செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

வலைப்பதிவர் திருவிழாங்கோ!!!ப

வணக்கம் வலைப்பதிவர்களே!!!
        நம்முடைய புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா... அப்படி என்ன திருவிழாபா இதுன்னு கேட்குறிங்களா... சொல்றேன் நல்லா  கேட்டுக்கோங்க... உங்க திறமைய வெளிக்கொண்டுவர திருவிழா...உங்க செவிக்கு தீனிபோடற திருவிழா... உங்க அறிவுபசிய போக்கிவைக்கபோற திருவிழா...அதுமட்டும் இல்லைங்க கண்ணுக்கும் விருந்தளிக்கிற திருவிழா...இது எல்லாத்தையும் விட விருது தராங்கப்பா விருது!!!  புதுபதிவர்கள் விருது வாங்கணும்னு நினசின்ங்கனா என்ன பண்ணனும் தெரியுமா?
அதுக்கு உங்களுக்கு ஒரு பிளாகும் கொஞ்சம் அப்டேடும் வேணும் அவ்ளோதாங்க....  நீங்க எத பத்தி வேணாலும் எழுதியிருக்கலாம்... இங்க எதுக்கெல்லாம் விருதுனா
                                           1)   வளர்தமிழ்ப் பதிவர் விருது
(தமிழ்மொழி வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களித்து வரும் பதிவர்)(2)   மின்னிலக்கியப் பதிவர் விருது” 
(கதை,கவிதைப் படைப்புகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)

(3)   வலைநுட்பப் பதிவர் விருது” 
வலைப்பக்கம் எழுத உதவியாகத்
தொழில்நுட்ப விளக்கங்கள் எழுதிவரும் பதிவர்)

(4)   விழிப்புணர்வுப் பதிவர் விருது” 
(சமூக விழிப்புணர்வுப் பதிவுகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)

(5)   பல்சுவைப் பதிவர் விருது” 
                                  (திரைப்படம்ஊடகம் செய்திகளைச் சுவைபட எழுதும் பதிவர்)

இப்படி பல விருது தராங்க... சரி நா விஷயத்துக்கு  வரேன்...  இப்போ என்னோட பிலாகோடா வலது புற ஓரத்துல வலைப்பதிவர் திருவிழா லோகோ இருக்குள்ள அதுல  கிளிக் செஞ்சு அதுல உங்க விவரத பதிவு செய்ங்க... . இந்த விருதுகள நாங்க உங்களுக்கு குடுக்க முத்துநிலவன் அய்யா அப்பறம் பொன்.க அய்யாவோட நாங்க எல்லாரும்  ரொம்ப ஆவலா காத்திருக்கோம்...   இந்த திருவிழாவிற்கு நிதிகுடுக்க ஆசையா இருந்தா இந்தாங்க டீடியலு...

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645


கலந்து பேச இந்தாங்க ஜி மெயிலு  bloggersmeet2015@gmail.com

வருக வருக என அனைவரையும் வரவேற்கிறோம்...

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா!!!

   நீக்கு
 2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 3. "முயற்சி திருவினையாக்கும்"
  வலைப்பதிவர் திருவிழா
  பண்பான விழா பார் சிறக்க நல்வாழ்த்துகள்.
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி அய்யா... அனைவரும் இணைந்து சிறப்பாய் நடத்துவோம்

   நீக்கு
 4. வாழ்த்துகள்....கலக்கிப்புடுவோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக அய்யா. வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. சரி சரி நல்லா கலக்குங்க ..... அனைத்தும் சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 6. பாருங்க இவ்ளோ பேரு வந்து பார்த்து பாராட்டியிருக்காங்க.. நா எவ்ளோ தாமதமா வர்ரேன்... ரொம்ப மகிழ்ச்சி ஸ்ரீ!
  தொடர்ந்து எழுதுங்கள்.. கவிதை கட்டுரையாக சமூகம் பற்றியும் என் இனிய வாழ்த்துகள். விழாப்பணிகள் தொடர்வோம் 02-9-அன்று மாலை சந்திப்போம். நன்றி
  (என் வலைப்பக்கத்தில் இணைப்புத் தந்துவிட்டேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அய்யா... இதோ வந்துவிருகிறேன் அங்கே !!

   நீக்கு

சுட்டி

நடைபாதையின்  விளிம்பில்  நிழலொன்று  தள்ளாடிக்கொண்டிருக்கிறது  உட்கார்ந்து  எழுந்து  திரும்பி  சப்புகொட்டியது  பொக்கை வாயால...