ஞாயிறு, 5 ஜூன், 2016

இறைவி - சினிமா விமர்சனம்


வித்யாசமான கதைக்களம் இறைவி. படம் பார்த்து வந்த கதையை சொன்னால் உங்களுக்கு படம் பற்றிய ஒரு வெறுப்பு வந்துவிடும் அளவிற்கு எங்கள் நகர இளைஞர்களும், திரையரங்க நிர்வாகிகளும் நடந்துகொண்டார்கள். யார் மீது உண்மையான தவறு என்பது எனக்கு இன்றுவரை தெரியவில்லை .

மழையின் சந்(த்)தத்தோடும் படம் துவங்குகிறது. ஒவ்வாரு ஆண்மகனும் உணர்ச்சிவசப்படும்போது தன்னிலை இழந்து தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் பிரச்சனைகளையும், அதனால் வாழ்க்கை தனக்கும் தன்னை சுற்றி இருப்பவருக்கும் எந்த நிலைவரை கொண்டு செல்கிறது என்பதோடு பெண்கள் படும் வேதனைகளும் ஆண்களால் அவர்கள் சந்திக்கும் சோதனைகளும் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு திசைமாறி செல்கிறது என்று சொல்லி இறுதியிலும் மழையோடு முடிகிறது படம். ஆங்காங்கே சிலப்பதிகார வாசனை.

எஸ்.ஜே.எஸ் ராஜா பாடலோடும் கையில் கோப்பயோடும் என்ட்ரி ஆகிறார் படம் முடியும் வரையிலும் மது வாசத்தோடே வலம் வருகிறார். மத்தபடி மனுஷன் இந்த படத்துல வேற லெவல். ஒவ்வொரு காட்சியிலும் கனகட்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் தியேட்டரில் தெறிக்கிறது.

விஜய் சேதுபதி ஒரு உச்சம் தொட்ட நிலையிலும் இப்படிப்பட்ட கேரடர்கள் அவர் மீது மேலும் மரியாதையை கூட்டுகிறது. சில இடங்களில் உணர்ச்சிவசப்பட வைக்கிறார் மனிதர். நடிப்பில் முதிர்ச்சி ஏறிக்கொண்டே இருக்கிறது.

விஜய் சேதுபதி போலவே பாபி சிம்ஹா படத்தை அடுத்த கட்டத்திற்கு கடத்திக்கொண்டே இருக்கிறார். அஞ்சலி, கமாலினி, பூஜா படத்தின் பிளஸ். மூன்றுபேருமே கலங்க வைக்கிறார்கள். ராதாரவி, கருணாகரன், சீனு மோகன் உணர்சிகளை கொட்டியிருக்கிறார்கள்.

சிவகுமார் விஜயன் கேமரா சகிதமாக படத்தோடு வாழ்ந்திருக்கிறார்.விவேக் ஹர்ஷன் எடிட்டிங் படத்தின் கூடுதல் பிளஸ்.

சந்தோஷ் நாராயணன் சார் பின்னணி இசை சூப்பர் முதல் பாட்டு மட்டும் ஓகே சார் மத்தது மனசுல நிக்கல. இன்னும் கொஞ்சம் எதிர்பாக்குறோம் சார்...

இந்த படத்தை பொறுத்தவரை இரண்டு பேருக்கு எனது நன்றிகள். முதலில் தயாரிப்பாளர் சி.வி.குமார் இந்த மாதிரி படங்கள் எடுப்பதற்காகவே அவருக்கு நமது பூங்கொத்து. இரண்டாமவர் கேப்டன் ஆப் த ஷிப் கார்த்திக் சுப்பராஜ். எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாத அதுவும் சில மென்களின் சில வுமங்களின் கதை என்று அவர் போஸ்டரில் சொன்னதை நிருபித்துவிட்டார். சொன்னதை செய்ததற்காகவே தாங்கஸ் சுப்பு சார். ஒரே மைனஸ் படத்தின் நீளம் அல்லது நான் முதல் வரியில் சொன்னது போல திரையரங்கில் எனக்கு கிடைத்த கசப்பான அனுபவம் கூட என்னை படம் நீளமென்று எழுத வைத்திருக்கலாம். அடுத்த படத்தில் கொஞ்சம் மது சீன்களை குறைங்க பாஸ்.


நீங்கள் இந்த படம் பார்க்க போனால் நிச்சயம் ஒரு ஒன்டர்புல் அனுபவம் கிடைக்கும்.

பன்ச் : இறைவி - நெஞ்சை சுடுகிறாள்

ஸ்ரீ ரேட்டிங் : 3.7/5

6 கருத்துகள்:

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...