வியாழன், 17 மார்ச், 2016

உண்மை கசக்கும்

என்னுடைய  முகநூல் பக்கத்தில் உண்மை கசக்கும் என்ற தலைப்பில் சிலவற்றை எழுதிவருகிறேன். இதோ அவற்றில் சில..

௧. சட்டம் 
      சாமானியர்களை காக்க உருவாக்கப்பட்டவைகள் 
     அவர்களை அழிக்க மட்டுமே பயன்படுகிறது ‪#‎உண்மை‬ ‪#‎கசக்கும்‬

௨. கணம் 
     சந்தோஷகணம் 
     துக்ககணம் 
     கனத்துப்போகிறது 
     இரண்டும் -
     அதிகமானால்...
‪     #‎உண்மை‬ ‪#‎கசக்கும்

௩.  கருணை 
     ஏழையின்
     சிரிப்பில் 
     இறைவனை
     காண்பவர்களே;
     அவர்களின் 
     கண்ணீரையும்
     கண்டுகொள்ளுங்கள் ‪#‎உண்மை‬ ‪#‎கசக்கும்‬

௪. உயிர்தெழு 
     பீனிக்ஸ் 
     பறவைகளை 
     சிலர் 
     சிட்டுக்குருவிகளாய் நினைக்கிறார்கள் 
     பீனிக்ஸ் 
     உயிர்த்தெழும்
     என மறந்து
     ‪#‎உண்மை‬ ‪#‎கசக்கும்‬

௫. நெகிழி 
      காகிதம் 
     அழிக்கிறது 
      உலகை 
     பணமாயும் 
     பாலித்தினாயும் 
     ‪#‎உண்மை‬ ‪#‎கசக்கும்‬

௬. தண்ணீர் 
      உலகின் 
      அறியாமை 
      கண்டு 
      ஏங்கித் 
      தவித்த 
      தண்ணீர்க்
      குழாய்
      வடிக்கிறது
     தன் கண்ணீரை
     சொட்டு சொட்டாய்...
     ‪#‎உண்மை‬ ‪#‎கசக்கும்‬

சுட்டி

நடைபாதையின்  விளிம்பில்  நிழலொன்று  தள்ளாடிக்கொண்டிருக்கிறது  உட்கார்ந்து  எழுந்து  திரும்பி  சப்புகொட்டியது  பொக்கை வாயால...