புதன், 4 நவம்பர், 2015

மாரி மனம்மாறி...

கருப்பன் அவன் காவலாளி
ஊரிலேயே உயரமானவன்
பறந்து விரிந்த தோல்கள்
முடியும் அடர்த்தி
வயது ஒரு தொண்ணூறு
எப்போதும் சிரித்த முகம்
எதற்கும் கலங்காதவன்
இடிவிழுந்தும் பிழைத்தவன்

சந்தித்தவர்கள் லட்சோபலட்சம்
பாசக்காரன்  அனைவருக்கும்
அவன் தோலேரி விளையாடாத பிள்ளையில்லை
முதலாளி மாரியப்பன்
மூன்றாம் தலைமுறைக்காரன்
முடிவெடுக்க தெரியாதவன்
முரடன்... முட்டாளும்கூட

முதலாளிக்கு பெண்ணுண்டு
ரமாதேவி என்றபேரில்
கருப்பனுக்கு ஒரேமகன்
காத்தவராயன் அவன்
காதலில் மிதந்தார்கள்
ராயரமா ஆனார்கள்

சந்திக்க ஒரே இடம்
கருப்பண்ணசாமி கோயில்
விழிகள்  பேசியதும்
கைகள் குலவியதும்
கருப்பண்ணசாமி முன்தான்

கருப்பனுக்கு தெரிந்தது
காதல்  கலவரங்கள்
அகத்திலே பரவியது
அணையாத காட்டுத்தீ
தீயினால் அழிவது
காடன்றி வேறுயில

மனம்தேற்றி தலையசைத்தான்
காதலர்கள் இணையராக
ஊர்விட்டு ஊர்சேர்க்க
ஊர்சிதம் செய்தார்கள்
முதலாளி மாரியப்பன்
முரடன் ஆயிற்றே
முன்கோபி என்செய்வான்
பதறியது கருப்பனகம்

காட்டுதீ பரவியது
எட்டுப்பட்டி எங்கெங்கும்
ஈட்டியும் அருவாளும்
போனயிடம் சானையடி
கொதித்தது ஊரெங்கும்
கொன்றுவிட இருவரையும்

நண்பர்கள் மூவிருவர்
நல்லமனூர் வேடுவர்கள்
வெட்டருவா ஏந்திகொண்டு
வயிறுபிழைக்க வந்தார்கள்
கருப்பனை பார்த்தவர்கள்
கண்டகாட்சி அனைத்தையும்
முதலாளியிடம் கூறிடவே
முரடன் மாரியப்பன்
முடிவெடுத்தான்  முட்டாளாய்

வெட்டச்சொல்லி ஆணையிட
வேகம்கொண்ட வேடுவர்கள்
விவேகமற்ற வீனர்களாய்
வீரகாரம் பேசிக்கொண்டு
வெட்டிவிடப்  போனார்கள்
வயதான கருப்பனையும்

நேரே சென்றவர்கள்
கால்வேறு கைவேறாய்
கழுத்தறுத்துப் போட்டார்கள்
கைகாலை கட்டியெடுத்து
முதலாளி மாரியப்பன்
காலில் போட்டார்கள்

பணம்கொடுத்த மாரியிடம்
வந்திருந்த கன்னியப்பன்
வெட்ட மனமில்லை
கருப்பனை பார்த்தவுடன்
வெட்டச்சொன்ன காரணமென்ன
மகளுக்காய் மரத்தினை

முட்டாள் மாரியப்பன்
புத்தனாய் பதில்சொன்னான்
முதிர்ந்த மரம் நல்ல மரம்
மணமகன் ராயனுக்கு
கட்டில் செய்யப்போகுமரம்
கெட்டிமரம் கருப்பன்மரம்

குழவியை தாலாட்ட
தொட்டில் செய்யப்போகும்மரம்
அப்பத்தா ரமாதேவி
அன்பாய் வைத்தமரம்
அங்கேயே வைக்கிறேன்
(என்) பெயர்சொல்ல அடுத்தமரம்....
















25 கருத்துகள்:

  1. மனம் மாறிய மாரி மிகமிக அருமை சகோதரரே!

    உண்மையில் உங்கள் கவிதை என்னைக் கட்டிப்போட்டுவிட்டது!. மரத்தை வெட்டினார்கள் என்பதைக் கூட எத்தனை நாசூக்காகச் சொல்லியிருக்கின்றீர்கள்!

    மிக மிக அருமை சகோதரரே!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் எழுத்துக்கள் ள, ல. ர, ற
      இடம் மாறித் தட்டச்சாகியுள்ளதைக் கவனியுங்கள்!

      நன்றி!

      நீக்கு
    2. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அம்மா... சரி செய்துவிடுகிறேன்

      நீக்கு
  2. பதில்கள்
    1. அதுவா வருதுங்கய்யா.... வருகைக்கு நன்றி சேர்த்து

      நீக்கு
  3. வணக்கம் நண்பரே! தங்கள் தளத்திற்கு புதியவன்! கவிதை அருமை! மரத்தின்மேல் தீரா பற்றுகண்டு வியக்கிறேன்! நன்றி

    நேரமிருப்பின் என் தளமும் வாங்க சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே... இதோ உங்கள் தளத்திற்கு கிளம்பிவிட்டேன்..

      நீக்கு
  4. தாவரங்களின் மேல் தங்களின் பற்று கண்டு வியந்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா... அது உண்மையில் நமக்கு கிடைத்த வரம்தானே அய்யா...

      நீக்கு
  5. நல்ல கருத்துள்ள வரிகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. மரங்களின் காதலரே ,காலமெல்லாம் உங்கள் காதல் வாழ்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கும் வருகைக்கும் நன்றி அய்யா...

      நீக்கு
  7. மரங்கள் என்றதால் விட்டுவிட்டனரோ... ????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையிலாவது சிறிது மனிதம் துளிர்க்கட்டுமே அய்யா... கருத்திற்கும் வருகைக்கும் நன்றி அய்யா

      நீக்கு
  8. அருமை அருமை
    மிகவும் இரசித்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா... தொடர்கிறேன்

      நீக்கு
  9. அழகாக எழுதுகிறீர்கள் நண்பரே, இன்னும் கொஞ்சம் தெளிவு தேவைப்படுகிறது. சில திருத்தங்களுடன் இதையே சில மாதங்களுக்குப் பின் மறு பதிவு செய்யலாம். வாழ்த்துக்கள். - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் தாமதத்திற்கு வருந்துகிறேன் அய்யா... மிக்க நன்றி வாழ்த்திற்கும் வருகைக்கும்... அடுத்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா

      நீக்கு
  11. அருமை அருமை.....

    எழுத்துப் பிழைகளைச் சரி செய்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...