காலையில் திரு. கஸ்தூரி ரெங்கன் அய்யா அவர்களின் ஒரு கவிதையினை ''வலியுணர் இதயங்கள் வடிக்கும் கண்ணீர்
கவிதை? என்பதனை கருவாக கொண்டு எழுதிய கவிதை. காதலன் காதலியின் திருமணத்திற்கு செல்வது போன்ற சூழலை மையபடுதிக்கொண்டேன்.
முடிந்தது !!!
அமைதியான அந்திப்பொழுது கதிரவன் ஒளிபரப்பி
அழகை மறையும் நேரம்,
மனம் மட்டும் அலைபாய்ந்தது
மொட்டுக்கள் விரியத் துவங்கின
ஏன் இதயமோ சுருங்கத் துவங்கியது
இருட்டத் துவங்கியது, உடம்போ
நடுங்கத் துவங்கியது !
என்செய்வது மானிடப் பிறப்பில் நானும்
ஒரு மடையன் என்று நினைத்துக்கொண்டேன்,
கரணம் சொல்லமுடியவில்லை
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை மறுநாள்
நடக்கவிருக்கும் நிகழ்வு மனக்கண்ணில்
ஒளிபிழம்பாய் சிதறியது!
பொழுது புலர்ந்தது புலரும் முன் எழுந்தேன்
உறங்கினால்தானே எழுவதற்கு!
புத்தாடை உடுத்தினேன் புறப்பட்டேன் சாதிக்க
பேருந்தில் ஏறி அமர்ந்தேன்,
நடத்துனர் கேட்ட சில்லறையை அள்ளிக்கொடுத்தேன்.
புறப்பட்டது, மனதில் புத்துணர்ச்சி - நின்றது
கிழே இறங்கினேன், ஓடினேன் வேகமெடுத்து ,
போனேன் அங்கே, வெற்றி பெற்றேன்!!!
குண்டு வெடித்தது போல் ஒரு சத்தம்,
தலையில் மோதிக்கொண்டேன் !
உண்மை புரிந்தது, வெற்றி என் கனவில்!
பேருந்தின் ஒரு சக்கரம் பழுதானது,
உச்சந்தலை சுட்டது:நெற்றியில் வியர்வை
கொப்பளித்தது - கண்கள் இருட்டின,
இமைகள் சுருண்டது: மூச்சு விடவில்லை ,
உதடுகள் மௌனம் சாதித்தது - செவிகள்
கேட்க்க மறுத்தது, இதயம் படபடத்தது,
கை கால்கள் செயழிழந்தது!!!
உள்ளுக்குள் புழுங்கினேன், இனி ஒன்றும்
நான் நினைத்தது நடக்கபோவதில்லை.
உண்மை தெரிந்தது, உலகம் புரிந்தது:
காரணம் நான் மறைத்தது மட்டுமே.
என்னவளின் திருமணம் இன்றுதான்,
அத்தனையும் நிழல் என்றுணர்ந்தேன்,
அவள் பின்பம் மட்டும் மனக்கண்ணில் ஓடியது!
சோக பாடல்களை வாய் முணுமுணுத்தது,
தத்துவங்கள் எழுத காகிதம் தேடினேன்.
வேறென்ன செய்வது, செய்வதற்கு ஒன்றுமில்லை,
தொலைத்துவிட்டேன் அவளை - சொல்லியிருக்கலாம்
என் காதலை, இன்னும் சொல்லவில்லை அவளிடம்.
சொல்ல நேரம் வந்தபோதும் அவள் கல்விதான்
என் கையை பிடித்து நிறுத்தியது.
சொல்லி அவள் வெறுத்திருந்தால், அப்போதே தோற்றிருப்பேன்.
சொல்ல வேண்டாம்! சொல்ல வேண்டாம்!
என் மனக்குரல் என்னிடம் குமுறியது
தேற்றினேன் என் மனதை - எப்படி
எனக்கே தெரியவில்லை.
போனது போகட்டும், இனியும் வேண்டாம்!
உயிர் பிரியும் வரை அவளுக்கிடம் என் மனதில்.
என் காதல்...............................
தலைப்பில் உள்ளது பதில் !!!!!
நட்புடன் ஸ்ரீ....
கவிதை? என்பதனை கருவாக கொண்டு எழுதிய கவிதை. காதலன் காதலியின் திருமணத்திற்கு செல்வது போன்ற சூழலை மையபடுதிக்கொண்டேன்.
முடிந்தது !!!
அமைதியான அந்திப்பொழுது கதிரவன் ஒளிபரப்பி
அழகை மறையும் நேரம்,
மனம் மட்டும் அலைபாய்ந்தது
மொட்டுக்கள் விரியத் துவங்கின
ஏன் இதயமோ சுருங்கத் துவங்கியது
இருட்டத் துவங்கியது, உடம்போ
நடுங்கத் துவங்கியது !
என்செய்வது மானிடப் பிறப்பில் நானும்
ஒரு மடையன் என்று நினைத்துக்கொண்டேன்,
கரணம் சொல்லமுடியவில்லை
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை மறுநாள்
நடக்கவிருக்கும் நிகழ்வு மனக்கண்ணில்
ஒளிபிழம்பாய் சிதறியது!
பொழுது புலர்ந்தது புலரும் முன் எழுந்தேன்
உறங்கினால்தானே எழுவதற்கு!
புத்தாடை உடுத்தினேன் புறப்பட்டேன் சாதிக்க
பேருந்தில் ஏறி அமர்ந்தேன்,
நடத்துனர் கேட்ட சில்லறையை அள்ளிக்கொடுத்தேன்.
புறப்பட்டது, மனதில் புத்துணர்ச்சி - நின்றது
கிழே இறங்கினேன், ஓடினேன் வேகமெடுத்து ,
போனேன் அங்கே, வெற்றி பெற்றேன்!!!
குண்டு வெடித்தது போல் ஒரு சத்தம்,
தலையில் மோதிக்கொண்டேன் !
உண்மை புரிந்தது, வெற்றி என் கனவில்!
பேருந்தின் ஒரு சக்கரம் பழுதானது,
உச்சந்தலை சுட்டது:நெற்றியில் வியர்வை
கொப்பளித்தது - கண்கள் இருட்டின,
இமைகள் சுருண்டது: மூச்சு விடவில்லை ,
உதடுகள் மௌனம் சாதித்தது - செவிகள்
கேட்க்க மறுத்தது, இதயம் படபடத்தது,
கை கால்கள் செயழிழந்தது!!!
உள்ளுக்குள் புழுங்கினேன், இனி ஒன்றும்
நான் நினைத்தது நடக்கபோவதில்லை.
உண்மை தெரிந்தது, உலகம் புரிந்தது:
காரணம் நான் மறைத்தது மட்டுமே.
என்னவளின் திருமணம் இன்றுதான்,
அத்தனையும் நிழல் என்றுணர்ந்தேன்,
அவள் பின்பம் மட்டும் மனக்கண்ணில் ஓடியது!
சோக பாடல்களை வாய் முணுமுணுத்தது,
தத்துவங்கள் எழுத காகிதம் தேடினேன்.
வேறென்ன செய்வது, செய்வதற்கு ஒன்றுமில்லை,
தொலைத்துவிட்டேன் அவளை - சொல்லியிருக்கலாம்
என் காதலை, இன்னும் சொல்லவில்லை அவளிடம்.
சொல்ல நேரம் வந்தபோதும் அவள் கல்விதான்
என் கையை பிடித்து நிறுத்தியது.
சொல்லி அவள் வெறுத்திருந்தால், அப்போதே தோற்றிருப்பேன்.
சொல்ல வேண்டாம்! சொல்ல வேண்டாம்!
என் மனக்குரல் என்னிடம் குமுறியது
தேற்றினேன் என் மனதை - எப்படி
எனக்கே தெரியவில்லை.
போனது போகட்டும், இனியும் வேண்டாம்!
உயிர் பிரியும் வரை அவளுக்கிடம் என் மனதில்.
என் காதல்...............................
தலைப்பில் உள்ளது பதில் !!!!!
நட்புடன் ஸ்ரீ....
வணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குமனம் தொட்டுப் போனது உங்கள் கவிதை!
உணர்ச்சிகளைக் கொட்டி உருவங்கொடுத்த கவிதை!
காட்சியாய் மனதில் விரிந்தது சகோ!
மனமார்ந்த பாராட்டுக்கள்!வாழ்த்துக்கள்!
தட்டச்சும்போது வரும் எழுத்துப் பிழைகளைக் கவனியுங்கள்!
மிகச் சிறப்பு!
மிக்க நன்றி அம்மா... சரி செய்துகொள்கிறேன்... உங்கள் பாராட்டு மேலும் எழுத தூண்டுகிறது...
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குமுடிந்ததா..? - காதல்...சொல்லாமலே...!
விடிந்ததா...?-பொழுது... புலர்ந்ததா ... !
மலர்ந்ததா...?-மடிந்ததா...மறுபடியும்...!
முடிந்தால்... தொடர்ந்துவிடும்... முடிந்துவிடும்...!
முடிந்தது...! தொடர்ந்துவிடும்...!
வாழ்த்துகள்.
கண்டிப்பாய் தொடரும் அய்யா... கருத்திடமைக்கு நன்றி
நீக்கு