சனி, 18 ஜூன், 2016

FAN - சினிமா விமர்சனம்


      பெரும்பாலும் இந்தி மொழிப்படங்கள் பார்ப்பதில்லை என்றாலும் என்னமோ சமிபத்தில் ஷாருக் நடிப்பில் வெளிவந்த FAN படம் பார்க்கவேண்டும்போல் இருந்தது.

               படம் ஹபிப் பைசலின் திரைக்கதையால் போரடித்தாலும் இன்றைய நிலையில் அதுவும் தமிழகத்தில் சில குறிப்பிடத்தகுந்த ஹீரோக்களின்மீது ரசிகனுக்கு இருக்கும் மனநிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறது.

           ஷாருக் கொஞ்சம் மெனக்கட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தன்னுடைய உண்மையான ஹீரோ இமேஜிற்கு எந்த பாதிப்பும் வராமல் அதே சமயம் ஒவ்வொரு ஹீரோவிற்கும் பின்னால் இருக்கும் ரசிகன் என்னவெல்லாம் யோசிப்பானோ அந்த உணர்சிகளை படத்தில் கொட்டியிருக்கிறார் மனிதர்.

        கவ்ரவாக வரும் ஷாருக் உண்மையிலேயே மிரட்டுகிறார். செண்டிமெண்ட் காட்சிகள் அருமை. சில காட்சிகள் முகம் சுழிக்கவும் வைக்கிறது.

   மனு ஆனந்த்தின் காமரா நம்முடன் பேசுகிறது. ஒவ்வொரு பிரேமிலும் விளையாண்டிருக்கிறார். சில காட்சிகள் ஹாலிவுட்தரம். வாழ்த்துக்கள் மக்கா.

  நம்ரதா ராவ் எடிட்டிங்கும் அருமை. திரைகதையில் மெனெக்கெட்டு இருந்தால். படம் பக்காவகியிருக்கும். பின்னணி இசை ஓகே. மனீஷ் ஷர்மா இயக்கிய விதத்தை பொறுத்தவரையில் ஷாருக் மற்றும் ஷாருக் ரசிகர்களை ஏமாற்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

     என்னடா ஹீரோயினை பத்தி ஒருவார்த்தைகூட இல்லை என்று யோசிக்க வேண்டாம். இதில் யார் ஹீரோயின் என்று எனக்கு இன்னும் புலப்படவில்லை.

பஞ்ச் - FAN - ஷாருக் பேன்களுக்கானது

ஸ்ரீ ரேட்டிங் - 3/5

8 கருத்துகள்:

  1. இப்போது வரும் ஹிந்திப் படங்கள் எல்லாம் பார்ப்பது கிடையாது. சில புகழ்பெற்ற படங்கள் பார்ப்பேன். அமீர்கானின் ரங் தே பசந்தி, 3 இடியட்ஸ், தாரே ஜமீன் பர் போல..

    பதிலளிநீக்கு
  2. அந்த அளவுக்கு இந்த படத்தை எதிர்பார்த்தேன் சார்

    பதிலளிநீக்கு
  3. பொதுவாக சினிமா படங்கள் பார்ப்பது கிடையாது ஸ்ரீ. எப்போவாது போனால் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இப்பொழுது வாரம் ஒருமுறை போகிறேன் தமிழ்படங்கள் இப்படியே போய்க்கொண்டிருந்தால் நிறுத்திவிடுவேன்

      நீக்கு
  4. பொதுவாகப் படங்கள் பார்ப்பது குறைந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல படங்களை பகிர்கிறேன் முடிந்தால் பாருங்கள்

      நீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...