சனி, 14 மே, 2016

விதைக்கலாம் - பகுதி 2


அமைப்பு  ஒரு முன்னோட்டம் ஒரு தொடர்பதிவு எழுத ஆசைப்பட்டு அதை எழுதாமல் விடுவது எவ்வளவு கொடுமை... இத்தனை காலம் அதை எழுதாமல் விட்டதற்கு மன்னிக்கவும் . சில சொந்த வேலை காரணமாக என்னால் எழுத முடியாமல் போயிற்று ...  இன்றுமுதல் வாரம் ஒரு பதிவாக நீண்ட தூர பயணமாக  விதைகாலாமின் பயணத்தை உங்களோடு பயணிக்க போகிறேன் ...

இதற்கு முந்தய பதிவின் லிங்க் இதோ 

http://ethilumpudhumai.blogspot.com/2016/02/kalam-25.html 

   இப்படியாக கலாம் அய்யா இறந்த ஓரிரு நாட்களுக்கு பிறகு நான், தம்பி பாலாஜி , அண்ணன் பாலமுருகன் மூவரும் ராமேஸ்வரம் செல்வதாக முடிவு செய்து பாலாஜியும் நானும்  ரயிலுக்கான முன்பதிவு செய்வதற்காக சென்றபோது அங்கே எதிர்பாராத விதமாக உட்கார நேரிட்டது ... அந்த அமர்தல் இல்லாமல் போயிருந்தால் , அங்கே எங்களுக்கு போனவுடன் பயணசீட்டு கிடைத்திருந்தால் இந்த எல்லாமே நடந்திருக்குமா தெரியவில்லை !!!


   நடந்தது , நடக்கிறது , நடந்துகொண்டேயிருக்கும் என்றென்றும்...


   நானும் பாலாஜியும் கஸ்தூரிரங்கன் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு அமைப்பை உருவாக்குவதாக முடிவெடுத்தவுடன் நம்மை போன்ற சிந்தனை உள்ள நண்பர்களை அழைத்து  ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அமைபிற்கான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று முடிவுசெய்துகொண்டோம். கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது . கூட்டம் நடத்த இடம் வேண்டுமே என்றவுடன் கஸ்தூரிரங்கன் அய்யா அவர்களின் நண்பர், பாரதி பயிற்சி பள்ளியின் உரிமையாளர் திருமிகு.செல்வராஜ் அய்யா அவர்கள் இடம் தந்து உதவினார்கள். அவர்களுக்கு விதைக்கலாம் சார்பில் மனமார்ந்த நன்றி.

    எந்த ஒரு செயலும் ஈடேறுவது நண்பர்களால் என்பது என்னால் மறுக்க முடியாத உண்மை . அப்படி இதை போன்ற ஒரு அமைப்பு என்று சொன்னவுடன் கூட்டத்திற்கு வந்து இன்று வரை பிடிப்புடன் இருக்கிறார்கள்.                                         ( முதல் கூட்டம் , பாரதி பயிற்சிபள்ளி )

கூட்டத்தில் இலுப்பூர் பள்ளி ஆங்கில ஆசிரியர் அண்ணன் காசிபாண்டி (இப்பொழுது ஏ.மாத்தூர் பள்ளி ), புதுகையின் பி .வெல் மருத்துவமனை மேலாளர் நண்பர் பாக்கியராஜ் , முன்னாள் ஜெ.சி.ஐ . புதுக்கோட்டை கிங்ஸ் தலைவர் நண்பர் கனகமணி , மரியா ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் நண்பர் யுஜின் , டிவிஎஸ் ஊழியர் தம்பி குணசேகரன் , இராணியார் பள்ளி ஆங்கில ஆசிரியர் அண்ணன் பாலமுருகன் , கல்வியாளர் நண்பர் அருங்குலமுருகன் , வேளாண் மாணவர் நண்பர் பிரபாகரன் , நண்பர் அருண் , தம்பி பாலாஜி , நான் மற்றும் கஸ்தூரிரெங்கன் அய்யா ஆகியோரை கொண்டே முதல் கூட்டம் நடைபெற்றது. இங்கே வேறு எவரையும் விட்டுவிடவில்லை என்றே கருதுகிறேன் .


