பது கூடுதல் தகவல்... 


    வாங்க ஓடுவோம் !


ஹார்டுராக்  என்ட்யூரன்ஸ் :


தூரம்          : 160 கிலோ மீட்டர் 


நேரம்          : 48 மணி நேரம் 


இடம்          : கொலாரேடோ, அமெரிக்கா 


இடர்கள்   : புயல் , ஆழமான பள்ளத்தாக்குகள் , அதிக உயரம் 




        கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரமான " சில்வர்டன் " என்ற இடத்தில் இந்தபொட்டி நடைபெறுகிறது.


  கடுங்குளிர், அதீத வெப்பம் போன்றவற்றை சமாளிக்கும் அத்தகைய சூழ்நிலையில் பழக்கப்பட்ட வீரர்கள் மட்டுமே இதை சிறப்பாக செய்ய முடியும்.


          இயற்கைக்  காட்சிகள், வானவில்லை ரசித்து  சில நேரம் நல்ல சில்லென்ற இடத்தில் ஓடி மனதை குளிர்வித்துக்கொள்வதைத் தவிர மற்றவை அனைத்தும் கும்பிபாகம்தான்.


           இந்த போட்டியில் ஓடும் தூரத்தில் கால்வாசி தூரம் அதாவது 10,000 மீட்டர் உயரத்தை ஏறித்தான் கடக்க வேண்டும். நம் சபரிமலை வாசிகளுக்கு கொஞ்சம் சுலபமாய் இருக்கலாம்.


               போட்டியை முடிக்கும் இடத்தில் முத்தமிட்டு அதாவது அங்கே இருக்கும் ஹார்டுராக் என்ற பாறையை முத்தமிட்டுத்தான் நீங்கள் போட்டியை முடிவு செய்யவேண்டும். 


              ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி ஜூலை மாதம் நடைபெறும்.


மேலதிக விவரங்களுக்கு :



இன்னும் ஒரே ஒரு ஓட்டம் பாக்கி... அதோடு நாளை சந்திப்போம்...
           
                                                                                                                          நன்றியுடன் ஸ்ரீ 




8 கருத்துகள்:

  1. இந்தவகை ஓட்டம் பற்றியும் அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை எத்தனை ஓட்டங்கள்...... தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்போம்!

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நன்றி அய்யா... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா

      நீக்கு
  4. நல்லது பாக்கி உள்ள அந்தஓட்டத்தையும் ஓடி பார்த்திடலாம்...

    பதிலளிநீக்கு
  5. வித விதமான ஓட்டங்கள் பற்றி வாசித்தோம் உங்கள் பகுதிகளை. சில அறிந்திருந்தாலும் உங்கள் பதிவிலிருந்து பல தகவல்கள் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...