வியாழன், 30 ஜூன், 2016

டிஸ்லெக்ஸ்சியா - நோய் அல்ல

      இன்றைய நாள் தீவிர தொண்டைக்கட்டுடன் ஆரம்பித்தது. காலை ௧௦ மணிக்கு அறந்தையில் ஆசிரிய பெருமக்களுக்கு , ஒன்பதாம் வகுப்பில் உள்ள டிஸ்லெக்சியா  குழந்தைகளை கண்டறிவது எப்படி எனபது பற்றிய ( டிஸ்லெக்ஸ்சியா எனபது பற்றி அறிய நீங்கள் ஆமீர் கான் நடித்த தாரே சாமின் பர் என்ற படம் பார்த்தல் நலம் ) பயிற்சி அளித்தாக வேண்டிய சூழ்நிலை. 

  என்னசெய்வதென்று புரியாமல் தவிப்புடன் பயிற்சிக்கு கஸ்தூரி சார் அவர்களுடன் சென்றிருந்தேன். ஒருவேளை அங்கு செல்லும்போது வாயிலிருந்து வெறும் காற்று மட்டும் வந்தால் எல்லாத்தையும் மேலே இருக்கவர் பார்த்துக்கொள்வார் (கஸ்தூரி சார்) என்ற மனநிலையுடன் சென்றுவிட்டேன். ஒரு சின்ன மனதைரியம் என்னவென்றால் ஒரு மணி நேரம் தான் பயிற்சி அளிக்க வேண்டும். 


   எங்கள் வண்டி  பள்ளியின் முன்கேட்டில் நுழைந்தபோதே அங்கு இருந்தவர்கள் நல்ல இரண்டு அடிமைகள் சிக்கிவிட்டதாகவே எங்களை எண்ணியது  அங்கு அமர்ந்த பின்பு என் மரமண்டைக்கு புரிய வந்தது காலம் செய்த கோலம். சரி நடந்தது நடந்துவிட்டது சரி பயிற்சி பற்றிய செய்திக்கு வருகிறேன்.டிஸ்லெக்ஸ்சியா என்பது  குறைபாடுதான். மாறாக அது நோய் அல்ல என்பது என்னுடைய புரிதல். கற்றலில் அதுவும் வாசித்தலில் , எழுதுதலில் , கணிதத்திறனில் ஏற்படும் ஒருவகை குறைபாடு. இவர்கள் சாதாரணமாக இவர்கள்  பாடங்களை கற்பதில்தான் குறைபாடுடைய மாணவர்கள் மற்றபடி மற்ற மாணவர்களைவிட வேறு சில திறன்களில் முற்போக்கானவர்கள். 


உதாரணமாக இவர்கள் செய்யும் தவறுகள் எழுத்துக்களை மாற்றி எழுதுவது அதாவது (PIT = BID) என எழுதுவது , வாசிக்க தெரியாமல் இருப்பது, சோம்பேறித்தனமாக இருப்பது போன்ற சிலவகை பிரச்சனைகளை மட்டுமே உடையவர்கள். 


இவர்களை சரி செய்வது எப்படி என்பதை பற்றி MDA ( Madras dyslexia assosiation ) ஒரு கையேடை தயாரித்து  பள்ளிக்கல்விதுறையிடம் கொடுத்துள்ளது. டிஸ்லெக்ஸ்சியா பற்றிய இன்னும் விரிவான கட்டுரை மற்றும் அவர்களை சரி செய்யும் வழிமுறைகள் பற்றிய கூறுகளையும் ஆராய்ந்து அது  பற்றிய விரிவான அலசல்களுடன் அடுத்த பதிவில் வருகிறேன் ...

நன்றியுடன் ஸ்ரீ 

16 கருத்துகள்:

 1. இப்போ கூட நான் ஒரு எண்ணை எழுதுகிறேன் என்றால், அல்லது கணிணியில் கண் பார்த்த எண்ணை உள்ளிடுகிறேன் என்றால் மாற்றி விழுந்து விடுகிறது. 679 என்று இருக்கிறது என்றால் 697 என்று அடித்து விடுவேன். எனக்கும் அந்தக் குறைபாடு சற்று இருப்பதாக எனக்குத் தோன்றும். 'தாரே ஜமீன் பர்' நான் ரசித்த ஒரு திரைப்படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கானது குறைபாடு அல்ல ஸ்ரீ சார்... கண்களுக்கு ஓய்வில்லை என்பது எனது அனுமானம் ... அதற்கு ஒரு எளிய பயிற்சி எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து முழுதாக விடுபடலாம்

   நீக்கு
 2. அருமையான வழிகாட்டல்
  தொடரட்டும் தங்கள் பணி

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  பதிலளிநீக்கு
 3. அருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஸ்ரீ, தங்களின் தளமும், விடயங்களும் அருமை. தங்களின் விதைக்கலாம் காலத்திற்கு ஏற்ற ஒன்று, புதிய முன் மாதிரி. ஹிந்து ஆங்கில செய்தித்தாளில் வந்த செய்தி பார்வைக்கு வைக்க விரும்புகிறேன், "விதைக்கலாம்" பயணத்திற்கு பயனுள்ளதாயிருக்கும்.
  http://www.thehindu.com/news/cities/Coimbatore/from-waste-to-wealth-saving-water-and-plants/article5910410.ece

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

   நீக்கு
 5. டிஸ்லெக்சியா! அது நோயே அல்ல. குறைபாடுதான். பார்க்கப் போனால் இது பெரிய ஆழமான ஒரு விஷயம். இதைப் பற்றிய விழிப்புணர்வு இப்போதெனும் வந்துள்ளதே மகிழ்சிதான். முன்பு குழந்தைகளை முட்டாள் எதற்கும் லாயக்கில்லை என்று முத்திரை குத்தி விடும் வழக்கம் இது பற்றித் தெரியாததால். தாரே சமீன்பர் படம் அருமையான படம். அது வந்த பிறகு கூட விழிப்புணர்வு வரவில்லை..இப்பொது பள்ளிகள் கூட வரத் தொடங்கி உள்ளன.

  மூளை பற்றிய பல விஷயங்களில் இதுவும் ஒன்றுதான். ஆனால் இது வெளியில் தெரியாத ஒன்று. ஆட்டிசம், ஹைப்பர், எல்லாம் கூட வெளியில் தெரிந்து விடும்.

  என் மகனும் கற்றல் குறைபாடு இருந்தவன் தான். பள்ளியில் புரிந்து கொள்ளவில்லை. அதனால் வீட்டிலேயே பயிற்சி. அதைப் பற்றி முழுவதும் விரிவாக இல்லை என்றாலும் எங்கள் தளத்தில் ஜஸ்ட் விழிப்புணர்வ் ஏற்படுத்த இரு வருடங்கள் முன்பே எங்கள் தளத்தில் அனுபவ ரீதியாக எப்படி ஏற்படுகிறது என்பது வரை மூன்று பதிவுகளாகப் போட்டிருக்கிறேன் ஸ்ரீ.

  நல்லதொரு பயிற்சி மிகவும் மகிழ்வாக இருக்கிறது. ந்ல்லதொரு விசயத்தைக் கையில் எடுத்திருக்கிறீர்கல். தொடரட்டும் தங்கள் பணி! வெற்றி அடைய வாழ்த்துகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அம்மா ... தொடர்ந்து இதைப்பற்றி பதிவு செய்கிறேன் சரி செய்துவிடக்கூடிய குறைபாடு... குழந்தைகளை புரிந்துகொண்டால் அவர்களின் வழியில் சென்றால் எதுவும் சாத்தியமே !!! தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி

   நீக்கு
 6. அருமையான விழிப்புணர்வுப் பதிவு Thank you....

  பதிலளிநீக்கு

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம் "முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்" இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது ...