வியாழன், 13 ஆகஸ்ட், 2015

செம்மொழியின் தொன்மைகள்

கற்கண்டாம் நற்கனியாம் முப்பாலும்
எடுத்துரைத்த முதுமொழியாம் - அதுவே
நம் செம்மொழியாம்

மூத்தோரை பணிந்து  வேண்டி
 எல்லோரும் இன்புற்று வாழும்
அழியாப் புகழ்மொழியாம் - அதுவே
நம் செம்மொழியாம்

 அழகான உடை உடுத்தி நவரத்தின மாலை சூடி
மாசில்லா நாகரிகம் உருவாக்கிய
மங்காத நல்மொழியாம் - அதுவே
நம் செம்மொழியாம்

வாயார வரவேற்று, வயிறார உணவு ஈண்டு
வற்றாத புகழ் கொண்டு வந்தாரை வாழவைக்கும்
வாடாத மென்மொழியம் - அதுவே
நம் செம்மொழியாம்

பன்னூறு புலவர்களும் பார்போற்றும் அறிஞர்களும்
பாரினிலே தோன்ற செய்த
பழமையான தமிழ்மொழியாம்- அதுவே
நம் செம்மொழியாம்





7 கருத்துகள்:

  1. இந்த வேகத்தில் போனால்
    இரண்டு வாரத்தில் தமிழின் முன்னணிப் பதிவராகி விடலாம் ..

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி அய்யா!!! நீங்கள் கொடுத்த உத்வேகம் மட்டுமே என்னை எழுதவைத்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. மதுவின் அறிமுகத்தால் இங்கு வந்தேன். கவிதை அருமை Google Friend Connect யை சேர்க்கவும்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி! தங்கள் கூறியவாறே செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. பதில்களை பதிலளி பட்டனை அழுத்தி எழுதுங்க ...

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...