புதன், 11 மே, 2016

பேராசை பேரிழப்பு

   இன்று புதுகையின் ஓர் வளர்ந்துவரும் கடைக்கு பர்னீச்சர் பொருள் வாங்குவதற்காக நண்பர்களோடு சென்றிருந்தேன். கடையின் உரிமையாளர் படு பிசியாக இருந்தார். நாங்களும் வாங்கவேண்டிய பொருளை அங்கு பணிபுரிந்த ஊழியரிடம் விசாரித்து அதை வாங்கும் மோடில் என்னை தயார்படுதிக்கொண்டேன்.

  நேராக கல்லாவிற்கு சென்று அவரை எப்படியேனும் மூளைசலவை செய்து என்னுடைய பட்ஜெடிற்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்று மனதுக்குள்ளே கூறிக்கொண்டு அவரிடம் பேரத்தை துவக்கினோம்.

  எங்கள் தொகையை நாங்கள் கூறியவுடன் எங்களை சமாளித்துவிடலாம் என்று நினைத்த முகம் நேரம் ஆக ஆக எங்களை ஒரு டேரரை போல் பார்க்க துவங்கியது. இத்தனைக்கும் நாங்கள் அப்படி ஒன்றும் பிரம்மாண்ட பேரம் பேசிவிடவில்லை.

  சரி அவரையே ஒரு கட்டுபடியான தொகையை சொல்லச்சொல்லலாம் என்றால் அதே விலைதான் என்றுகூறி மனிதன் ஆணியடித்தாற்போல் ஒரு பத்து நிமிடங்கள் அசையாமலும் எங்களை கண்டுகொள்ளாமலும் இங்கிருந்து கிளம்பமாட்டாயா என்பதுபோல் அவருடைய வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.

  இதற்கு முன்னமே அவரது கடையில் பல ஆயிரங்களுக்கு நாங்களே பொருட்கள் வாங்கியிருப்பதால் எங்களாலும் அவர் கேட்ட தொகைக்கு கட்டுப்படாமல் நிதானமாக நாங்கள் உங்களுடைய நம்பிக்கையான வாடிக்கையாளர் இந்த முறை ஒரு வாடிக்கையாளர் சேவையாக குறைத்துகொள்ளலாமே என்று சொன்ன பிறகும் அவர் மசிவதாய் இல்லை.


   இது சரிப்படாது என்பதுபோல் என் பட்ஜெட்டைவிட அவருக்கும் குறையாமல் கூட ஒரு இருநூறு ரூபாயை கையில் திணித்தேன். அவர் அலுங்காமல் பணத்தை மேஜையின்மீது வைத்து வெளியே போ என்பதுபோல் பார்த்தார்.


  சும்மாவே ரத்தத்தை கொதிக்கவிடும் நான் இன்று அதை ஆவியாக்கும் வரை கொதிக்கவிட்டு நீங்கள் எங்களை தினசரி வாடிக்கையாளர் என்பதைகூட பார்க்காமல் இப்படி பேசுவது சரியல்ல என்று என் குரலின் டெசிபலை கொஞ்சம்கொஞ்சமாக ஏற்றினேன். என் நண்பர்களிடம் வேண்டாம் வாருங்கள் என்று கூற கீழே இறங்கினோம். சரி அப்படியாவது இவன் ஒரு நூறை அதிகமாக கேட்டு கூப்பிடமாட்டானா என்ற எண்ணம்.


  அவன் எங்களை கண்டுகொள்ளவே இல்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் வருத்தமே மிஞ்சியது. பல லட்சம் முதலீடு செய்தாலும் மனிதனுக்கு பணத்தாசை விடுவதில்லை. உண்மையில் நாங்கள் கேட்ட தொகைக்கு கொடுத்திருந்தால் அவருக்கு ஒன்றும் பெருத்த நஷ்டம் வந்திருக்காது. வருத்தம் என்னவெனில் நாங்கள் இறங்கி வந்தும்கூட அவர் ஒரு பைசாகூட இறங்கி வரவில்லை.


   வாடிக்கையாளர் மீது அக்கறை இல்லாத எந்த ஒரு வியாபாரியும் சுயநலவாத கூட்டங்களே. நல்ல வியாபாரிகளுக்கு மத்தியில் இப்படிப்பட்டவர்களும் இருப்பது கவலைக்குரியது.

நீதி: நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிற்கும் இன்னொருவரை சார்ந்தே          வாழ வேண்டும். 


                             அவர் இனியாவது திருந்த வேண்டும்.


பார்போம்

2 கருத்துகள்:

  1. வாடிக்கையாளர் மீது அக்கறை இல்லா வணிகர்களேஇன்று அதிகம் நண்பரே

    பதிலளிநீக்கு

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம் "முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்" இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது ...