செவ்வாய், 21 ஜூன், 2016

தூக்கி எறியப்பட்ட சொற்கள் - வீதி 28

வீதி இலக்கியக் களம்  - புதுக்கோட்டை 


       கடந்த ஞாயிறு (20-06-2016) அன்று நடைபெற்ற வீதி இலக்கியக் கூட்டத்தில் நான் வாசித்த கவிதை :

தூக்கி எறியப்பட்ட சொற்கள் 


ஜென் போன்றதொரு 
ஆழ்ந்த தியானத்தில்
எச்சிலை விழுங்கியப்படியும் 
பேனாவின் பின்புறம் 
பற்களால் சிற்பம் செய்தபடியும் 
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்  ...... 

இரவில் மொட்டைமாடி நடையிலும் 
ஹெட்செட் வழி இசையிலும் 
உறங்காத உறக்கத்திலும் 
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...

காலை கனவில்  
மலையில் நடந்தபடியும் 
குளத்தில் கல்லெறிந்தபடியும்
தூரலில் நனைந்தபடியும் 
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...


நினைவுகளை 
பேனாவில் ஊடுருவச்செய்து 
வார்த்தைகளாக்கி 
மைவழி சிதறச்செய்ய   
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...

செவிகளில் 
ரீங்காரமிடும் சொற்களை 
பொறிக்கியெடுத்தும் 
சுற்றி வந்து தர்க்கம் செய்யும்
சொற்கள் தாண்டியும்  
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...

உருண்டு பிரண்டும் 
உருக்கிச் சேர்த்தும்
உன்னதமாய் இல்லையென 
தூக்கியெறிந்தேன் 
உனக்காக எழுதப்பட்ட 
ஆயிரம் சொற்களை....
                                                       --பா . ஸ்ரீமலையப்பன்

28 கருத்துகள்:

  1. அருமை. எழுத நினைத்த சொற்கள் சரியாய் அமையவில்லையோ!!

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்

      நீக்கு
  3. அருமை. பாராட்டுகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  4. அவளுக்கான சொற்கள் கிடைக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. சொற்கள் கிடைக்கட்டும். அது சரி, முதலில் அவள் கிடைத்தாரா?

    பதிலளிநீக்கு
  6. அழகான சொற்களில் கவிதை ஆனால் அவளுக்காக கிடைக்காதவை...

    அழகான சொற்கள் கிடைக்கட்டும்...அழகான அவளும் தான்...

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. தேடுங்கள் நண்பரே கண்டிப்பாக கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  8. அதிகாலை கனவு பலிக்கும் என்பார்களே..!!!பலிக்குதான்னு பார்த்துவிடுங்கள்..

    பதிலளிநீக்கு
  9. எனக்கு இந்த சொற்களே போதும் ,அவளுக்காக ,ரொம்பவும் மண்டைக் காயாதீங்க !ஆயிரம் சொல் செய்யாததை ,ஒரு செயல் செய்யும் :)

    பதிலளிநீக்கு
  10. முதலில் என்னை மன்னிக்கவேண்டும் மலை!
    “கவிஞர்” என்ற முன்னொட்டு பார்த்து, நானும் “கவிஞர்”மலையப்பன் என்று கிண்டலாகத்தான் சொன்னேன். பிறகுதான் புரிந்துகொண்டேன், நீங்கள் உண்மையிலேயே கவிஞர்தான் என்பதை!
    செதுக்கப்பட்ட வார்த்தைகளில் சிக்கலான வாழ்க்கையைச் சிறப்பாகச் சொல்லிவிட்டீர்கள். உண்மையிலேயே அருமையான கவிதைதான்.
    தன்வாழ்க்கையை படர்க்கையில் நின்று பார்க்கத் தெரிந்தவர்கள் வெற்றிபெறுவார்கள் என்பதே உண்மை!
    நீங்கள் வெற்றிபெறுவீர்கள் உங்கள் கவிதையைப் போலவே ஆனால், “அவர்” வந்ததும் கவிதையைக் கைவிட்டு விடாதீர்கள் என்பதே என் வேண்டுகோள். இரண்டும் வசப்பட என் இனிய வாழ்த்துகள் கவிஞர் மலைஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் துணையோடு இரண்டிலும் வெற்றி பெறுவேன் அய்யா (தாத்தா)... நான் கலங்கும்பொழுதெலாம் என்னை தேற்றி நிறுத்தியிருக்கீறீர்கள் நீங்கள் இல்லாமல் இன்று நான் இல்லை என்பதே உண்மை ...ஒருநாள் ஊருக்கும் உரக்கச் சொல்ல வேண்டும் ... உங்களால் கவிஞன் என்று வாழ்த்து பெற்றுவிட்டேன் இனி உங்கள் மலை மலைபோல் ஏழும் நிச்சயமாக ...

      நீக்கு
  11. அருமையான வரிகள் ஸ்ரீ!! நிலவன் ஐயா/அண்ணா ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரியாக்கும்

    பதிலளிநீக்கு
  12. அப்பப்பா என்ன ஒரு வரிகள்!
    இரண்டு தடவை வாசித்தேன்.
    நன்று.
    பிடித்துள்ளது....சகோதரா
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அம்மா ... வருகிறேன் தங்கள் தளத்திற்கு ...

      நீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...