வியாழன், 24 செப்டம்பர், 2015

வலைபதிவர் சந்திப்பு - கையேடு இது நம்ம ஏரியா

       வலைபதிவர் சந்திப்பு விழாவிற்கு இன்னும் குறைவான நாட்களே   உள்ள நிலையில் உலகமே  ஆவலோடு காத்திருப்பதை பார்க்கும்போது   எனக்கே பீபி  அவ்வப்பொழுது எகிறத்தான் செய்கிறது .... இருப்பினும்    நம்முடைய விழா என்பதால் எதுவும் சாத்தியமே...

   கையேடு தயாராகிக்கொண்டே இருக்கிறது. அதில் உங்களுடைய பெயர், வலைப்பூவின் பெயர், வலைப்பூவின் முகவரி, ஜிமெயில் முகவரி, ஊர், அலைபேசி எண் இதுபோன்ற செய்திகள் இடம்பெற்றிருக்கிறது. (நீங்கள் பதிவுசெய்ததை  வைத்துதான் இதை  செய்திருக்கிறோம்) 

   ஒரு புது முயற்சியாக இதில் உங்கள் ப்ளாகின் கீயு. ஆர் கோடை சேர்த்திருக்கிறோம். சிறப்பான செய்தி என்னவென்றால் ஆன்டிராய்டு அல்லது ஸ்மார்ட் போனில் கீயு. ஆர் கோடை  ஸ்கேன் செய்யும் வசதி இருக்கும். இதை பயன்படுத்தி ஒரு வினாடியில் உங்களது மற்றும் உங்களுடைய நண்பர்களின் தளங்களுக்குள் சென்றுவிடலாம்.
 


          








இதோ மேலே  ஒரு உதாரணம். இதை ஸ்கேன் செய்து பாருங்கள். இதைபோன்றே உங்களது கீயு. ஆர் கோட் நம்முடைய கையேட்டில் இடம்பெறவிருக்கிறது. அடுத்த பதிவோடு  நாளை சந்திக்கிறேன். வணக்கம்

             



ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் சந்திப்பு - கையேடு தொடர்பாக

                                        இந்த திருப்பு எங்க பேச்சுதான்  பேச போறேன்... ரவைக்கு துக்கமே வரமாட்டுது எப்போ வலைப்பதிவர் சந்திப்பு வரபோகுதுன்னு இருக்கு... மற சொல்லவேண்டிய விசயத்துக்கு வாரேன்...

                                     கையேட்டு வேல கடகடனு நடக்குது. உங்க போட்டா அனுப்சுவிட்டிகனா கொஞ்சம் சௌரியமா இருக்கும். எடுத்து டபக்குனு வச்சுருவேன்...

                                     சிலர் இன்னும் பதிவு பண்ணாம இருக்கிய அவுகலாத்துக்கும் ஒன்னே ஒன்னுதான் பதிவ பண்ணிருங்க... உங்க பேரு கையேட்டுல வரதுக்கு நீங்க பண்ண வேண்டியது அதுதான்...

                                       கூகுள் டூல்ல இருந்து தமிழ் பான்ட்  அப்டியே காப்பி பண்ணி பேஸ்ட் பண்ண யாரும் ஐடியா இருந்த குடுங்க வேல இன்னும் கொஞ்சம் சுலபமா முடியும்.

                                        சுவாரசியமா கொஞ்ச வேலைகள் பாத்துட்டு இருக்கோம்.. மீண்டும் சந்திப்போம் கையேட்டு வேல இருக்கு...  போய்த்துட்டு வாரேன் 

                                

வியாழன், 3 செப்டம்பர், 2015

வலைபதிவர் திருவிழா VERSION 6.0

அனைவருக்கும் வணக்கங்கனா.....

                                ஏதோ எனக்கு தெரிஞ்ச கோயமுத்தூர் பாசைல பேசுரேனுங்க... வெர்சனு 6.0- னாக்க  வேரொன்னுமில்லிங்க ஆறாவது ஆலோசன 
கூட்டத்ததானுங்க அப்டி சொல்லியிருக்கேன் .... நேத்து  கூட்டத்துல  ஒரே கூட்டமுங்க அங்கே இருந்த பெஞ்சியெல்லாம் புல்லாகிபோச்சுனா  
பாத்துகங்க எம்புட்டு ஆர்வமுன்னு... இதுல நா லாப்டாப்பு கொண்டுபோய் இருக்குற எல்லாரையும் பதிவுபண்ண சொல்லிபுட்டேன்... நேத்து என்ற  வேல அது மட்டும்தான் ...

                 14 குழு இந்த திருவிழாவுக்கான வேலைய பாக்குரோமுங்க .... இப்போ நம்ம மொத வேல என்னனாக்க  பதிவு பண்றதுதான்... பதிவு பண்ண ஒரு பத்து நொடிகள்தான் ஆகும்... நேரா இப்போ  என்ற வலைப்பக்கதுல   வலது மூலைல இருக்க போட்டோவ சொடுக்குங்க, அது நேரா திண்டுக்கல் தனபாலன் அய்யாவோட வலைப்பூவுக்கு கூட்டிபோகும்.... பதிவுபண்ணிட்டு வெரசா வாங்க... ஒரு முக்கியமான விசயம் சிறப்பு விருந்தினர் யாரு தெரியுமா? எனக்கு தெரியுமே!!! அதையும், நேத்து நடந்த கூட்டத்த பத்தியும்  இந்த வலைப்பதிவர் திருவிழாவா பத்தியும் இன்னும் நெறைய செய்தி தெருஞ்சுக்க எங்க வரணும்னாக்க...

அட அதேதானுங்க 
மின்னஞ்சல் முகவரி 
bloggersmeet2015@gmail.com
                               என்றா சம்முகம் வண்டிய விட்றா வலைபதிவர் திருவிழாக்கு பாக்க வேண்டிய வேல இன்னும் பாக்கி இருக்கு.....

                                                                                      நன்றியுடன் ஸ்ரீ 

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...