செவ்வாய், 28 நவம்பர், 2017

PADMAN

ஜனவரி 26 அன்று அக்க்ஷய் குமார் நடிப்பில் "PADMAN" என்றொரு திரைப்படம் வெளிவர இருக்கிறது... நம்முடைய கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமிகு . அருணாசலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டிருக்கிறது...

யார் இந்த அருணாச்சலம் முருகானந்தம்?

இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1998 ஆம் வருடம் சாந்தி என்பவரை மணக்கிறார். அவருடைய மனைவி மாதவிடாய் காலங்களில் பட்ட சிரமங்களை பார்க்கிறார். சானிட்டரி நாப்கின்களை தருவிக்கிறார். பல முன்னணி நிறுவனங்களின் நாப்கின்கள் விலை அதிகமாக இருக்கிறது. எனவே தானே அதற்கான வழியை தேடுகிறார்.

குறைந்த விலையில் தயாரிக்கக்கூடிய நாப்கின் இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார்... இன்று நம் நாட்டிலும் பிற நாடுகளுக்கும் அந்த இயந்திரத்தை செய்து கொடுக்கிறார்... இவை அனைத்தும் சாத்தியமாக அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பது படமாக வரவிருக்கிறது..

2016 ஆவது வருடம் இந்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவம் செய்திருக்கிறது... Times நாளிதழ் வெளியிட்ட 100 influence நபர்களில் இவரும் ஒருவர்...

அருணாசலம் முருகானந்தம், அக்ஷய் குமார், இயக்குனர் பல்கி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி!!!

https://en.m.wikipedia.org/wiki/Arunachalam_Muruganantham

#காத்திருக்கிறேன்

3 கருத்துகள்:

 1. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  பதிலளிநீக்கு

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம் "முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்" இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது ...