வியாழன், 17 மார்ச், 2016

உண்மை கசக்கும்

என்னுடைய  முகநூல் பக்கத்தில் உண்மை கசக்கும் என்ற தலைப்பில் சிலவற்றை எழுதிவருகிறேன். இதோ அவற்றில் சில..

௧. சட்டம் 
      சாமானியர்களை காக்க உருவாக்கப்பட்டவைகள் 
     அவர்களை அழிக்க மட்டுமே பயன்படுகிறது ‪#‎உண்மை‬ ‪#‎கசக்கும்‬

௨. கணம் 
     சந்தோஷகணம் 
     துக்ககணம் 
     கனத்துப்போகிறது 
     இரண்டும் -
     அதிகமானால்...
‪     #‎உண்மை‬ ‪#‎கசக்கும்

௩.  கருணை 
     ஏழையின்
     சிரிப்பில் 
     இறைவனை
     காண்பவர்களே;
     அவர்களின் 
     கண்ணீரையும்
     கண்டுகொள்ளுங்கள் ‪#‎உண்மை‬ ‪#‎கசக்கும்‬

௪. உயிர்தெழு 
     பீனிக்ஸ் 
     பறவைகளை 
     சிலர் 
     சிட்டுக்குருவிகளாய் நினைக்கிறார்கள் 
     பீனிக்ஸ் 
     உயிர்த்தெழும்
     என மறந்து
     ‪#‎உண்மை‬ ‪#‎கசக்கும்‬

௫. நெகிழி 
      காகிதம் 
     அழிக்கிறது 
      உலகை 
     பணமாயும் 
     பாலித்தினாயும் 
     ‪#‎உண்மை‬ ‪#‎கசக்கும்‬

௬. தண்ணீர் 
      உலகின் 
      அறியாமை 
      கண்டு 
      ஏங்கித் 
      தவித்த 
      தண்ணீர்க்
      குழாய்
      வடிக்கிறது
     தன் கண்ணீரை
     சொட்டு சொட்டாய்...
     ‪#‎உண்மை‬ ‪#‎கசக்கும்‬

13 கருத்துகள்:

  1. ஆனால் ,எனக்கு உண்மை இனிக்குதையா :)

    பதிலளிநீக்கு
  2. உண்மை கசக்கும்---உண்மைதான்....

    பதிலளிநீக்கு
  3. உண்மைகள் எப்போதுமே கசக்கும்தான் இல்லையா ஆனால் இங்கு உங்கள் கவி வடிவில் இனிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. கசப்பு நல்லது தானே!
    கசப்பான உண்மைகள் என்றும் சொல்லலாமே!

    பதிலளிநீக்கு
  5. //சாமானியர்களை காக்க உருவாக்கப்பட்டவைகள்
    அவர்களை அழிக்க மட்டுமே பயன்படுகிறது ‪//

    உண்மைதான்.

    சட்டம் ஒரு கருவி. அதை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து நியாயமும் அநியாயமும் நீதிமன்றத்தில் கிடைக்கிறது. ஆனால் நம்மவர்கள் நீதிமன்றத்தையும், நீதிபதியையும் கடவுளுக்கு நிகராகக்கூறி சாமானிய மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள்.

    தர்மமும், சத்தியமும் உயர்ந்தது. அதை மனிதனின் இதயத்தில் இருப்பது.

    சட்டமும், நீதிமன்றமும் நியாயத்தைக் காப்பதற்காக மனிதன் உருவாக்கிய ஒரு கருவி மட்டுமே.

    மனிதன் உருவாக்கிய எந்த ஒரு விசயமும் அதிக நன்மையையும் குறைந்த கெடுதியையும் தருவதாக இல்லை.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு மிக்க நன்றி அய்யா ... அதிகாரவர்க்கமும் அதை சுற்றியுள்ள சில ஜந்துக்க்களும்தான் இவற்றையெல்லாம் தீர்மானிகிறது... ஏழையின் வறுமையில் இவர்கள் குளிர்காய்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  7. உண்மை கசக்கிறது என்பதை இனிய வரிகளால் இனிக்க செய்து விட்டீர்கள். தளத்திற்கு வருகை தாருங்கள்.

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...