வெள்ளி, 27 நவம்பர், 2015

பல்ப் எரிந்தபோது....

1. மெய் மறந்து.....

உன்  பெயரை எழுத துவங்கினேன்
மை தீர்ந்தது
காகிதம் பறந்தது
இருந்தும்
எழுதிகொண்டிருக்கிறேன்
இரண்டு மணி நேரமாய்
உன் பெயரை

2.  உள்ளே நீ...

ஆசிரியரிடம் பாராட்டு
கவனம் சிதறாமல்
படித்தற்க்காய்
எனக்கு மட்டுமே தெரியும்
புத்தகத்தின் உள்ளே
உன் புகைப்படம் என்று...

3. மறந்தேன்....நினைத்தேன் ....விழித்தேன் 


கணநேரம் சிந்தையிலிருந்து மறைந்தாய்
தாக்கியது மின்சாரம்
திடுக்கிட்டு விழித்தேன்
நினைவு திரும்பியது
உன் கடைகன்பார்வையால்
நினைவிழந்திருக்கிறேன்
வாழ்நாள் முழுதும்
காத்திருக்கிறேன்
நினைவிழக்க....



7 கருத்துகள்:

  1. ரைட்டு... புரிஞ்சி போச்சி...! எப்போ விசேசம்...?

    பதிலளிநீக்கு
  2. பல்ப் எரிஞ்சிருச்சா...சரி, பாரதிராஜா படத்து வெள்ளை ஆடை தேவதைகள் பாடிய பாட்டு? அடுத்த பதிவில் வரும்? கவிதை அழகு கற்பனையும் அழகு.

    பதிலளிநீக்கு
  3. திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களின் கேள்விதான் எனது கேள்வியும்
    அழைப்பிதழுக்காகக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கவிதைகள் அனைத்தும் செம சகோ.. இப்போதான் பார்க்கிறேன் இனி தொடருவேன்...

    பதிலளிநீக்கு
  5. இரண்டு மணிநேரமா......அப்படி எழுத்தில் அடங்காத பெயரா...?????

    பதிலளிநீக்கு
  6. இரண்டு மணிநேரமா......அப்படி எழுத்தில் அடங்காத பெயரா...?????

    பதிலளிநீக்கு
  7. தங்களின் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன். அருமையான கவிதைகள்.

    தங்கள் தளத்தில் என்னால் இணைய முடியவில்லை. ஏதோ தொழிநுட்ப கோளாறு இருக்கிறது. அதை சரி செய்யவும்.
    நன்றி!

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...