செவ்வாய், 17 மார்ச், 2020

அபிதா - குழந்தை - நூல் விமர்சனம்

நூல் விமர்சனம் : 

"அபிதா"

1970 -இல் எழுதப்பட்ட ஒரு நாவல். இந்த நாவலின் கதையையும் அதன் தன்மையையும் உற்று நோக்கினால் சற்று விசித்திரமான அனுபவம் தான். ஏனெனில் லா.ச.ரா இதை தன்னுடைய 54 ஆவது வயதில் எழுதியிருக்கிறார். இன்னும் ஆராய்ந்தால் இது அவரது சொந்த கதையாகவோ அல்லது மிக நெருங்கிய வரின் கதையாகவோ இருக்க வாய்ப்பிருக்கிறது. இது அவருடைய இரண்டாவது நாவல். அந்த காலத்தில்  புதிய எழுத்து நடை அவருடையது.

ஒருவன் தான் வாழும் சமூகம் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது ? எப்படி இருக்கும் ? எப்படி இருக்க‌ வேண்டும் என்ற உணர்வுகளின் வெளிப்பாட்டை அதன் இலக்கியத்தினையும் , கலைகளையும் கொண்டு அறிந்து கொள்ளலாம். இவை இரண்டையும் சமூகத்தின் சாட்சியங்களாக நான் பார்க்கிறேன். இந்த கூறுகளின் அடிப்படையிலேயே லா.ச.ரா வின் 'அபிதா' வை பார்க்கிறேன்.

ஒரு ஆணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். ஒரு வேளை பெண்ணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருந்தால் அக்குவேர் ஆணி வேராக பிரித்து தொங்கவிட்டிருக்கலாமோ என்னவோ. உணர்வின் பெரும் போராட்டமாகவும் இதை நான் கருதவில்லை.  1970 இன் எதார்த்த வாழ்வியலை நாவலின் மூலம் பதிவு செய்திருப்பதாகவே கருதுகிறேன். 

ஒரு ஆணுக்கு பெண்ணின் மீதான பார்வை என்பது அந்த காலம் தொட்டு இன்றுவரை ஒரு சதவீதம் கூட மாறவில்லை என்பதை நாவலின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய கால ஓட்டத்தில் பார்த்தால் இன்றைய பெண்களின் நிலை அன்றைவிட  மிக மோசமானதாகவே இருக்கிறது. அது என்ன மோசம் எனில் ? அது நீங்கள் அறிந்திராததா என்ன!!! கடைசி காட்சியில் அபிதா மீது விழும் பொன்னரளி போல்  பெண்கள் மென்மையானவர்களாக இருக்கிறார்கள். பற்றி எரிந்து கொண்டிருக்கும் வண்டி போல் ஆண்கள் அவர்களை எட்டி நின்று எரித்துக் கொண்டிருக்கிறார்கள். ( எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது). 

நாவல் நிறைய வர்ணனைகளோடு , அதுவும் நீங்கள் இதுவரை கண்டிராத வர்ணனைகளோடு, உவமைகளோடு இருக்கிறது. புதிய வாசிப்பாளர்களுக்கு கொஞ்சம் இச் கொட்டும் ரகமாக இருக்கும். நீங்கள் வாசிப்பதை அனுபவிப்பவர்கள் எனில் இது உங்களுக்கு கிளாசிக் ரகம். வாழ்க்கை என்பது எதார்தங்களின் ஊற்று.  அதை புரிந்து கொள்ளவதும் புரிய வைப்பதும் சவாலான ஒன்று. அதை தன்னுடைய எழுத்து பாணியில் சமரசம் செய்து கொள்ளாமல் நமக்கு தந்திருக்கிறார் லா.ச.ரா‌. 

அபிதா - குழந்தை

நூல் : அபிதா
ஆசிரியர் : லா.ச.ரா
விலை : ரூ.90/-
வெளியீடு : பற்றினை பதிப்பகம்

விமர்சனம்: 
பா. ஸ்ரீமலையப்பன்




12 கருத்துகள்:

  1. வாசிக்கத் தூண்டும் விமர்சனம். தொடர்ந்து எழுதுங்கள் !

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக அக்குவேர் ஆணி வேராக பிரித்து தொங்கவிட்டு இருப்பார்கள்...

    பதிலளிநீக்கு
  3. அருமையான கண்ணோட்டம்

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  4. //புதிய வாசிப்பாளர்களுக்கு கொஞ்சம் இச் கொட்டும் ரகமாக இருக்கும்//

    இச் கொட்டுமா?  உச் கொட்டுமா?!!

    அபிதா படிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை உண்டு.

    பதிலளிநீக்கு
  5. லா ச ரா வை ரசிப்பதே ஒரு தனி சுகம் தான். அருமையான விமரிசனத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 18 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், தங்கள் கோரிக்கையை ஏற்று தங்கள் வலைத்தளமும் எமது திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது.

    எமது திரட்டியை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தற்போது, தங்களது அபிதா – குழந்தை – நூல் விமர்சனம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பி மூன்று நாட்கள் ஆகிவிட்டது... தயவு செய்து பார்க்கவும்

      நீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...