வெள்ளி, 16 அக்டோபர், 2015

என் இன்றைய பயணம்..


ரீங்கார சத்தத்துடன் காலைப்பொழுது
தேநீர் பருகியபடி பண்பலைப்பாட்டு
அம்மாவின் அரவணைப்பாய் அலைபேசி அழைப்பு
கேட்க வேண்டிய கட்செவி குரல்கள்

குளிரும் தண்ணீரின் குறுகிய ஓசை
காதலியின் காதினில் கலகல பேச்சு
அடுப்பில் வேகும் சோற்றின் குமுறல்
முற்றத்தில் பங்கெடுத்த பாத்திர சண்டை

ஒலி எழுப்பும் இரு சக்கர வாகனம்
ஓரமாய் நடக்கும் பள்ளிச் சிறுவன்
கூவியபடி நகரும் கீரைப்பாட்டி
ஊர்ந்து செல்லும் கூனல்கிழவன்

அதட்டலுடன் சென்ற நகரக்காவலர்
அபாய சத்தத்தில் அதிவிரைவு பேருந்து
மெல்லச் சிரித்த கல்லூரிப் பெண்
கலாட்டாவினூடே கல்லூரி மாணவர்கள்

தெறிக்கும் வண்டியில் ஈவிரண்டு இளைஞர்கள்
பிழைப்புக்காய் அலறும் கிராமத்துவாசி
ஆசிரிய பெருமக்களின் காலை வணக்கம்

கடந்து சென்ற மூவிரண்டு சிறுவர்கள்
அன்பாய் அழைத்தான் எனதருமை மாணவன்
எடுக்க போன ஆங்கிலப் பாடம்
சவுண்ட்ஸ்

9 கருத்துகள்:

 1. ஆத்தாடி...நல்லாருக்கே...சோற்றின் குமறல்//

  பதிலளிநீக்கு
 2. அட! உங்கள் பயணத்தின் சௌண்ட் எங்கள் காதிற்கு இனிமையாக ஒலித்ததே!!!!

  பதிலளிநீக்கு
 3. நல்லா எழுதறீங்கப்பு....தொடருங்க....நாங்களும் இருக்கோம்ல...

  பதிலளிநீக்கு
 4. நல்லா எழுதறீங்கப்பு....தொடருங்க....நாங்களும் இருக்கோம்ல...

  பதிலளிநீக்கு
 5. ஸ்ரீ ஒரு தொடர்பதிவில் உங்களை இணைத்திருக்கிறேன். தொடருங்கள் ப்ளீஸ் http://makizhnirai.blogspot.com/2015/11/my-wish-list.html

  பதிலளிநீக்கு

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம் "முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்" இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது ...