வெள்ளி, 27 மே, 2016

இது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்



என் பிளாக் வரலாற்றில் முதல் சினிமா விமர்சனம் இது  இந்த படத்துக்கு , வேண்டாம் இந்த நாடகத்துக்கு எழுதுவேன்னு நினைத்துகூட பார்கவில்லை 

இதை எழுதும்போது படம் பாதி நியாபகம் இல்லை என்பதால் நீங்கள் மனதைரியத்துடன் படிக்கலாம் ..

படம் ஐ .டி ஊழியர்களின் சங்கடங்களை சொல்வதோடு ஆரம்பிக்கிறது , என்னமோ சொல்ல வராயங்கடா என்று நிமிர்த்து உட்கார்ந்தேன், 

சிம்பு ஒரு ஹெச்  ஆர் ஆக அறிமுகமாகி தன் அப்பாவின் ஆறுதலுக்காய் நயனை பெண் பார்க்க செல்கிறார் ... பஸ்ட் சைட் இன்  லவ் ... முதல் சந்திப்பில் நயன் முன்னாள் காதலியான ஆண்ட்ரியாவை பற்றி கேட்க பிளாஸ்பேக்கில் ஆண்ட்ரியாவை காதலிக்கிறார் பின்னர் நயனை சமாதானம் செய்து அவரை காதலிக்கிறார் பின்னர் ஆண்ட்ரியாவை இரண்டாம் பிளாஸ்பேக்கில் கழட்டிவிட்டு நயனுடன் நிச்சயதார்த்தம் பின்னர் எப்பொழுதும் போல சிம்பு படத்திற்கு வரும் இடைஞ்சல் போல ஒரு இடைஞ்சல் இவர்கள் திருமணதிற்கு ... எப்படி கைகோர்த்தார் எனபது கிளைமாக்ஸ் ...

சிம்பு ஒல்லியிளிருந்து செம குண்டாகிறார் படத்தின் இறுதியில் , ஏதோ முயற்சி செய்திருக்கிறார் , கியூட் நயனுக்கு இந்த படத்தில் மேகப் சரியில்லை மற்றபடி வாவ் பெர்பாமன்ஸ் , ஆண்ட்ரியா சந்தானம் எல்லாம்  வந்து போகிறார்கள், சூரி மட்டுமே கொஞ்சம் ஆறுதல், எப்பா குறளரசன் உங்க குடும்பம் பாரம்பரிய சினிமா குடும்பம் பா ... தயவுசெய்து அதுக்குமேல சொல்ல விரும்பல , பாண்டிராஜ்தான் இயகுனரானு ஒருமுறை கூகிள் செஞ்சு பாக்கணும் , என்ன பாஸ் ஆச்சு உங்களுக்கு ...

சிம்பு நயனை உண்மையில் எப்படியெல்லாம் லவ்வினாரோ அதை மறுபடி திரையில் முயற்சி செய்திருக்கிறார் ... ஒருமுறை பாருங்கள்!

பன்ச் : இது நம்ம ஆளு - ஒரு வழியாக வந்துவிட்டது  

ஸ்ரீ ரேட்டிங் = 2/5

புதன், 25 மே, 2016

மேக்கிங் ஆப் விதைக்கலாம் - பகுதி 3

ஒத்த கருத்து என்பது இத்தனை நண்பர்களிடம் இவ்வளவு சீக்கிரம் உருவாகும் என்பதை நான் உண்மையில் நம்பவே இல்லை . இன்று நினைத்தாலும் நான் வியந்துதான் போகிறேன் . விதைக்கலாம் உருவான நேரமும் இதற்கு முக்கிய காரணம் என கருதுகிறேன் . 


கலாம் அய்யாவின் மறைவும் அதைத்தொடர்ந்து எங்கள் ஒவ்வொருவர்  மனதில் ஏற்பட்ட உந்துதலும் எங்களை உடனுக்குடன் செயல்பட வைத்தது .. ஊரெங்கும் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் கண்களை உருத்தியதைவிட அய்யா கூறிய கொள்கைகள் எங்களை உறுத்திக்கொண்டே இருந்தது .  


நான் எதிர்பார்க்காத நிகழ்வுகள் பல இரண்டாம் விதைக்கலாம் கூட்டத்தில் நடைபெற்றது என போன பதிவில் கூறியிருந்தேன் அப்படி என்னதான் நடந்தது ...விதைக்கலாமின் கொள்கையை நீங்கள் அதற்கு முன்னர் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் 

"ஒவ்வொரு ஞாயிறும் மரக்கன்றுகளை அவற்றை பாதுகாப்பாக வளர்க்க உறுதி தரும் வளாகங்களில் பாதுகாப்பு கூண்டோடு  கன்றுகளை நடுவதும்  தொடர்ந்து கன்றுகளை கண்காணித்து  பராமரிக்கவும்  தீர்மானிக்கப்பட்டது ". 

("கஸ்தூரிரங்கன் அய்யா அவர்களால் முதன்முதலில்
எழுதப்பட்டது இது ")


நாங்கள் முதல் கூட்டத்தில் பங்குபெற்றோரிடம் மேலும் சில நண்பர்களை கூட்டிவாருங்கள் என கூறியிருந்தோம் . எனவே இரண்டாம் கூட்டத்தில்  அதிக நண்பர்களை எதிர்பார்த்தோம் . எனவே அனைவரும் உட்கார்ந்து பேச ஒரு நல்ல இடம் வேண்டுமே என கஸ்தூரிரங்கன் அய்யாவிடம் கேட்டபொழுது கவலை படவேண்டாம் ஸ்ரீனி ஒரு இடம் இருக்கிறது அங்கு செல்லலாம் வா என கூடிசென்றார் . 

அந்த இடம் எந்த ஒரு சமுதாய நிகழ்விற்கும் மறுப்பு சொல்லாத இடம், இல்லை என்ற சொல்லை இதுவரை அவர் குரலில் நான் கேட்டதே இல்லை , புகழ்ச்சி விரும்பாத மனிதர், வீதியின் ஒவ்வொரு நிகழ்விற்கும் சொந்தக்காரர், ஆக்ஸ்போர்ட் சமையல் கலை கல்லூரியில் நிகழ்விற்கான இடம் தந்தார் . இன்று வரை விதைக்கலாமை பற்றிய ஒவ்வொரு நிகழ்வையும் அமைதியாக கண்காணித்து தேவைப்படும் நேரங்களில் ஆலோசனைகளை தந்து வருகிறார் சுரேஷ் சார் .. இதன் மூலம் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் சார் .


( ஆக்ஸ்போர்ட் சுரேஷ் சார் )


அடுத்ததாக நான் எதிர்பார்க்காதது இன்னொருவரின் வருகை . ஜே. சி. ஐ -யில் எனக்கு நண்பர் கனகமணி மூலம்  அறிமுகமானவர், அமைப்பிற்கு வருவதற்கு முன்னர் சிறு சிறு சந்திப்புகளிலும் , அலைபேசி உரையாடல்களிலும் மட்டுமே எங்கள் நட்பு தொடர்ந்து வந்தது , அவர் அமைப்பிற்குள் வந்ததை இன்று நினைத்தாலும் பிரமித்துப்போகிறேன் . 

விதைக்கலாம் பற்றிய குறிப்புகள் எழுத நோட் வாங்க கடைக்கு சென்றபோது அவரை எதிர்பராதவிதமாக சந்தித்தேன் , அமைப்பை பற்றி கூறியபோது முன்னே செல்லுங்கள் பின்னாடியே வருகிறேன் என்றார் , இதைபோன்ற பதில்களை பெரும்பாலும் உதாசினப்படுத்திவிடுவேன். ஆனால்  நான் போவதற்கு முன்னாள் அங்கே இருந்தார், அவரிடம் கருத்து கேட்டவுடன் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, அமைப்பிற்குள் வந்த எவரும் கேட்காத கேள்வி அது, 

"எவ்வளவுநாள் இந்த அமைப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறீர்கள் . குறைந்த காலம்தான் என்றால் நிகழ்விற்கு நான் வரவில்லை"
என்றார் . எனக்கா கோபம் அத்துமீறி வந்தது . என்னடா இது எவ்வளவு முயற்சிசெய்து இதை துவக்க இருக்கிறோம் இவர் என்னடா என்றால் வந்ததும் இந்த மாதிரி கேட்கிறாரே என்று நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தேன் . அது என் மனதில் பொறி தட்டிவிட்டதுபோல பீரிட்டு கிளம்பியது. அங்கிருந்த அனைவரையும் ஒன்றுபட வைத்த கேள்வி அது என்பதை ஒவ்வொரு நிகழ்வின்போதும் இன்றளவும்  நினைத்துக்கொள்வேன் . என் வாழ்வை எனக்கு பிடித்தமாதிரி செய்துவிட்ட , யூ.கே . இன்போடெக் உரிமையாளர் நண்பர் யூ.கே . கார்த்திகேயன் அவர்கள்,


( நண்பர் யூ.கே. கார்த்திகேயன் )


விதைககலாமின் துண்களில் ஒருவர் ( இவரை பற்றி தனிபதிவே எழுதலாம் அவ்வளவு இருக்கிறது . இப்பொழுது எழுதினால் அவரிடமிருந்து சில மிரட்டல்களை சந்திக்க நேரிடும் ... இன்னொரு சந்தர்பத்தில் அது நிச்சயம் வெளிவரும் ) மேலும் அவரைப்பற்றி அறிய www.ukinfotech.in

அன்று எடுத்த முக்கிய முடிவுகளில் இன்னொன்றும் மிகமிக முக்கியமானது , ஒரு அமைப்பின் வெளிப்படை தன்மைக்கும் எந்த சூழ்நிலையில் இந்த அமைப்பு உருவாகிறது, யாருக்காக உருவாகிறது என்று சிந்திக்கும்  நோக்கில்  யோசித்தால் அன்று அவர் எடுத்த முடிவு அவசியமான ஒன்றாகும் என்பது இன்றளவும் என்னுடைய கருத்து.

அவரை பற்றி அடுத்த பதிவில் கூறுவதே சிறப்பானதாக இருக்கும் என கருதுகிறேன். எனவே கருத்தை மட்டும் பதிவு செய்கிறேன். நிகழ்வு எந்த இடத்தில நடந்தாலும் நிகழ்விற்கான போக்குவரத்து செலவை உறுப்பினர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த பணத்திலிருத்துதான்  செலவு செய்துகொள்ள வேண்டும் இல்லையேல் நம்பிக்கைதன்மை போய்விடும் என்று கூறினார்.

அவர்சொல்படி இன்றளவும் விதைக்கலாமின் நிதியிலிருந்து ஒரு பைசாகூட நாங்கள் போக்குவரத்திற்காகவோ அல்லது வேறு எதற்காகவும் நாங்கள் செலவு செய்தது கிடையாது என்று கூறுவதில் பெருமை கொள்கிறோம்.

இன்னும் விதைக்கலாமின் ஒவ்வொருவரை பற்றியும் வரும் பதிவுகளில் எழுத போகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் இல்லையேல் விதைக்கலாம் இல்லை. ஒவ்வொருவரும் ஆச்சர்யங்களே. இந்தபதிவில் இன்னும் கூடுதலாக ஒருவரை பற்றி மட்டும் !!!


அடுத்த முக்கிய நிகழ்வு விதைக்கலாமின் தொடக்கம் . என்னுடைய சிந்தனையில் இதை தொடங்கும் போது வாராவாரம் நிகழ்வு நடக்க வேண்டும் என்பதால் ஐம்பது நிகழ்விற்கான இடங்களுக்கு உறுதி வந்தபிறகே நாம் நிகழ்விற்குள் செல்லவேண்டும் என்று திட்டமிட்டு அதை உறுப்பினர்களிடம் கூறியிருந்தேன் . ஒருவர் மட்டும் மாற்றி யோசித்தார் , ஏன் அவ்வளவு காலம் தாமதபடுத்த வேண்டும் , இந்த வாரமே தொடங்குங்கள் ? நிச்சயம் இடங்கள் வந்து சேர்ந்துவிடும் என்றார்.

விதைக்கலாமில் சில தீவிரவாதிகள் உண்டு, அவர்களில் இவரும் ஒருவர் , இரண்டிற்கு இரண்டு குழிகள் எடுத்தால் மட்டுமே நிகழ்விற்கு வருவேன்? என்று அதிர்ச்சியளித்தார்  எடுத்தோம் , எடுத்துவருகிறோம்.

நிகழ்விற்கு இரண்டுநாள் முன்னமே குழிகள் எடுத்தால் மட்டுமே வருவேன்?  என்றார் , அதையும் கூடியமட்டும் செய்துவருகிறோம் , இப்படி அடிக்கடி பல அதிர்ச்சி வைத்தியங்கள் கொடுத்தே நம்மை செயல்பட வைப்பார் , மூத்த சகோதரர் , ஏ. மாத்தூர் பள்ளி ஆங்கில ஆசிரியர் நண்பர் ராமலிங்கம் அவர்கள்.


( நண்பர் லெ. ராமலிங்கம் )



இவர் எடுத்த முடிவே இன்று விதைக்கலாம் நாற்பதாவது நிகழ்வில் இவ்வளவு சீக்கிரம் அடியெடுத்து வைக்க காரணம் . அனைவரும் உடனடியாக உடன்பட்டோம். இங்கே இன்னொரு குறிப்பு அங்கே நடந்த இவ்வளவு விவாதத்தில் விதைக்கலாம் என்ற பெயர் அப்பொழுது வைக்கப்படவே இல்லை . இதை மனதில் நிறுத்தி நண்பர்கள் இந்த கட்டுரையை வாசிக்கவும்.


அதற்கான முன்னெடுப்புகளை பற்றி உடனே பேசினோம். அதை ஒவ்வொன்றாக உங்களுக்கு தருகிறேன் . (தமிழ் எங்கள் வரிசையில் )

௧. அமைபிற்கு பெயர் வைப்பது.

௨ . தற்காலிக கட்செவி குழு ஒன்றும், முகநூல் பக்கம் ஒன்றும் துவக்கி  நண்பர்களை இணைப்பது .

௩. அமைபிற்கு ஒரு வலைப்பூ துவங்கி அதில் செயல்படுவது .( http://vithaikkalam.blogspot.in/)

௪. அமைபிற்க்காக ஒரு இ-மெயில் உருவாக்குவது அதன் மூலம் நண்பர்களுக்கு தெரியபடுத்துவது .

௫. கன்றுகளை எங்கு வாங்குவது, எந்த வகையான கன்றுகளை வாங்குவது என்று முடிவு செய்துகொள்வது.

௬. கன்றுகளை பாதுகாக்கும் கூண்டுகளை வாங்குவத்துபற்றி முடிவு செய்துகொள்வது .

௭. மரங்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு சீக்கிரம் வளரும் மரம் எது ? எது நன்மை பயக்கும் மரங்கள் என்று கண்டறிவது .

௮ . நிகழ்விற்கான இடங்களை சேகரிப்பது .

இப்படி இன்னும் பல....

அடுத்த பதிவில் விதைக்கலாம் என்ற பெயர் எப்படி வந்தது ? யாரால் வந்தது? அவருக்கும் இதற்கும் உள்ள தொடர்பு ? முதல் நிகழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் ? முதல் விதைக்கலாமின் ஒரு அலாதியான பயணம் மற்றும் இன்னும் பல சம்பவங்களோடு !!!


வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம் நண்பர்களே விதைக்கலாமோடு........

சனி, 21 மே, 2016

குருதிக்கொடை - ஒரு விழிப்புணர்வு பதிவு

சற்றுமுன்  முகநூலில் "சுடச்சுட ஒரு விழிப்புணர்வு  பதிவு" என்று
பதிவிட்டேன் . மக்களிமிருந்து அமோக வரவேற்பு ,என்னடா என்று 
பார்த்தால் அரசியல் பதிவென்று நினைத்து லைக்கிட்டு 
இருக்கிறார்கள் ... சரி இனி எழுதாமல் இருந்தால் நல்லதல்ல என்று 
எழுதிவிட்டேன்... 


புதுக்கோட்டையின் ஒரு முக்கிய தொகுதியில் தேர்தல் நாளன்று பணியில் இருந்தேன் ... அதே ஊரில் என்னுடைய சித்தப்பா வீடு .
என்னுடைய சித்தப்பா வீட்டில் மதிய உணவு, தவிர்க்கமுடியவில்லை சாப்பிட சென்றுவிட்டேன். சாப்பிட்டுகொண்டிருக்கும்போதே ஒரு அவசர அலைபேசி அழைப்பு ...போச்சுடா எந்த ஊருக்கு போட போறாங்களோ தெரியலையே என்ற முனுமுனுப்புடன் (குறிப்பு : தேர்தலுக்கு முதல்நாளன்று பணியிடத்துக்கு போய்விட்டால் நமக்கு சகஜமாகிவிடும் அதுவே எல்லாரும் போனபின்பு தேவையிருந்தால் கூப்பிடுவோம் என்றால் அது நம்மை ஒரு ஜென் நிலைக்கு கொண்டுசென்றுவிடுகிறது ...அனுபித்தவருக்கே அந்த வலி புரியும் ) விசயத்துக்கு வாறேன் ....


அலைபேசியில் ஒரு நண்பர் உடனடியாக ஏ நெகடிவ் இரத்தம் தேவை என்னுடைய நண்பருக்கு என்றார்..  எப்பொழுதுமே நான் இதைபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் தொடர்புகொள்வது என்னுடைய நண்பர் திருமிகு. ஆனந்த் அவர்களைதான் , அவர் கோவையில் இருக்கிறார் அவர் தமிழகம் முழுவதும் நண்பர்களை இணைத்து ஒரு குருதி அமைப்பை உருவாக்கி எங்கு இரத்தம் தேவையோ அங்கு அவர்களை தொடர்புகொள்ளச் செய்து உதவி செய்து வருகிறார் .. அவருக்கு உடனேயே அழைத்து குருதி தேவை நண்பரே என்றவுடன் அவர் ஓரிரு நண்பர்களின் அலைபேசி இணைப்புகளை தந்தார் ...


அவர்களுக்கு போன் செய்து கேட்டபோது அவர்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்னாள் தான் கொடை செய்திருப்பதாக சொன்னார்கள் ... என்ன செய்வதென்று தெரியவில்லை .. உடனே என்னுடைய கட்செவி குழுவில் எப்பொழுதும்போல் பதிவிட்டேன் (முகநூலிலும் பதிவிட்டிருந்தேன் அதை லைக் செய்தவர்களே அதிகம்.. தயவுசெய்து இனிமேலாவது படித்துவிட்டு லைக் செய்யுங்கள் மற்றும் இதை போன்ற தகவல்கள் நம்பிக்கையான நபரிடமிருந்து வரும்போது  உதாசினப்படுத்டாமல் உடனடியாக பகிருங்கள்   )

இந்தமுறை கட்செவியில் பார்த்த ஒரு நண்பரிடமிருந்து அழைப்பு. அவரது பெயர் ரமேஷ் சக்தி .. அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பில் மாணவர் , ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறார். உடனடியாக அவரது வேலைகளை அப்படியே விட்டுவிட்டு காரைக்குடியிலிருந்து புதுகைக்கு ஓடோடிவந்து உடனடியாக உதவி செய்தார் . நண்பருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை . இவர் மட்டும் அல்ல எனக்கு தெரிந்து என்னுடைய குழுவில் நண்பர் ஜலில் 28 முறை குருதிகொடை செய்திருக்கிறார் , அண்ணன் குருமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் , அண்ணன் மணிகண்டன் அவர்கள் இன்னும் பலர் குருதிகொடை செய்துவருகிறார்கள் .. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...நன்றிகள் ..



(நண்பர் திரு . ரமேஷ் சக்தி தேர்தல் நாளன்று குருதி தந்து  உடனடியாக உதவியவர் )


நண்பர்களே குருதிகொடையின் அவசியத்தை புரிந்துகொள்ளுங்கள் . 

குருதிகொடை அளிப்பதால் நம்முடைய இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது . 

இப்படி கடினமான நேரத்தில் உங்களால் மற்றவர்களுக்கு  உதவிட கூடிய நேரத்தில் நிச்சயம் உதவி sசெய்யுங்கள் .

அரியவகை இரத்தவகை உள்ள நண்பர்கள் உங்கள் இரத்த வகையில் உள்ள குறைந்தது ஐந்து நபர்களை தெரிந்துவைதுக்கொளுங்கள் .உங்களுக்கோ அல்லது உங்களை தெரிந்தவர்களுக்கோ நிச்சயம் ஒருநாள் உதவும் .

மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுங்கள் ஏனெனில் ஒருவேளை ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கும்போது உங்களுக்கோ அல்லது உங்களால் மற்றவர்களுக்கோ இரத்தம் அளிக்க 24 மணி நேரத்திற்கு முன்புவரை நீங்கள் மது அருந்தாமல் இருக்க வேண்டும் இல்லையெனில் இரத்தம் அளிக்கவோ பெறவோ முடியாது.

உங்கள் சட்டை பையில் உங்கள் குருதி வகையை ஒரு பேப்பரில் எழுதி வையுங்கள்..முக்கியமாக சக்கரை நோயாளிகள் மற்றும் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 


மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்... இந்த பதிவு ஒருவேளை உங்களால் மற்றவர் உயிரை காக்கலாம்...

தமிழ்நாட்டில் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் குருதி வேண்டுமெனில் தொடர்புகொள்ள 7639972504.  நண்பர் ஆனந்திடம் கேட்டுவிட்டு அவரது தொலைபேசி என்னையும் பிறகொரு பதிவில் தருகிறேன்..


நன்றி .... நாளை விதைக்கலாம் தொடர்பதிவோடு வருகிறேன்..









சனி, 14 மே, 2016

விதைக்கலாம் - பகுதி 2


அமைப்பு  ஒரு முன்னோட்டம் 



ஒரு தொடர்பதிவு எழுத ஆசைப்பட்டு அதை எழுதாமல் விடுவது எவ்வளவு கொடுமை... இத்தனை காலம் அதை எழுதாமல் விட்டதற்கு மன்னிக்கவும் . சில சொந்த வேலை காரணமாக என்னால் எழுத முடியாமல் போயிற்று ...  இன்றுமுதல் வாரம் ஒரு பதிவாக நீண்ட தூர பயணமாக  விதைகாலாமின் பயணத்தை உங்களோடு பயணிக்க போகிறேன் ...

இதற்கு முந்தய பதிவின் லிங்க் இதோ 

http://ethilumpudhumai.blogspot.com/2016/02/kalam-25.html 

   இப்படியாக கலாம் அய்யா இறந்த ஓரிரு நாட்களுக்கு பிறகு நான், தம்பி பாலாஜி , அண்ணன் பாலமுருகன் மூவரும் ராமேஸ்வரம் செல்வதாக முடிவு செய்து பாலாஜியும் நானும்  ரயிலுக்கான முன்பதிவு செய்வதற்காக சென்றபோது அங்கே எதிர்பாராத விதமாக உட்கார நேரிட்டது ... அந்த அமர்தல் இல்லாமல் போயிருந்தால் , அங்கே எங்களுக்கு போனவுடன் பயணசீட்டு கிடைத்திருந்தால் இந்த எல்லாமே நடந்திருக்குமா தெரியவில்லை !!!


   நடந்தது , நடக்கிறது , நடந்துகொண்டேயிருக்கும் என்றென்றும்...


   நானும் பாலாஜியும் கஸ்தூரிரங்கன் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு அமைப்பை உருவாக்குவதாக முடிவெடுத்தவுடன் நம்மை போன்ற சிந்தனை உள்ள நண்பர்களை அழைத்து  ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அமைபிற்கான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று முடிவுசெய்துகொண்டோம். கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது . கூட்டம் நடத்த இடம் வேண்டுமே என்றவுடன் கஸ்தூரிரங்கன் அய்யா அவர்களின் நண்பர், பாரதி பயிற்சி பள்ளியின் உரிமையாளர் திருமிகு.செல்வராஜ் அய்யா அவர்கள் இடம் தந்து உதவினார்கள். அவர்களுக்கு விதைக்கலாம் சார்பில் மனமார்ந்த நன்றி.

    எந்த ஒரு செயலும் ஈடேறுவது நண்பர்களால் என்பது என்னால் மறுக்க முடியாத உண்மை . அப்படி இதை போன்ற ஒரு அமைப்பு என்று சொன்னவுடன் கூட்டத்திற்கு வந்து இன்று வரை பிடிப்புடன் இருக்கிறார்கள்.



                                         ( முதல் கூட்டம் , பாரதி பயிற்சிபள்ளி )

கூட்டத்தில் இலுப்பூர் பள்ளி ஆங்கில ஆசிரியர் அண்ணன் காசிபாண்டி (இப்பொழுது ஏ.மாத்தூர் பள்ளி ), புதுகையின் பி .வெல் மருத்துவமனை மேலாளர் நண்பர் பாக்கியராஜ் , முன்னாள் ஜெ.சி.ஐ . புதுக்கோட்டை கிங்ஸ் தலைவர் நண்பர் கனகமணி , மரியா ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் நண்பர் யுஜின் , டிவிஎஸ் ஊழியர் தம்பி குணசேகரன் , இராணியார் பள்ளி ஆங்கில ஆசிரியர் அண்ணன் பாலமுருகன் , கல்வியாளர் நண்பர் அருங்குலமுருகன் , வேளாண் மாணவர் நண்பர் பிரபாகரன் , நண்பர் அருண் , தம்பி பாலாஜி , நான் மற்றும் கஸ்தூரிரெங்கன் அய்யா ஆகியோரை கொண்டே முதல் கூட்டம் நடைபெற்றது. இங்கே வேறு எவரையும் விட்டுவிடவில்லை என்றே கருதுகிறேன் .


    முதல் கூட்டத்தில் அமைபிற்கான பெயர் என்ன என்பதை முடிவு செய்வது , குறிகோள்களை முடிவுசெய்துகொள்வது, என்று முதல் அமைப்பை துவக்க போகிறோம் என்றெல்லாம் பல கோணங்களில் சுமார் மூன்று மணிநேரம்  விவாதம் நடைபெற்றது. அமைப்பிற்கான இரண்டாவது கூட்ட நாள் 26-08-2015 என்று குறிக்கப்பட்டது.

 
    அமைப்பு அதிகாரபூர்வமாக இரண்டாவது கூட்டத்திலேயே ஏன் துவக்கப்பட்டது ,  எங்கு தொடங்கப்பட்டது, யார் அதில் பங்குபெற்றனர் , என்ன கொள்கைகள் வகுக்கப்பட்டன ,  இந்த அமைப்பு இது வரை வெற்றிகரமாக செல்ல அங்கு முக்கியமான சில நபர்களின் உடனடி முடிவே காரணம் , அன்று அவர்கள் இல்லையென்றால் ஒருவேளை அமைப்பின் முதல் நிகழ்வு இன்றாககூட இருந்திருக்கலாம்... அப்படியென்ன அதில் சுவாரஸ்யம்


இணைந்திருங்கள்  என்னுடன் ... பயணிப்போம் அடுத்த பதிவில் 



                                                                                                    பயணம் தொடரும் ...


 

 


வியாழன், 12 மே, 2016

வசி மே....மே 16

இந்த  தேர்தல்  வந்தாலும் வந்தது  இந்த மே பதினஞ்சு நாளும் வீனாபோச்சு மாப்ள என்ற என் மைத்துனரிடம் மச்சி கொஞ்சம் சோம்பேரிபட்டா அஞ்சு வருஷம் வீணா போகுமுடா என்று சொல்லிகொண்டிருக்கும்போதே ஒரு குறுந்தகவல் தேர்தல் ஆணையத்திடம் 

தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு செயலியை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது உங்கள் அலைபேசியில் உள்ளீடு செய்துகொள்ளுங்கள் என்று 

இது எப்படி நம்ம போன் ஆண்டிராய்டுனு கண்டுபுடிச்சாங்க என்று குழம்பிகொண்டு ஏதோ ஒரு உள்நாட்டு சதிடா மாப்ள என்ற எண்ணத்தில் என் விழியை அவன்மீது செலுத்தியபோது முந்தய தேர்தல் வகுப்பில்  அன்னிக்கு ஆண்டிராய்டு போன் வசதி உள்ளதா என்ற கேள்விக்கு டிக் அடித்து கையொப்பம் இட்டது நினைவுக்கு வர சரியென்று அந்த செயலியை  உள்ளீடு செய்தேன் .

செயலியை பற்றி 

செயலியில் ஆறுவிதமான ஆப்ஷன்களை வைத்திருக்கிறார்கள் ..
௧. வோட்டர் செர்விசெஸ் . இதில் நம்முடைய வோட்டர் ஐடியை சரிபார்க்க முடியும்

2. புகார்களுக்கான இடம். இதில் இமெயில் முகவரியோடு புகார் செய்ய முடியும்

3. வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை பற்றிய விவரங்கள்

4. தேர்தல் அட்டவணை போன்ற சில ஆப்ஷன்கள்

5. தேர்தல் அதிகாரிகளுக்கான சில அலுவலக தகவல்கள்

6. உதவி மையம்

7. நல்ல சிந்தனை நல்ல செயலிதான் என்றாலும் இதெல்லாத்தையும் இந்த செயலி மூலமா பதிவு செய்ய போற  இடத்துல  இன்டர்நெட் வசதி வேணும் பாஸ் என்று கூறிக்கொண்டு உங்களிடத்திலிருந்து விடைபெறுவது ....

புதன், 11 மே, 2016

பேராசை பேரிழப்பு

   இன்று புதுகையின் ஓர் வளர்ந்துவரும் கடைக்கு பர்னீச்சர் பொருள் வாங்குவதற்காக நண்பர்களோடு சென்றிருந்தேன். கடையின் உரிமையாளர் படு பிசியாக இருந்தார். நாங்களும் வாங்கவேண்டிய பொருளை அங்கு பணிபுரிந்த ஊழியரிடம் விசாரித்து அதை வாங்கும் மோடில் என்னை தயார்படுதிக்கொண்டேன்.

  நேராக கல்லாவிற்கு சென்று அவரை எப்படியேனும் மூளைசலவை செய்து என்னுடைய பட்ஜெடிற்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்று மனதுக்குள்ளே கூறிக்கொண்டு அவரிடம் பேரத்தை துவக்கினோம்.

  எங்கள் தொகையை நாங்கள் கூறியவுடன் எங்களை சமாளித்துவிடலாம் என்று நினைத்த முகம் நேரம் ஆக ஆக எங்களை ஒரு டேரரை போல் பார்க்க துவங்கியது. இத்தனைக்கும் நாங்கள் அப்படி ஒன்றும் பிரம்மாண்ட பேரம் பேசிவிடவில்லை.

  சரி அவரையே ஒரு கட்டுபடியான தொகையை சொல்லச்சொல்லலாம் என்றால் அதே விலைதான் என்றுகூறி மனிதன் ஆணியடித்தாற்போல் ஒரு பத்து நிமிடங்கள் அசையாமலும் எங்களை கண்டுகொள்ளாமலும் இங்கிருந்து கிளம்பமாட்டாயா என்பதுபோல் அவருடைய வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.

  இதற்கு முன்னமே அவரது கடையில் பல ஆயிரங்களுக்கு நாங்களே பொருட்கள் வாங்கியிருப்பதால் எங்களாலும் அவர் கேட்ட தொகைக்கு கட்டுப்படாமல் நிதானமாக நாங்கள் உங்களுடைய நம்பிக்கையான வாடிக்கையாளர் இந்த முறை ஒரு வாடிக்கையாளர் சேவையாக குறைத்துகொள்ளலாமே என்று சொன்ன பிறகும் அவர் மசிவதாய் இல்லை.


   இது சரிப்படாது என்பதுபோல் என் பட்ஜெட்டைவிட அவருக்கும் குறையாமல் கூட ஒரு இருநூறு ரூபாயை கையில் திணித்தேன். அவர் அலுங்காமல் பணத்தை மேஜையின்மீது வைத்து வெளியே போ என்பதுபோல் பார்த்தார்.


  சும்மாவே ரத்தத்தை கொதிக்கவிடும் நான் இன்று அதை ஆவியாக்கும் வரை கொதிக்கவிட்டு நீங்கள் எங்களை தினசரி வாடிக்கையாளர் என்பதைகூட பார்க்காமல் இப்படி பேசுவது சரியல்ல என்று என் குரலின் டெசிபலை கொஞ்சம்கொஞ்சமாக ஏற்றினேன். என் நண்பர்களிடம் வேண்டாம் வாருங்கள் என்று கூற கீழே இறங்கினோம். சரி அப்படியாவது இவன் ஒரு நூறை அதிகமாக கேட்டு கூப்பிடமாட்டானா என்ற எண்ணம்.


  அவன் எங்களை கண்டுகொள்ளவே இல்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் வருத்தமே மிஞ்சியது. பல லட்சம் முதலீடு செய்தாலும் மனிதனுக்கு பணத்தாசை விடுவதில்லை. உண்மையில் நாங்கள் கேட்ட தொகைக்கு கொடுத்திருந்தால் அவருக்கு ஒன்றும் பெருத்த நஷ்டம் வந்திருக்காது. வருத்தம் என்னவெனில் நாங்கள் இறங்கி வந்தும்கூட அவர் ஒரு பைசாகூட இறங்கி வரவில்லை.


   வாடிக்கையாளர் மீது அக்கறை இல்லாத எந்த ஒரு வியாபாரியும் சுயநலவாத கூட்டங்களே. நல்ல வியாபாரிகளுக்கு மத்தியில் இப்படிப்பட்டவர்களும் இருப்பது கவலைக்குரியது.

நீதி: நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிற்கும் இன்னொருவரை சார்ந்தே          வாழ வேண்டும். 


                             அவர் இனியாவது திருந்த வேண்டும்.


பார்போம்

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...