திங்கள், 24 ஏப்ரல், 2017

பொக்கிஷம்

     குழந்தைகளை புரிந்துகொள்வதென்பது ஒரு கலை.  அவர்களோடு இணைந்து பயணித்தால் மட்டுமே அதில் வெற்றிபெற முடியும். இங்கு குழந்தை தானாய் வெற்றி பெறவேண்டும் என்பதைவிட நாம் முன்கூட்டியே  வெற்றிக்கான இலக்கை அவர்களுக்கு குறிப்பால் உணர்த்திக்கொண்டே இருக்கிறோம் என்பதை எத்தனை பெற்றோர்கள் உணர்திருக்கிறார்கள் என்பது வினாக்குறியே ? அப்படியே உணர்ந்தார்கள் என்றாலும் அதிலிருந்து எத்தனை பெற்றோர்கள் மீண்டு வருகிறார்கள் என்பதிலும் ஒரு நூறு வினாக்குறியை இட்டுக்கொள்ளுங்கள் ??? 


    உதாரணமாக என்னிடம் பயிலும்  ஆறாம் வகுப்பு மாணவனின் அம்மா என்னை சந்திக்க வந்தார்கள் . என்ன என்று வினவுவதற்கு முன்னமே சார் என் பையன் வீட்டுக்கு வந்ததுமே பைய தூக்கி போட்டுட்டு விளையாட போய்விடுகிறான் சார் என்றார்கள். இப்படியே விளையாடினால் அவன் எப்படி சார் முன்னுக்கு வர முடியும். எனக்கு அவனை பற்றிய நிறைய கனவுகள் இருக்கிறது சார் . அவன் நன்றாக படித்தால் என்ன வேண்டுமானாலும் படிக்க வைப்போம் சார் என்றார்கள்... நானோ அம்மா பையன் விளையாடுவது உடல் நலத்திற்கும் அவன் மனத்தால் தன்னை அடுத்து ஒருமுகப்படுத்துவதர்க்கும் விளையாட்டு தேவைதான் என்றேன். இல்லை சார் அவன் ஐந்து மணிக்கு போனால் எட்டு மணிக்குதான் வருகிறான் என்றார்கள். சரி உடனே புரிய வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன்  மாணவனிடம் விசாரித்ததில் அவன் அப்படிதான் இருக்கிறான் என்பதை தெரிந்து உறுதிபடுத்தி அவனுக்கு அறிவுரை கூறி இனி நீ எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை படிக்கிறாய் என்பதை டைரியில் எழுதி தினசரி  அம்மாவிடம் கையொப்பம் பெற்றுவா என்று சொல்லி அனுப்பி வைத்தேன்... 

இதில் பிரச்சனையை ஒரு பக்கம் தீர்த்து வைத்தேன் என்பதைவிட அவனுடைய கனவுகள் என்னவாய் இருக்குமோ ? அவன் கனவுகள் பொய்த்துபோய்விடுமோ என்ற பயமே அதிகரித்தது ?

குழந்தைக்கு நல்லது செய்கிறேன் பெயரில் கனவுகள் மறகடிக்கப்பட்டும், சில நேரங்களில் தியாக பொருளாகவும் மாறிபோகிறது. மாறாக பல்வேறு துறைகளை பற்றி அவனுக்கு சொல்லியும் குடும்பத்தின் பொருளாதாரத்தை சொல்லியும் அவன் வளர்க்கப்படும்போது குழந்தை தானாகவே தன் மனதிற்குள் கணக்கிட்டு தன்னுடைய துறையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது என் எண்ணம் . 

பெற்றோர்களே 

புரிந்துகொள்ளுங்கள் . அவர்கள் உங்கள் கனவுதான் என்றாலும் அவர்களுக்கென்றும்  கனவுகள் இருக்கிறது.
           
அவர்கள் உங்களுக்காக நீங்களே படைத்துக்கொண்ட பரிசு. அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றி அதை பரிசளியுங்கள்.

அவர்களுக்காக நீங்கள் பெரிதாய் வேறென்ன செய்ய வேண்டும் 


                                                                                                       நட்புடன் ஸ்ரீ 
                                                                                   

7 கருத்துகள்:

  1. நல்ல கருத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான உளவியல் எண்ணம் வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. இந்த விளையாட்டு புத்தி நிரந்தரமில்லை ,ஒரு வயதில் பொறுப்பு வந்து விடும் :)

    பதிலளிநீக்கு
  4. நல்ல விஷயத்தினைச் சொல்லி இருக்கீங்க ஸ்ரீ. பல பெற்றோர்கள் தாங்கள் செய்ய முடியாததை தங்கள் குழந்தைகள் மூலம் செய்ய நினைக்கிறார்கள்....

    நல்ல பகிர்வு. பாராட்டுகள் ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை. குழந்தைகளுக்கு புரிய வைப்பதை விட பெற்றோருக்கு புரிய வைப்பதே கடினம்.

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...