இதோ வெகுநாள் கழித்து வலையுலக நட்புக்களை சந்திப்பதில் மகிழ்வு .
இனி முடிந்தவரை தினமும் ஒரு பதிவையேனும் உங்களிடம் பகிர்ந்து உங்களோடு சேர்ந்து பயணிக்க முயல்கிறேன் .
இன்று புத்தக தினம் என்பதால் உங்களிடம் ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்ய விழைகிறேன்.
இன்று வீதி கலை இலக்கிய அமைப்பில் எறவானம் என்ற கவிதை நூலை படித்து விமர்சனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது.
கவிதை நூலை பற்றி சொல்லவேண்டுமெனில் , நிச்சயம் இந்த நூலை படித்து கீழே வைக்கும்போது நீங்கள் ஒரு பெரிய மாறுதலுக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்பது என் எண்ணம்.
புத்தகம் சமூகத்தையும்,நிகழ்கால அரசியலையும் , சாதிய வர்க்கத்தையும் வறுத்து எடுத்து(வை)ரைக்கிறது. இந்நூலை கவிஞர் வினையன் அவர்கள் எழுதியிருக்கிறார் .
சொற்களில் புகுந்து விளையாண்டிருக்கிறார் கவிஞர். மனதில் ஒரு சொல் எப்படி எழுமோ அதை அப்படியே வார்த்து கவிதையாய் கொட்டியிருக்கிறார். முடிந்தால் படித்துப்பாருங்கள்.
ஒரே ஒரு கவிதையின் சாரத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்
வயோதிகன் ஒருவன் இறந்துவிட்டான். சுடுகாட்டில் அவன் பிள்ளை சொந்த பந்தங்கள் எல்லாம் கொள்ளிவைத்துவிட்டு போய்விடுகிறார்கள் . இப்பொழுது சுடுகாட்டில் வெட்டியானும் எறியும் பிணமும் மட்டும்தான். வெட்டியான் அவரிடம் என்னை சாதி சொல்லி கேலிசெய்தாயே என்று மணிக்கட்டில் ஒரு அடி , இதனை பேருக்கு வெட்டியான் நீ உனக்கு யாருடா கொள்ளிவைப்பானு கேட்டியேன்னு முழக்காலு மூட்டுல ரெண்டு அடி பாத்தியாடா செத்தா நீயும் நானும் சாம்பல் தாண்டானு சொல்கிறபடி ஒரு கவிதை .... ஆனால் கவிதையாய் படிக்கும்போது செவிட்டில் அறைந்தாற்போல் இருந்தது .
நண்பர்களுக்கு இனிய புத்தக தின வாழ்த்துக்கள் .

எறவானம் - மேஜிக்
நண்பர்களுக்கு இனிய புத்தக தின வாழ்த்துக்கள் .
--- ஸ்ரீ
தொடருங்கள் நண்பரே
பதிலளிநீக்குநல்லது சார்
நீக்குபுத்தக நாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி
நீக்குதினசரி ஒரு பதிவா ?சபாஷ் சரியான போட்டி !கலக்குவோம் வாருங்கள் சகோ :)
பதிலளிநீக்குதொடர்வோம்
நீக்குநல்ல புத்தகமாயிருக்கும் என்று தெரிகிறது!
பதிலளிநீக்குநல்ல புத்தகம்தான்
நீக்குஅருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
கவிதையை இங்கு பகிர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
பதிலளிநீக்கு