வலைபதிவர் சந்திப்பு விழாவிற்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் உலகமே ஆவலோடு காத்திருப்பதை பார்க்கும்போது எனக்கே பீபி அவ்வப்பொழுது எகிறத்தான் செய்கிறது .... இருப்பினும் நம்முடைய விழா என்பதால் எதுவும் சாத்தியமே...
கையேடு தயாராகிக்கொண்டே இருக்கிறது. அதில் உங்களுடைய பெயர், வலைப்பூவின் பெயர், வலைப்பூவின் முகவரி, ஜிமெயில் முகவரி, ஊர், அலைபேசி எண் இதுபோன்ற செய்திகள் இடம்பெற்றிருக்கிறது. (நீங்கள் பதிவுசெய்ததை வைத்துதான் இதை செய்திருக்கிறோம்)
ஒரு புது முயற்சியாக இதில் உங்கள் ப்ளாகின் கீயு. ஆர் கோடை சேர்த்திருக்கிறோம். சிறப்பான செய்தி என்னவென்றால் ஆன்டிராய்டு அல்லது ஸ்மார்ட் போனில் கீயு. ஆர் கோடை ஸ்கேன் செய்யும் வசதி இருக்கும். இதை பயன்படுத்தி ஒரு வினாடியில் உங்களது மற்றும் உங்களுடைய நண்பர்களின் தளங்களுக்குள் சென்றுவிடலாம்.
இதோ மேலே ஒரு உதாரணம். இதை ஸ்கேன் செய்து பாருங்கள். இதைபோன்றே உங்களது கீயு. ஆர் கோட் நம்முடைய கையேட்டில் இடம்பெறவிருக்கிறது. அடுத்த பதிவோடு நாளை சந்திக்கிறேன். வணக்கம்