தொடர்வண்டி நிலையத்தில் அமர்ந்து விதைக்கலாமை பற்றி பேசும்போது விதைக்கலாம் என்ற பெயர்
வைக்கப்பட்டிருக்கவில்லை... கலாம் அய்யாவின் மறைவு பெரும் உறுத்தலை ஏற்படுத்தியதன்
விளைவு ?
இதோ 25 வாரங்களை நிறைவு செய்திருக்கிறோம் ! 349 கன்றுகள் நடப்பட்டு இருக்கின்றன ! கூடுதலான செய்தி அனைத்தும் நேரடி கண்காணிப்பில் இருக்கிறது !
மேட்டருக்கு வரேன்....
இவ்வாறு ஒரு அமைப்பை தொடங்கலாம் என்று தொடர்புகொண்ட
போது நம்பிக்கை வைத்து நடைபோட அடியெடுத்து கொடுத்தார் கஸ்தூரி ரெங்கன் அய்யா !
வைத்த அனைத்து கன்றுகளையும் பராமரித்தால் மட்டுமே
நான் அமைப்பில் தொடர்வேன் என்று கறாராக கூறிய நண்பர் சந்தோஷ் !
என் முன்னோர்களால் மரம் வெட்டப்பட்டது, நான் நட்டு
வளர்க்க ஆசைபடுகிறேன் என்று வந்த நண்பர் பாக்கியராஜ் !
விதைக்கலாம் என்று துணியில் பதாகை அமைத்து கொடுத்த பன்னீர்செல்வம்
அய்யா... விதைக்கலாம் இன்றுவரை பார்த்ததில்லை அவரை !
அனைத்து நண்பர்களும் அமைபிற்கு பெயர் தேடினோம் !
இறுதியில் நண்பர் பிரபாகரன் வைத்ததே
விதைக்KALAM என்பது ! இயற்கை விவசாயம் பற்றி தன்னை
சார்ந்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் !
அண்ணன் காசிபாண்டி விதைக்கலாமின் பயணத்தை தன்னுடைய இலுப்பூர்
பள்ளியில் தொடங்க வழிவகை செய்துகொடுத்தார்.
பணி ஓய்வு பெற்ற மறு வாரத்திலிருந்து விதைக்கலாமில்
தன்னை ஈடுபடுத்திவரும் எங்கள் மணி சார் !
விதைகலாமின் முதல் நிதியாளர் எங்கள் நிலவன் அய்யா !
நன்றாக நினைவில் உள்ளது இன்றும் ! முதல்
கூட்டத்திற்காக அலைபேசியில் அழைத்த
அத்துணை நண்பர்களும் இன்றுவரை இடைவிடாது ஒன்றாய் பயணிக்கிறோம்.
இதை நீ கண்டிப்பாய் படிப்பாய் பாலாஜி ! பாலாஜி இந்த
அக்கினிச்சிறகும் நானும் விதைக்கலாமின் மூலம் விதைதூவ ரெக்கை கட்டி பறக்க
துவங்கினோம்... இதோ இன்று நாங்கள் 50 அக்கினிபறவைகளாய் வானத்தில் பறக்கிறோம் நண்பர்களின் துணையோடு !!!