வைகறை வைகறை
இது அவரின் முகநூல் கணக்கின் பெயர்... இன்றும் தொடர்பில் இருக்கிறார் கணிக்கின் வழி... ஆனால் ?
மணி கிட்டத்தட்ட மாலை ஆறு...
இது அவரின் முகநூல் கணக்கின் பெயர்... இன்றும் தொடர்பில் இருக்கிறார் கணிக்கின் வழி... ஆனால் ?
மணி கிட்டத்தட்ட மாலை ஆறு...
ஒரு நண்பரின் வீட்டின்முன் நின்றுகொண்டிருந்தேன்... என்னுடன் வந்த நண்பரின் அலைபேசி ஒலித்தது. எடுத்த மறுநொடியே அதிர்ச்சியான வார்த்தைகளை முனுமுனுத்துக்கொண்டிருந்தார்.
என்ன என்ற நான் கேட்ட அடுத்த நொடியில் வைகறை சார் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்றார் ????
அதிர்சியடைத்து உறுதிபடுத்துவதற்குள் புதுகையை கடந்து உண்மையிலேயே எங்களை பிரிந்து எங்களிடம் சொல்லாமல் அவரின் சொந்தஊரை நெருங்கியிருந்தார் அண்ணன் வைகறை.
என்னை எழுத தூண்டிய மனிதர். முதன்முதலில் என்னை வீதிக் கூட்டத்தில் கவிதை வாசிக்க வைத்த மனிதர். விதைக்கலாம் 25 நிகழ்வில் தானே முன்னின்று பல முன்னெடுப்புகளை செய்த மனிதர். என்னுடைய சொந்த வாழ்வின் பல நிலைகளில் என்னைப்பற்றி கவலைப்பட்டவர்களில் வைகறை அண்ணனும் ஒருவர்.
இறந்த இரண்டு நாட்களுக்கு முன் அலைபேசியில் பேசிக்கொண்டோம். அப்பொழுதுகூட அவர் ஏதும் சொல்லவில்லை என்னிடம்?
மருத்துவமனையில் அவதியுறும்போது அதன் வழியாக பல முறை சென்றேன் அப்பொழுதும் தெரியவில்லை அவர் அங்குதான் இருக்கிறார் என்று ?
எங்களின் கண்முன்னே காலத்திடம் ஒரு பெறும் கவிஞனை தொலைத்துவிட்டோம் !!!
எங்களின் நட்பையும் அன்பையும் நிருபிக்கும் வழியாக அந்த மாகவிஞனின் அன்பு மகனுக்கும் அவர் குடும்பத்திற்கும் உதவும் நோக்கில் அவர் மகனின் பெயரில் ஒரு சேமிப்பை ஏற்படுத்த ( FIXED DEPOSIT ) புதுகை வீதி இலக்கியக்களம் மற்றும் கணினி தமிழ்ச்சங்கம் ஒன்றிணைந்து இதுவரை 1,79,000 திரட்டியிருக்கிறது...
எங்களின் இலக்கு 5,00,000....
இதுவரை வைகறை அண்ணனுக்காக நிதிவழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு நீங்களும் உங்களால் இயன்ற ஒரு தொகையை தருமாறு விழைகிறேன்....
அந்த கவிஞனின் பெயர் நிலைத்திருக்கட்டும் உங்களால்...
நிதியளிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கணக்கிலேயே வரவு வைக்கலாம்.
First Name : MUTHU BASKARAN
Last Name : N
Display Name : MUTHU BASKARAN N
Bank : STATE BANK OF INDIA
Branch : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number : 35154810782
Branch Code : 16320
IFSC Code : SBIN0016320
CIF No. : 80731458645
நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக இருக்கும்.
vaigaraifamilyfund@gmail.com
மிஸ் யூ வைகறை அண்ணா !!!
இலக்கு அடைய உதவட்டும் நல்லுள்ளங்கள் !
பதிலளிநீக்குநன்றி அய்யா
நீக்குவைகறை - ஒரே ஒரு முறை தான் சந்தித்திருக்கிறேன் என்றாலும் மனதில் நிலைத்தவர்.... அதிர்ச்சியான மறைவு.
பதிலளிநீக்குஇலக்கை விரைவில் எட்ட வாழ்த்துகள்.
நற்பணி. ஃபேஸ்புக்கில் இவரின் நட்பு வட்டத்தில் இருந்தேன்.
பதிலளிநீக்குஇன்றும் இருக்கிறேன்
நீக்குஅந்த கவிஞரின் பெயர் நிலைத்திருக்கட்டும் உங்களால்...
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குநல்ல பணி. ஒரு முறை நேரில் சந்திப்பு பதிவர் விழாவில், அலைபேசியில் பேசியதுண்டு. என்றாலும் மனதில் நின்றவர். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியானது
பதிலளிநீக்குஆம் அய்யா
நீக்கு