செவ்வாய், 22 அக்டோபர், 2019
தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்
திங்கள், 21 அக்டோபர், 2019
எல்லோரிடமும் ஒரு கதை
"எல்லோரிடமும் ஒரு கதை" ஆங்கிலத்தில் சவிதா ஷர்மா எழுதிய நாவலை தமிழில் மாலதி கிருஷ்ணன் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கதையில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு நம் உணர்வுகளை கட்டிப் போட்டிருக்கிறார் சவி சர்மா அவர்கள். இந்த நூறு அறிமுகமாகி அறிமுகமாகி 100 நாட்களில் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் தாண்டி விற்பனையில் சாதனை புரிந்திருக்கிறது.
ஒரு பெண் எழுத்தாளராக விரும்புகிறாள், அவளுக்கு கதை கிடைக்கவில்லை அந்த சமயத்தில் காபி கபேவில் ஒரு இளைஞனை சந்திக்கிறாள் அவனை கொண்டு ஒரு கதைக்கரு அவளுக்கு கிடைக்கிறது அவனோடு பயணிக்கிறாள், அவன் பயணம் செய்வதையே பெரிதும் விரும்புகிறான் அதைப்பற்றி எழுத நினைக்கிறார் நினைக்கிறார், இவளுக்கு அவன்மீது தன்னை அறியாமல் காதல் பிறக்கிறது அவனுக்கும் இவள் மீது காதல் பிறக்கிறது இருந்தாலும் இவளை விட்டுவிட்டு அவன் பயணம் செய்வதையே விரும்புகிறான். திரும்பவும் இவர்கள் பார்த்துக் கொண்டார்களா கொண்டார்களா என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமான முடிச்சுகளோடு கதையை முடிக்கிறார் சவி ஷர்மா.
மொழியாக்கம் செய்ததில் மாலதி கிருஷ்ணன் அவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த புத்தகத்தில் இருந்து இருந்து சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் அடைகிறேன் மகிழ்ச்சி அடைகிறேன் அடைகிறேன்.
1. மக்களுக்கு கதைகள் தேவை.காதலின், நம்பிக்கையின், வாழ்க்கைப் போராட்டத்தின், ஞானத்தின், சில சமயம் வலியின் கதைகள் தேவை.
2. ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒரு கதை உண்டு உண்டு. ஒவ்வொருவரும் ஒரு எழுத்தாளர். சில புத்தகங்களில் எழுதப்படும், சில மனதிற்குள் அடைந்துவிடும்.
3. காதல் சக்தி வாய்ந்தது. நாம் கற்பனையில் செய்ய முடியும் முடியும் முடியும் என்று எண்ண முடியாததையும் முடியாததையும் செய்ய வைக்கும்.
4. எல்லா நம்பிக்கைகளும் விட்டுப் போனாலும், சில பந்தங்களை உடைக்க முடியாது, நாம் யார் என்னவாக இருந்தோம், என்னவாக ஆக கூடும் என்பதை எடுத்துக்காட்டும். அனைத்திற்கும் நடுவில் இயல்பானது நம்மை வந்தடையும்.
5. ஒரு ஆண் செய்யக் கூடியவற்றில் மோசமானது ஒரு பெண்ணை தன் மேல் மேல் தன் மேல் மேல் காதல் கொள்ள வைத்து அவளை பதிலுக்கு காதலிக்காமல் இருப்பதுதான்.
இப்படி பல்வேறு அருமையான சொற்றொடர்களை அமைத்திருக்கிறார் சவி ஷர்மா இப்படிப்பட்ட வரிகளை அருமையாக மொழிபெயர்த்த மாலதி கிருஷ்ணன் அவர்களுக்கும் நம்முடைய நன்றியை சொல்லித்தான் ஆக வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும்போது இந்த கதை உங்களை சுற்றிக்கொள்ளும் அது ஒரு கதை சொல்லும். ஆம் சவி ஷர்மா சொல்வதைப்போல எல்லோரிடமும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.
நூல் : எல்லோரிடமும் ஒரு கதை
ஆசிரியர்: சவி ஷர்மா
தமிழில்: மாலதி கிருஷ்ணன்
பதிப்பகம்: வெஸ்ட்லேண்ட்
விலை: 150
பக்கம்: 157
சனி, 19 அக்டோபர், 2019
மரங்களும் மனிதர்களும்
திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் மரங்களும் மனிதர்களும் என்ற நூலில் மரத்தின் தலைப்புகளில் 10 சிறுகதைகளை எழுதியிருக்கிறார் ஒவ்வொன்றும் மரத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவினை குறிப்பதாக இருக்கிறது.
கதையின் தலைப்புகளே வேப்பமரம், புளியமரம், பலாமரம், முருங்கை மரம், ஆலமரம், அரசமரம்என்று மரங்களின் பெயர்கள் வரிசையாக இருக்கிறது. மரங்களோடு நமக்கு இருக்கும் உறவுகளை அவற்றுடன் நாம் பகிர்ந்துகொள்ளும் உணர்வுகளை சார்ந்து கதைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெரிய மொழிநடை இல்லையென்றாலும் நம்மால் கதையோடு சிறிதேனும் பயணிக்க முடிவதாக நடை அமைந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
மரங்களோடு நமக்கு இருக்கும் உறவு என்பது ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. மாறாக நாம் இப்போது வாழும் காலத்தில் மரங்கள் மீதான விழிப்புணர்வு சற்று குறைந்து இருக்கிறது. இதை எடுத்துக்காட்டும் விதமாக இரண்டு மூன்று கதைகள் அமைந்திருக்கிறது. அதிலிருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு படிப்பினையை நமக்கு வழங்குவதாக நமக்கு வழங்குவதாக இருக்கிறது, இருந்தாலும் கதை சொல்லப்பட்ட விதத்தில் சற்று தொய்வு இருப்பதாகவே தோன்றுகிறது.
மரத்தையும் குழந்தைகளையும் நாம் வேறுவேறாக நினைப்பதில்லை என்பதை என்பதை ஒவ்வொரு கதையுமே எடுத்துச் சொல்கிறது. வாசிப்பதற்கு மிக எளிதான புத்தகம் புத்தகம். புதிய வாசகர்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல புத்தகம் இது. இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி என்னவெனில் மரம் இல்லையேல் மனிதர்கள் இல்லை மரங்களை நம்மை விட வேறு யாரும் பார்த்துக் கொள்ளவும் முடியாது பாதுகாக்கவும் முடியாது என்பதை புரிந்து கொண்டால் மரங்களும் வளரும் நல்ல மனங்களும் வளரும்!!!
நூல் : மரங்களும் மனிதர்களும்
ஆசிரியர்: சாந்தகுமாரி சிவகடாட்சம் பதிப்பகம் : சாந்தி சிவா பப்ளிகேஷன்
விலை :100 ரூபாய்
நூல் விமர்சனம் - அஞ்ஞாடி
அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...
-
சற்றுமுன் முகநூலில் "சுடச்சுட ஒரு விழிப்புணர்வு பதிவு" என்று பதிவிட்டேன் . மக்களிமிருந்து அமோக வரவேற்பு ,என்னடா என்று பா...
-
வீதி இலக்கியக் களம் - புதுக்கோட்டை கடந்த ஞாயிறு (20-06-2016) அன்று நடைபெற்ற வீதி இலக்கியக் கூட்டத்தில் நான் வாசித்த கவிதை :...
-
கருப்பன் அவன் காவலாளி ஊரிலேயே உயரமானவன் பறந்து விரிந்த தோல்கள் முடியும் அடர்த்தி வயது ஒரு தொண்ணூறு எப்போதும் சிரித்த முகம் எதற்கும் க...