“If they don’t learn the way we teach, can weteach them the way they learn?”Dr Harry T. Chasty
என்னவொரு அருமையான வாசகம்!!! நாம் கற்றுக்கொடுக்கும் வழியில் அவர்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நாம் ஏன் அவர்கள் வழியில் சென்று கற்றுக்கொடுக்கக் கூடாது என்று வினா எழுப்புகிறார் ஹாரி சாஸ்டி..
இந்தியாவில் மொத்தமாக 10-15 % பள்ளி செல்லும் மாணவர்கள் கற்றலில் குறைபாடு உடைய மாணவர்கள் என்று கூறுகிறது MDA ஆய்வு. அதாவது ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் இருந்தால் அதில் சராசரியாக ஆறு மாணவர்கள் கற்றல் குறைபாடு உடையவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த ஆறு மாணவர்களும் டிஸ்லெக்ஸ்சியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. இதில் மெதுவாக கற்கும் மாணவர்களும் அடங்குவர்.
ஆரம்பத்திலேயே டிஸ்லெக்ஸ்சியா குறைபாடு உடையவராக கண்டறியப்பட்டால் அவர்களை வெகு விரைவிலேயே சரி செய்துவிட முடியும்.
டிஸ்லெக்ஸ்சியாவா குறைபாடு உள்ள மாணவர்கள் கீழ்கண்ட வகைகளில் பாதிக்கப்பட்டிருப்பர்:
௧. கவனக்குறைவு ஏற்படுதல் .
௨. வாசித்தலில் குறைபாடு
௩. உடல் இயக்க அசைவுகளில் குறைபாடு
௪. மொழியாற்றளில் குறைபாடு
௫. பேசுவதில் பிரச்சனை
௬. சமூகம் சார்ந்த செயல்களில் குறைபாடு
௭.கணிதத் திறன் இல்லாமை
௮. தாய்மொழி மற்றும் இரண்டாம் மாற்று மொழிகளை கற்றுக்கொள்வதில் சிரமம்
௯. இதற்கு அப்பாற்பட்டு நினைவாற்றல் , ஒத்துழைக்காமல் இருப்பது போன்ற மன நலம் சார்ந்த செயல்களில் குறைபாடு உடையவர்கள்.
பெரும்பாலாக டிஸ்லெக்ஸ்க் குழந்தைகள் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களில் குறைபாடு உடையவர்களாகவும், மேலும் மேற்குறிப்பிட்ட அனைத்துமோ அல்ல அதில் சிலவோ உள்ளவர்கள் இந்த குறைபாடு உடையவர்களாக கண்டறியப்படுகின்றனர்.
சாஸ்டி சொல்வதைப்போல் நம்முடைய வழியில் அவர்களால் கற்றுக்கொள்ள முடியாது அவர்கள் வழியில் நாம் கற்றுக்கொடுத்தால் இருவருக்குமே வெற்றி நிச்சயம்!!!
இன்னும் விரிவாக நாளை !!!
நன்றியுடன் ஸ்ரீ ...
நல்லது. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குநல்லது தொடருகிறேன் நண்பரே....
பதிலளிநீக்குநன்றி அய்யா
நீக்குநல்லதொரு பகிர்வு தொடர்கிறேன் நண்பரே...
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்கு“If they don’t learn the way we teach, can we
பதிலளிநீக்குteach them the way they learn?”
Dr Harry T. Chasty இதைத்தான் நான் என் மகனிற்குக் கையாண்டேன்.பள்ளியில் அவனுக்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை. முதலில் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புரிந்து கொள்ள உதவ வேண்டும். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. பல விஞ்ஞானிகள் இப்படித்தான் இருந்தார்கள், பல பிரபலங்கள் உதாரணங்கள் சொல்லி முதலில் அவர்களை இதைப் பாசிட்டிவாக நோக்கப் பயிற்சி கொடுக்க வேண்டும். இதை ஏற்கும் மனநிலை அவர்களுக்கு முதலில் வர வேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி அவர்கள், குழந்தைகளை யாரேனும் தாழ்வாகப் பேசினால் அதாவது ஒன்றும் தெரியலை, ஏன் இப்படி இருக்கான்/இருக்கிறாள் மார்க் குறைவு, படிக்க மாடேங்கிறான்/கிறாள் என்று பேசினாலும் அதைப் பெற்றோர் கண்டு கொள்ளாமல், டென்ஷனாகாமல் அதைக் குழந்தைகளின் மீது காட்டாமல், ப்ரெஷர் கொடுக்காமல் இந்தச் சமூதத்தை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற பயிற்சி அளிக்க வேண்டும்.
ஸ்ரீ இதுவும் நீங்கள் உங்கள் குழு செய்வீர்கள்தான் இருந்தாலும் நான் எப்படிக் கையாண்டேன் என்பதை இங்குத் தெரிவித்தென். இன்னும் நிறைய இருக்கிறது இதைப் பற்றிப் பேச....
என் மகன் எழுதக் கஷ்டப்பட்டான் நினைவுத்திறனில் கொஞ்சம் கஷ்டப்பட்டான். இரு வரிகளுக்கு மேல் எழுத மாட்டான். படிக்க மாட்டான். மொழித் திறன் கொஞ்சம் கஷ்டப்பட்டான். தாய் மொழி தமிழ் உட்பட.
எறும்புடன் விளையாடிக் கொண்டிருப்பான்.அவற்றைப் பற்றிய தகவல்களைட் தான் கண்டதை வைத்து எனக்குச் சொல்லுவான்...ராணி எறும்பு, சேவகர் எறும்பு எவை என்று காட்டுவான், எறும்புகளின் புற்றைக் காட்டி இப்படி.... நாய்க்குட்டிகளுடன் ,பூனைக் குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருப்பான். பள்ளி செல்ல மாட்டான். ஏனென்றால் அங்கு ஆசிரியர்கள் இவனைப் புரிந்து கொள்ளவில்லை. படிப்பில் குறைவாக இருந்ததால் நண்பர்கள் இல்லை. (ஆனால் புத்திசாலி. அவனுக்கு நம்மூர் முறையில் படிக்க இயலவில்லை. அதாவது மனனம், ஹோம்வொர்க் திரும்பத் திரும்ப எழுதச் சொன்னதையே எழுத வைப்பது...) இத்தனைக்கும் அவனை சிபிஎஸ்சி யில் தான்... அவனது விருப்பத்தை அவன் 2 ஆம் வகுப்பில் தெரிவித்த போது அதாவது கால்நடை மருத்துவர் ஆக வேண்டும் என்று சொன்னதும் நான் அதைப்பிடித்துக் கொண்டேன். அதைச் சொல்லிச் சொல்லி எந்தவிதப் பிரஷரும் கொடுக்காமல்...அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை வராமல் முதலில் அதைக் கடைப்பிடித்தேன். அப்புறம் அவன் கேட்கும் கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான, லாஜிக்கல், ரீசனிங்க் அடிப்படையில் விடைகளைக் கொடுத்தேன். கதைகள் நிறைய வித் ஆக்ஷ்ன்ஸ்....அப்புறம் முதலில் படிக்க ப்ரெஷர் கொடுப்பதை விட படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்துதலைக் கையாண்டேன்...இப்படிப் பல...
தொடர்கின்றேன் ஸ்ரீ.....மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் குழந்தைகள் அனவரும் பாருங்கள் நாளை சாதிப்பார்கள்...
கீதா
மிகவும் நன்றி அம்மா... குழந்தைகள் ஒருபோதும் தவறு செய்வதில்லை. நாம்தான் அவர்களை பல நேரங்களில் தவறாக புரிந்துவைத்துள்ளோம் ... அவர்களது போக்கிலேயே விட்டு கண்காணித்து வந்தால் போதும் வேறொன்றும் பெரிதாய் தேவையில்லை
நீக்குதொடர்கிறேன். நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்குநன்றி அய்யா
நீக்கு