சனி, 21 மே, 2016

குருதிக்கொடை - ஒரு விழிப்புணர்வு பதிவு

சற்றுமுன்  முகநூலில் "சுடச்சுட ஒரு விழிப்புணர்வு  பதிவு" என்று
பதிவிட்டேன் . மக்களிமிருந்து அமோக வரவேற்பு ,என்னடா என்று 
பார்த்தால் அரசியல் பதிவென்று நினைத்து லைக்கிட்டு 
இருக்கிறார்கள் ... சரி இனி எழுதாமல் இருந்தால் நல்லதல்ல என்று 
எழுதிவிட்டேன்... 


புதுக்கோட்டையின் ஒரு முக்கிய தொகுதியில் தேர்தல் நாளன்று பணியில் இருந்தேன் ... அதே ஊரில் என்னுடைய சித்தப்பா வீடு .
என்னுடைய சித்தப்பா வீட்டில் மதிய உணவு, தவிர்க்கமுடியவில்லை சாப்பிட சென்றுவிட்டேன். சாப்பிட்டுகொண்டிருக்கும்போதே ஒரு அவசர அலைபேசி அழைப்பு ...போச்சுடா எந்த ஊருக்கு போட போறாங்களோ தெரியலையே என்ற முனுமுனுப்புடன் (குறிப்பு : தேர்தலுக்கு முதல்நாளன்று பணியிடத்துக்கு போய்விட்டால் நமக்கு சகஜமாகிவிடும் அதுவே எல்லாரும் போனபின்பு தேவையிருந்தால் கூப்பிடுவோம் என்றால் அது நம்மை ஒரு ஜென் நிலைக்கு கொண்டுசென்றுவிடுகிறது ...அனுபித்தவருக்கே அந்த வலி புரியும் ) விசயத்துக்கு வாறேன் ....


அலைபேசியில் ஒரு நண்பர் உடனடியாக ஏ நெகடிவ் இரத்தம் தேவை என்னுடைய நண்பருக்கு என்றார்..  எப்பொழுதுமே நான் இதைபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் தொடர்புகொள்வது என்னுடைய நண்பர் திருமிகு. ஆனந்த் அவர்களைதான் , அவர் கோவையில் இருக்கிறார் அவர் தமிழகம் முழுவதும் நண்பர்களை இணைத்து ஒரு குருதி அமைப்பை உருவாக்கி எங்கு இரத்தம் தேவையோ அங்கு அவர்களை தொடர்புகொள்ளச் செய்து உதவி செய்து வருகிறார் .. அவருக்கு உடனேயே அழைத்து குருதி தேவை நண்பரே என்றவுடன் அவர் ஓரிரு நண்பர்களின் அலைபேசி இணைப்புகளை தந்தார் ...


அவர்களுக்கு போன் செய்து கேட்டபோது அவர்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்னாள் தான் கொடை செய்திருப்பதாக சொன்னார்கள் ... என்ன செய்வதென்று தெரியவில்லை .. உடனே என்னுடைய கட்செவி குழுவில் எப்பொழுதும்போல் பதிவிட்டேன் (முகநூலிலும் பதிவிட்டிருந்தேன் அதை லைக் செய்தவர்களே அதிகம்.. தயவுசெய்து இனிமேலாவது படித்துவிட்டு லைக் செய்யுங்கள் மற்றும் இதை போன்ற தகவல்கள் நம்பிக்கையான நபரிடமிருந்து வரும்போது  உதாசினப்படுத்டாமல் உடனடியாக பகிருங்கள்   )

இந்தமுறை கட்செவியில் பார்த்த ஒரு நண்பரிடமிருந்து அழைப்பு. அவரது பெயர் ரமேஷ் சக்தி .. அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பில் மாணவர் , ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறார். உடனடியாக அவரது வேலைகளை அப்படியே விட்டுவிட்டு காரைக்குடியிலிருந்து புதுகைக்கு ஓடோடிவந்து உடனடியாக உதவி செய்தார் . நண்பருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை . இவர் மட்டும் அல்ல எனக்கு தெரிந்து என்னுடைய குழுவில் நண்பர் ஜலில் 28 முறை குருதிகொடை செய்திருக்கிறார் , அண்ணன் குருமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் , அண்ணன் மணிகண்டன் அவர்கள் இன்னும் பலர் குருதிகொடை செய்துவருகிறார்கள் .. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...நன்றிகள் ..(நண்பர் திரு . ரமேஷ் சக்தி தேர்தல் நாளன்று குருதி தந்து  உடனடியாக உதவியவர் )


நண்பர்களே குருதிகொடையின் அவசியத்தை புரிந்துகொள்ளுங்கள் . 

குருதிகொடை அளிப்பதால் நம்முடைய இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது . 

இப்படி கடினமான நேரத்தில் உங்களால் மற்றவர்களுக்கு  உதவிட கூடிய நேரத்தில் நிச்சயம் உதவி sசெய்யுங்கள் .

அரியவகை இரத்தவகை உள்ள நண்பர்கள் உங்கள் இரத்த வகையில் உள்ள குறைந்தது ஐந்து நபர்களை தெரிந்துவைதுக்கொளுங்கள் .உங்களுக்கோ அல்லது உங்களை தெரிந்தவர்களுக்கோ நிச்சயம் ஒருநாள் உதவும் .

மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுங்கள் ஏனெனில் ஒருவேளை ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கும்போது உங்களுக்கோ அல்லது உங்களால் மற்றவர்களுக்கோ இரத்தம் அளிக்க 24 மணி நேரத்திற்கு முன்புவரை நீங்கள் மது அருந்தாமல் இருக்க வேண்டும் இல்லையெனில் இரத்தம் அளிக்கவோ பெறவோ முடியாது.

உங்கள் சட்டை பையில் உங்கள் குருதி வகையை ஒரு பேப்பரில் எழுதி வையுங்கள்..முக்கியமாக சக்கரை நோயாளிகள் மற்றும் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 


மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்... இந்த பதிவு ஒருவேளை உங்களால் மற்றவர் உயிரை காக்கலாம்...

தமிழ்நாட்டில் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் குருதி வேண்டுமெனில் தொடர்புகொள்ள 7639972504.  நண்பர் ஆனந்திடம் கேட்டுவிட்டு அவரது தொலைபேசி என்னையும் பிறகொரு பதிவில் தருகிறேன்..


நன்றி .... நாளை விதைக்கலாம் தொடர்பதிவோடு வருகிறேன்..

39 கருத்துகள்:

 1. அருமையான விழிப்புணர்வு பதிவு நண்பரே
  குருதிகொடை பத்தி என் அனுபவத்திலேயே
  புரிந்து கொண்டிருக்கிறேன் ....
  இந்த பதிவின் மூலம் அதிகமாக தெரிந்து கொண்டேன்....
  வாழ்த்துகள், தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்திற்கும் வருகைக்கும் நன்றி நண்பரே !!! தொடர்வோம்

   நீக்கு
 2. கல்லூரிப்பருவத்தில் NSS இரத்ததான முகாமில் பல தடவைகள் தானம் செய்து இருக்கிறேன் ஆனால் ஒரு தடவை ஒரு குழந்தை யிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் அதற்கு இரத்தம் வேண்டுமென்று பல இடங்களில் தேடி அலைந்து கடைசியாக எங்கள் கல்லூரிக்கு வந்து கேட்ட போது எனது குருப்புதான் அவர்களுக்கு தேவை என்று தெரிந்தது நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொடுத்த்தால் சிறிது யோசித்தேன் கடைசியா சரி வாருங்கள் என்று சொல்லி அவர்களுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று கொடுத்தேன் அந்த சம்யதில் அந்த பெற்றோர்களின் கண்களுக்கு நான் கடவுளாக தெரிந்தேன் வாழ்க்கையில் நான் செய்த நல்ல காரியங்களில் அடுவும் ஒன்று....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரிய செயலை செய்திருக்கிறீர்கள் பாராட்டுகள்

   நீக்கு
  2. அரிய செயலை செய்திருக்கிறீர்கள் பாராட்டுகள்

   நீக்கு
 3. இப்போது உங்களின் முயற்சியால் ஒரு நல்லகாரியம் நடந்திருக்கிறது இந்த இளம் வயதில் பல நல்ல காரியங்களை செய்து வருவது கண்டு சந்தோஷம்.. பாரட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி அய்யா ... போன வாரம் ஒரு குழந்தையையும் காப்பாற்றினோம் ஓ நெகடிவ் ... வருகைக்கு நன்றி

   நீக்கு
 4. நல்லதொரு பதிவு. எனக்கும் இப்படிச் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அரியவகை இரத்த வகைக் கொண்டவர்கள் பாடுதான் திண்டாட்டம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சார் அப்படிப்பட்டவர்களுக்கு நாம் நிச்சயம் உதவி செய்தாக வேண்டும்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்

   நீக்கு
 5. அருமையான பதிவு! இந்த பதிவை படித்ததும் எனக்கும் சில நண்பர்களை ஒருங்கிணைக்கலாம் என்று தோன்றுகிறது!!! தங்கள் உதவி கள் தொடரட்டும் நன்றி தோழர்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கள் தோழர் .. தொடர்வோம் நண்பரே ... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா...

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா ...

   நீக்கு
 9. எழுத்தில் முதிர்ச்சி இருக்கிறது....மேலும் உச்சங்கள் எளிதாய் அமைந்திடும்....தொடர் புதுமைகளில் வெற்றியே கிட்டிடும்....வாழிய பல்லாண்டு தம்பி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா...

   நீக்கு
 10. அருமை நண்பரே தங்களது செயலுக்கு எமது ராயல் சல்யூட்
  நான் நெகு காலமாக அபுதாபியில் குருதிக்கொடை வழங்கி கொண்டுதான் வருகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி அய்யா ... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

   நீக்கு
 11. வாழ்க! வளர்க!! தங்களின் தொண்டுள்ளம்...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா ...

   நீக்கு
 12. உண்மையில் சக்தி வாய்ந்த நண்பர்தான் திரு . ரமேஷ் சக்தி ...வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா

   நீக்கு
  2. நல்ல தகவல்... பகிர்ந்தமைக்கு நன்றிகள் !

   நீக்கு
  3. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா

   நீக்கு
 13. உங்களின் விதைக்கலாம் அமைப்பின் செயல்பாடுகள் சிறப்பானது! குருதிக் கொடை பற்றிய விழிப்புணர்வு பதிவு சிறப்பு! நன்றி! உங்கள் சேவைகள் தொடரவாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 14. உங்களின் விதைக்கலாம் அமைப்பின் செயல்பாடுகள் சிறப்பானது! குருதிக் கொடை பற்றிய விழிப்புணர்வு பதிவு சிறப்பு! நன்றி! உங்கள் சேவைகள் தொடரவாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா

   நீக்கு
 15. மிக மிக பயனுள்ள பதிவு.நீங்கள் சொல்வதை மனதில் கொள்கிறேன். மற்றவர்க்கும் சொல்கிறேன்.ரத்த தானம் போல சிறப்பான தானம் வேறில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா ... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   நீக்கு
 16. மிக மிக பயனுள்ள ந்ல்லதொரு பதிவு. சொல்கின்றோம் பிறருக்கும். நாங்கள் கல்லூரிக்காலத்தில் இரத்த தானம் கொடுத்துள்ளோம். அதன் பின்னும் கொடுத்தும் வந்தோம். இப்போது இருவருமே இனிமையானவர்களாகிவிட்டதால் கொடுக்க முடியவில்லை. ஆனால், தெரிய வரும் போது இதனைச் சொல்கின்றோம். மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 17. அரிய செயல். தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 18. அரும்செயலை ஆற்றி உள்ளமைக்கு வாழ்த்துகள். தேர்தல் பணி எனக்கும் ஒதுக்கி ஆணையிட்டு, ரிசர்வ் என்று உட்கார வைத்து அல்லல்படுத்தியதற்கு பதில் தேர்தல் வேலையே செய்து விட்டு உடனடியாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ரிசர்வ்-ல் சும்மா உட்கார்ந்துவிட்டு காசு வாங்கலாம் என்று நினைத்தால் அதைவிட கொடுமை வேறு ஏதமில்லை. நானும் இக்கட்டான சூழ்நிலையில் ”ரிசர்வ் கைதியானேன்”

  பதிலளிநீக்கு

PADMAN

ஜனவரி 26 அன்று அக்க்ஷய் குமார் நடிப்பில் "PADMAN" என்றொரு திரைப்படம் வெளிவர இருக்கிறது... நம்முடைய கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமிக...