புதன், 18 நவம்பர், 2015

ஆசையே அலைபோலே...

     

ஆசையை வெறுக்கும் புத்தன் அல்ல எவரும் இங்கே. அடுத்ததாக கடவுள் என்ற கோட்பாட்டிற்குள்ளும் போகவிருப்பமில்லை. இருப்பினும் தொடர் பதிவை மைதிலி அக்கா அவர்களின் அன்பு கோரிக்கையோடு தொடர்கிறேன்.

    


௧.உழைத்துப் பிழைக்க நினைக்கும் மனிதனுக்கு உடனடியாக  வேலை வேண்டும்.

௨.குழந்தைகளை கொண்டாட நினைக்கும் பெற்றோர் சிறிதேனும் குழந்தைகளாய் மாற வேண்டும்.

௩.புரிந்துகொள்ளும் உள்ளம், உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனம், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் யாவரும் பெற்றிட வேண்டும்.

௪.சிறுவன் என்ற எண்ணம் தவிர்த்து சிந்தனையை தூண்டும் ஒவ்வொருவரையும் மதிக்க கற்றல் வேண்டும்.

௫.இயற்கையை ரசிக்க பெற்றோர் தன் பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும்.

௬.சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அடுத்தவர் மகிழ்ச்சியை கெடுக்காவண்ணம் செலவு செய்யப்படவேண்டும்.

௭.சாதி, மதம் இல்லாத விண்ணப்ப படிவம் வேண்டும்.

௮.மக்களை நேசிக்கும் தேசத் தலைவன் வேண்டும்.

௯ .குப்பைகள் காணமுடியாத தேசம் வேண்டும்

௧௦.கடைசி ஆசை - இதில் ஒன்றாவது நிறைவேற வேண்டும்.
23 கருத்துகள்:

 1. அனைத்தும் நிறைவேறும்... நிறைவேற வேண்டிய ஆசைகள்....

  அட...! எண்கள் கூட தமிழில்...

  பதிலளிநீக்கு
 2. ஸ்ரீ உங்கள் ஆசைகள் எல்லாம் அற்புதமான ஆசைகள். உங்கள் அனைத்து ஆசைகளும் நிறைவேறட்டும் தம்பி! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. அத்தனை ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகள்பா

  பதிலளிநீக்கு
 4. சாதி மதம் இல்லா விண்ணப்பப் படிவம்
  ஆகா அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 5. அருமையான ஆசைகள்! நிறைவேறட்டும்! வாழ்த்துக்கள்:! சில நாட்கள் முன்னரே உங்கள் வலைக்கு வர வேண்டியது! தள்ளிப்போய்விட்டது! தொடர்கிறேன் நண்பரே! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னாலும் வாரம் ஒரு முறை மட்டுமே தளத்திற்கு வரமுடிகிறது அய்யா...

   நீக்கு
 6. ஆஹா! போட வைக்கும் ஆசைகள்! நிறைவேறட்டும். சாதிமதமில்லா விண்ணப்பப்படிவம் ஆஹா!! இயற்கையை ரசிக்க அனுமதிக்கச் சொல்லும் ஆசையும் ஓஹோ!

  பதிலளிநீக்கு
 7. “சிறுவன் என்ற எண்ணம் தவிர்த்து சிந்தனையை தூண்டும் ஒவ்வொருவரையும் மதிக்க கற்றல் வேண்டும்“ இந்தப் பக்குவம் வந்தாலே எல்லாம் வந்துவிடும். வாழ்க

  பதிலளிநீக்கு
 8. கடைசி ஆசை - இதில் ஒன்றாவது நிறைவேற வேண்டும். ---ஆகா.. சொன்னதில் எதுவும் நிறைவேறாது என்று தெரிந்தும்.. சொன்னதில் ஒன்றாவது நிறைவேற வேண்டும் என்ற முயற்சிக்கு நன்றி! நண்பரே....

  பதிலளிநீக்கு
 9. ஆசை ஆசை இப்பொழுது...ஆசை தீரும் காலம் எப்பொழுது !

  பதிலளிநீக்கு

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம் "முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்" இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது ...