புதன், 26 ஆகஸ்ட், 2015

ஆர். எம்.எஸ்.ஏ முதல் பயிற்சி அனுபவம் பகுதி 2

              மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி... பயிற்சி முடித்து நானும் திரு. கஸ்தூரி ரெங்கன் அய்யாவும் வண்டியில் புதுக்கோட்டைவந்துகொண்டிருக்கும் போது ஒரு தேநீர் கடை வழிமறித்தது. உள்ளே போய் அமர்ந்து தேநீர் அருந்தினோம். விதைக்கலாம் என்ற அமைப்பை உருவாக்கி இருப்பதால் அங்கே மரங்கள் நடலாமா  என்ற சந்தேகத்துடன் நான் கேட்டபொழுது அதன் உரிமையாளர் உடனே வைத்துக்கொள்ளுங்கள் என்றார். ( விதைக்கலாமை பற்றி ஒரு விரிவான பதிவை அடுத்ததாக எழுத இருக்கிறேன் ). 

     இரண்டாம் நாள் பயிற்சிக்கு காலை சென்றதும் திரு.க.ரெ அய்யா ஒவ்வொருவரையும் அறிமுகபடுத்திக்கொள்ளும்  நிகழ்வினை ஏற்பாடு செய்தார். நான் அதற்குள்ளாக அங்கே இருந்த ௧௨ வகுப்பு  மாணவர்களை பிடித்தது பெருந்திரை காட்சி வீழ்தியை தயார்  செய்தேன். செல்வர்கள். முகமது ஆசிப், மனோகர், பெருமாள் போன்றோர்  அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். அடுத்ததாக திரு பிரபாகரன் அய்யாவும் தன்னுடைய பாடவேலையை அருமையாக முடித்தார். நான் என்னுடைய பங்கிற்கு செயல்பாட்டு வடிவில் பாடப்பகுதியை தயார்செய்து நடத்தினேன். இரண்டாம் நாள் இந்தளவில் இனிதே நிறைவுபெற்றது. 
   
             மூன்றாம் நாளில் முதல்  இரண்டு வேளைகளில் பெருவீழ்த்தியில் ஒவ்வொரு வினாவிற்குரிய கோப்புகாட்சிகள் காண்பிக்கப்பட்டு கருத்துகள்  பரிமாறப்பட்டன. ஒரு சுவையான சம்பவத்தை இந்த இடத்தில எழுத விரும்புகிறேன் இதற்கும் இந்த கட்டுரைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை ஆனால் என்னை மிகவும் ஆச்சர்யபடுதிய செய்தி அது. ஒரு ஆசிரியை  தன்னுடைய மகளை  அங்கே கூட்டிவந்திருந்தார். அவள் முந்தயவருடம் படித்த பள்ளியில் அவளுக்குபிடித்த ஒரு ஆசிரியர் இருந்திருக்கிறார்கள் . அவர்கள் தற்போது வேறு பள்ளிக்கு மாறிவிட்டார்களாம். அந்த ஆசிரியை இல்லாத பள்ளியில் நானும் இருக்க மாட்டேன் என்று மாற்று சான்றிதழ் வாங்கிக்கொண்டு இப்பொழுது  வேறுபள்ளியில் படிக்கிறாள் இந்த  குழந்தை. மெய்சிலிர்த்துப்போனேன்.


          இவ்வாறாக மூன்றாம் நாளில் இன்னும் சில அனுபவங்களுன் பயிற்சி பள்ளி தலைமைஆசிரியை அவர்களின் வாழ்த்துக்களோடு நிறைவுபெற்றது .. நன்றி 

11 கருத்துகள்:

  1. அட குழந்தையின் கதையை எனக்கும் கேட்க மெய்சிலிர்த்தது.
    நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    விதை(க்) கலாம்...பற்றி ஒரு விரிவான பதிவை அடுத்ததாக எழுதுங்கள்...!

    //அந்த ஆசிரியை இல்லாத பள்ளியில் நானும் இருக்க மாட்டேன் என்று மாற்று சான்றிதழ் வாங்கிக்கொண்டு இப்பொழுது வேறுபள்ளியில் படிக்கிறாள்//

    மாணவிக்குப் பிடித்த ஆசிரியை...!

    நல்ல ஆசிரியை... வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக எழுதுகிறேன் அய்யா... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  3. அந்த நல்(ல)ஆசிரியற்குஎனதுவழ்த்துக்கள்தொடருங்கள் ஸ்ரீவழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...