புதன், 7 அக்டோபர், 2015

நம்பிக்கையில் நான்...

        இன்று ஆர்.எம்.எஸ்.ஏ பயிற்சியையொட்டி அறந்தை நகருக்கு பேருந்தில் கிளம்பினேன். அரைக்கை சட்டை மற்றும் கரைவேட்டியோடு ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்தார்  பக்கத்தில் ஒரு விவசாயியும் வந்துசேர்ந்தார்.
      பேருந்து புறப்பட்டதும் அரைக்கைசட்டைகாரர் தன் பையிலிருந்து ஒரு குளிர்பான பாட்டிலை எடுத்து கடகடவென குடிக்கத் தொடங்கினார். ஏற்கனவே அந்த குளிர்பானத்தைப் பற்றி ஒரு கசப்பான  காணொளியை கண்டிருந்தலால் அவரிடம்  அதை குடிக்காதீர்கள் என எப்படிச் சொல்வது என்ற தயக்கத்தோடு இருந்தேன். 
  தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த காணொளியை அவர் கண்முன்னே காண்பித்தேன், முழுதும் பார்த்து முடித்தபின் பதறிப்போய் நான் இதை பத்து வருடமாக குடித்துவருகிறேன், தவறு செய்துவிட்டேன் என குமுறினார். 
  பக்கத்தில் இருந்த விவசாயி நீராகாரம் குடித்த காலம் போய், இளநீர் குடித்த காலம் போய், பழச்சாறு குடித்த காலம் போய் இப்பொழுது இதை குடிக்கிறோம் தம்பி என்று தன் வரலாற்றை பதிவு செய்தார். நானும் அதை ஆமோதித்தவாறே பேசிக்கொண்டு வந்தேன். "இப்போ எங்க பாத்தாலும் வெளிநாட்டு குளிர்பானம் தான் இருக்கு நாமளும் அத தானே தம்பி நம்பி வாங்குறோம்" என தன் ஆதங்கத்தையும் வெளிபடுத்தினார்.
 இதைக்கேட்டுக்கொண்டே இருந்த அரைக்கை சட்டையும் இதை ஆமோதித்துக்கொண்டே  வந்தார். இப்படியாய் எங்கள் பேச்சு கல்வி, கலாச்சாரம், சமூகம் என விரிந்தது. காரசார விவாதங்கள் முடிந்தபின் அரைக்கை சட்டை குளிர்பான  பாட்டில் மூடியை திறந்து ஒரு மடக்கை குடித்து மூடினார்.
  இதை அவர் வீண் செய்ய வேண்டாம் என குடித்தாரா இல்லை எந்த மனநிலையில் இதை அவர் செய்தாற் என தெரியவில்லை, நானும் அறிய முற்படவில்லை. எது எப்படியோ தமிழ்ச்சமூகம் தன் பழைய நிலைக்கு மாற வேண்டும் என்ற......

 

5 கருத்துகள்:

  1. புதுகை வலைப் பதிவர் சந்திப்பு
    பணிகளுக்கு இடையில்
    ஆர்.எம்.எஸ்,ஏ
    பயிற்சிக்கு செல்வதற்கும்
    நேரமிருக்கிறதா
    ஆச்சரியமாக இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அய்யா... என்ன செய்வது அய்யா? அரை சாண் வயிற்றிற்கு அது, அறிவுப்பசிக்கு இது...

      நீக்கு
  2. அவர் ஒரு சராசரி தமிழரை போல நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி சரிதான் என்று சொல்லியவாறு தான் செய்வதை மாற்றிக் கொள்ள முயலாமல் அதை தொடர்ந்து குடித்திருக்கிறார்..இப்படிதான் நம் சமுகம் பல விஷயங்கள் சீரிய்ஸ்னஸை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோ. உங்கள் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதல் வருகை. பதிவர் திருவிழாவில் உங்கள் பங்களிப்பிற்கு வாழ்த்துகளும் நன்றியும்.
    உறுப்பினராக இணைவதில் ஏதோ கோளாறு போல, மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...