சனி, 20 பிப்ரவரி, 2016

விதைக்KALAM - 25 தொடர் பதிவு


தொடர்வண்டி நிலையத்தில் அமர்ந்து விதைக்கலாமை பற்றி பேசும்போது விதைக்கலாம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கவில்லை... கலாம் அய்யாவின் மறைவு பெரும் உறுத்தலை ஏற்படுத்தியதன் விளைவு ?
இதோ 25 வாரங்களை நிறைவு செய்திருக்கிறோம் ! 349 கன்றுகள் நடப்பட்டு இருக்கின்றன ! கூடுதலான செய்தி  அனைத்தும் நேரடி கண்காணிப்பில் இருக்கிறது !
மேட்டருக்கு வரேன்....
இவ்வாறு ஒரு அமைப்பை தொடங்கலாம் என்று தொடர்புகொண்ட போது நம்பிக்கை வைத்து நடைபோட அடியெடுத்து கொடுத்தார்  கஸ்தூரி ரெங்கன் அய்யா !
வைத்த அனைத்து கன்றுகளையும் பராமரித்தால் மட்டுமே நான் அமைப்பில்  தொடர்வேன்  என்று கறாராக கூறிய நண்பர் சந்தோஷ் !

விதைக்கலாம் முதல் கூட்டம் (21-08-2015)
என் முன்னோர்களால் மரம் வெட்டப்பட்டது, நான் நட்டு வளர்க்க ஆசைபடுகிறேன் என்று வந்த நண்பர் பாக்கியராஜ் !
விதைக்கலாம் என்று  துணியில் பதாகை அமைத்து கொடுத்த பன்னீர்செல்வம் அய்யா... விதைக்கலாம் இன்றுவரை பார்த்ததில்லை அவரை  !
அனைத்து  நண்பர்களும் அமைபிற்கு பெயர் தேடினோம் ! இறுதியில் நண்பர்  பிரபாகரன் வைத்ததே விதைக்KALAM என்பது ! இயற்கை விவசாயம் பற்றி தன்னை சார்ந்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் !
அண்ணன் காசிபாண்டி விதைக்கலாமின் பயணத்தை தன்னுடைய இலுப்பூர் பள்ளியில் தொடங்க வழிவகை செய்துகொடுத்தார்.
பணி ஓய்வு பெற்ற மறு வாரத்திலிருந்து விதைக்கலாமில் தன்னை ஈடுபடுத்திவரும் எங்கள் மணி சார் !
விதைகலாமின் முதல் நிதியாளர் எங்கள் நிலவன் அய்யா !
நன்றாக நினைவில் உள்ளது இன்றும் ! முதல் கூட்டத்திற்காக  அலைபேசியில் அழைத்த அத்துணை நண்பர்களும் இன்றுவரை இடைவிடாது ஒன்றாய் பயணிக்கிறோம்.  
இதை நீ கண்டிப்பாய் படிப்பாய் பாலாஜி ! பாலாஜி இந்த அக்கினிச்சிறகும் நானும் விதைக்கலாமின் மூலம் விதைதூவ ரெக்கை கட்டி பறக்க துவங்கினோம்... இதோ இன்று நாங்கள் 50 அக்கினிபறவைகளாய் வானத்தில் பறக்கிறோம்  நண்பர்களின் துணையோடு !!!
ஒவ்வொருவரையும் பற்றி இதில் விரிவாக எழுதுகிறேன்... இது விதைக்கலாமின் பயணம்... 
                                                          பயணம் தொடரும்... 

7 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் இளைய கலாம்களே! முகப்பில் படங்களை தொடர்சங்கிலியாயிட்டு (நிகழ்வுப் படங்களினிடையே)பெயரையும் குறிப்பிடுவது முக்கியம் என்று நினைக்கிறேன். இன்றுவரை கஸ்தூரி, கார்த்தி, ஸ்ரீமலை, பாலாஜி, தவிர மற்றவரைப் பெயர்மாற்றி அழைத்துச் சங்கடப் படுகிறேன். (பாண்டியைப் போய் பாக்கி என்று...) எனவே, வேலைகளினூடே முகம் மறைக்கலாம், ஆனால் முகமே தெரியாமல் இருக்கக் கூடாதில்ல.. பின்னர் உறுப்பினர்கள், நிதியாளர்களைத் தனித்தனி பட்டியல் இடுவது அவரவரை ஊக்குவிக்க உதவும்.. ஏற்புடையன ஏற்க, இது என் கருத்து அவ்வளவே. எவ்வாறாயினும் “விதைக்கலாம்” இளைஞர்களின் பணி உன்னதமானது, விரைவில் இக்கன்றுகளைப ்போலவே அமைப்பும் வளரும், வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா... அதற்கான முயற்சியில்தான் இறங்கி இருக்கிறேன் அய்யா நிச்சயம் இந்த தொடர் பதிவில் அனைத்தையும் செய்துவிட இருக்கிறேன்...

   நீக்கு
 2. எனது வலைப்பக்கத்தில் இணைத்திருக்கிறேன், வளர்க!

  பதிலளிநீக்கு
 3. கஸ்தூரி ரங்கண் உங்களை போன்றவர்களின் மனதில் நம்பிக்கை என்ற விதையை விதைத்தார் அந்த விதை உங்களை போன்ற இளைஞர்களின் மனதில் வளர்ந்து இப்போது நீங்க விதைக்கலாம் மூலம் செயல்படுத்த ஆரம்பித்துவீட்டிர்கள்... நிச்சயம் உங்களின் நற்செயல்கள் நீங்கள் நட்டு வைத்த மரங்களை போல வளர்ந்து எதிர்காலத்தில் நற்பலங்களை அளிக்கும்....எதுவும் எதிர்பாராமல் செய்யும் இந்த செயல் மிகவும் பாராட்டதக்கது.நடிகர்களின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் பண்ணி சிரழியும் இளைஞர்கள் மத்தியில் உங்களின் செயல்கள் மிகப் பெருமைபடக்கூடியதாக இருக்கிறது..... வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா... நிகழ்வில் உங்களையும் எதிர்பார்க்கிறோம்...

   நீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம் "முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்" இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது ...