செவ்வாய், 28 ஜூன், 2016

லெமூரியக் கண்டத்து மீன்கள் - நூல் அறிமுகம்

லெமூரியக் கண்டத்து மீன்கள் 



      சற்றேறக்குறைய  இந்த வருட்டத்தின் ஆரம்பத்தில் ஆன்மன் சார் அவர்களின் நட்பு வட்டத்திற்குள் நுழைந்திருந்தேன். புகழ்ச்சிக்காக அல்ல அவரின் கவிதை வரிகளுக்குள் எப்பொழுதுமே ஏதோ ஒரு காந்த சக்தியை உள்ளே வைத்து புதைத்து வைத்திருப்பார். அது நம்மை இழுத்து அந்த கவிதைக்குள்ளிருந்து வெளியே வரவிடாமல் செய்யும். 


 இப்பொழுதும் அதேதான் நடந்தது. ஆன்மன் சார் அவர்களிடமிருந்து நேற்றுதான் அவருடைய அன்பு பரிசாக லெமூரியக் கண்டத்து மீன்கள் கிடைக்கப்பெற்றேன். பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு. ஒரு கவிதை புத்தகத்தை வாசிக்க குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது நான் எடுத்துக்கொள்வதுண்டு. இது அப்படியான புத்தகம் அல்ல நண்பர்களே. முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கிவிட்டீர்கள் எனில் அனைத்தையும் வாசித்து, சுவாசித்து முடித்துதான் வைப்பீர்கள். அனைத்தும் அக்மார்க் கவிதைகள். 


 உள்ளே உள்ள ஒவ்வொரு கவிதைக்கான அதிகபட்ச மெனக்கெடல் தெரிகிறது. வாழ்த்துக்கள ஆன்மன் சார். சரி லெமூரியக் கண்டத்து மீன்களில் உள்ள சின்ன சின்ன சுவாரஸ்யங்களை பார்ப்போம்.

உயிர்ப்பு என்ற தலைப்பில் 
காற்றை  
          நிற்பந்திக்காதே 
          நூலைக் கைவிடு 
          பறக்கட்டும் 
          பட்டம் 

இடிந்தகரை பற்றிய ஒரு அருமையான கவிதை 
திமிங்கிலங்களாக 
          உருமாறி 
          கரை ஒதுக்கி 
          நிலம் புகுகின்றது 
          புதைக்க இடம் மறுக்கப்பட்ட 
          அணுக்கழிவு 

தனிமை பற்றிய கவிதை 
அபத்தமாய் 
          இருக்கிறது 
          தனிமையை 
          தனிமையெனச்
          சொல்வது  
     
இப்படி பல்வேறு  தலைப்புகளையும் லெமூரிய கண்டத்து மீன்கலாக்கி நீந்த விட்டிருக்கிறார். வாங்கி படியுங்கள் முடிப்பதற்குள் நீங்களும் நிச்சயம் ஒரு கவிதை எழுதலாம். 
விலை ரூ  50/-. தேங்கியூ ஆன்மன் சார்.

லெமூரியக் கண்டத்து மீன்கள் - கலர் கலராக நீந்துகின்றன .

ஆசிரியர் : ஆன்மன்
தொலைபேசி : 8760052320
இ-மெயில்  : aanmanchennai@gmail.com
விலை : ரூ 50

நன்றியுடன் ஸ்ரீ .

8 கருத்துகள்:

  1. சுருங்கச் சொல்லிய விளக்கமான நூல் விமர்சனம். பாராட்டுகள். நூல் வெளியீட்டாளர் முகவரி, விலை விபரம் போன்றவற்றையும் தந்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. நேற்று இதற்கு நான் ஒரு பின்னூட்டம் இட்ட நினைவு. காணோம்! நல்லதொரு பகிர்வு. எடுத்துக் காட்டி இருக்கும் வரிகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார் ... வேறு எதுவும் கோளாறா என்று தெரியவில்லை சார்

      நீக்கு
  3. அழகிய விமர்சனம் நன்று நண்பரே
    தங்களது பதிவு வெளியாவது தெரியவில்லை முடிந்தால் இந்த மின்ஞ்சலுக்கு அனுப்புக.... - கில்லர்ஜி

    sivappukanneer@gmail.com

    பதிலளிநீக்கு
  4. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.....

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...