    முதல் கூட்டத்தில் அமைபிற்கான பெயர் என்ன என்பதை முடிவு செய்வது , குறிகோள்களை முடிவுசெய்துகொள்வது, என்று முதல் அமைப்பை துவக்க போகிறோம் என்றெல்லாம் பல கோணங்களில் சுமார் மூன்று மணிநேரம்  விவாதம் நடைபெற்றது. அமைப்பிற்கான இரண்டாவது கூட்ட நாள் 26-08-2015 என்று குறிக்கப்பட்டது.

 
    அமைப்பு அதிகாரபூர்வமாக இரண்டாவது கூட்டத்திலேயே ஏன் துவக்கப்பட்டது ,  எங்கு தொடங்கப்பட்டது, யார் அதில் பங்குபெற்றனர் , என்ன கொள்கைகள் வகுக்கப்பட்டன ,  இந்த அமைப்பு இது வரை வெற்றிகரமாக செல்ல அங்கு முக்கியமான சில நபர்களின் உடனடி முடிவே காரணம் , அன்று அவர்கள் இல்லையென்றால் ஒருவேளை அமைப்பின் முதல் நிகழ்வு இன்றாககூட இருந்திருக்கலாம்... அப்படியென்ன அதில் சுவாரஸ்யம்


இணைந்திருங்கள்  என்னுடன் ... பயணிப்போம் அடுத்த பதிவில்                                                                                                     பயணம் தொடரும் ...


 

 


19 கருத்துகள்:

 1. ஆல் போல் மேலும் தலைக்கட்டும் 'விதைக்கலாம் ' அமைப்பு !

  பதிலளிநீக்கு
 2. நல்ல அமைப்பு உருவான கதையை இத்தனை சுவாரஸ்யமா,எதிர்பார்ப்போடு எழுத முடியுமா?அருமை வாழ்த்துகள் பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா... நீங்கள் இரண்டு வாரமாக வருவது எனக்கும் நம் விதைக்கலாம் நண்பர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகிறது ...

   நீக்கு
 3. வாழ்த்துகள் நண்பரே....
  பயணம் தொடரட்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ ... உங்கள் ஆதரவோடும் வாழ்த்துக்களோடும் தொடர்வோம் என்றும் ... வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   நீக்கு
 4. பதில்கள்
  1. நிச்சயம் தொடர்வோம் பயணிப்போம்... நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்

   நீக்கு
 5. மென்மேலும் வளர எமது மனமார்ந்த வாழ்த்துகள்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் அய்யா உங்களைப் போன்றவர்களின் ஆதரவும் வாழ்த்தும் இருக்கும் வரையில் பயணித்துக்கொண்டே இருப்போம் ... வருகைக்கு நன்றி அய்யா

   நீக்கு
 6. நல்ல முயற்சியான விதைக்கலாம் உருவான கதை அருமை பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 7. நல்ல முயற்சியான விதைக்கலாம் உருவான கதை அருமை பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 8. பதில்கள்
  1. நன்றி சார் ... மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி

   நீக்கு
 9. முதல்பகுதியும் வாசித்துவிட்டோம்....விதைக்கலாம் உருவானது எப்படி என்பது மிக மிக அருமை...மேலும் தங்கள் பணிகள் சிறந்திட வாழ்த்துகள்!பாராட்டுகள்! உங்கள் பணிகளை கஸ்தூரியும், சகோ கீதாவும் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...அதனால் விதைக்கலாமின் பணிகளை அறிந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றோம் ஸ்ரீ...விதைக்கலாம் பல விதைகளை ஊன்றி செழித்திட வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அய்யா தொடர்வதற்கு ... தாங்களும் ஒருநாள் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் ... சீக்கிரம் வாருங்கள் புதுகைக்கு ... ஆவலோடு இருக்கிறோம்

   நீக்கு

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம் "முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்" இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது ...