வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ஆர்.எம்.எஸ்.ஏ முதல் பயிற்சி அனுபவம் பகுதி - 1

வணக்கம் தோழர்களே!
               புதிய பதிவோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான்  ஆசிரியன் என்பதை நம்புவது என்பதே என்னை பார்க்கும் பலருக்கும் சவாலானதாகும். அதிலும் இந்த கத்துக்குட்டி அவர்கள் முன்னிலையில் பயிற்சியளிப்பதென்பது  சவாலினும் சவாலானதே!  இப்படியாய் என்னுடைய அனுமதியோடு என்னை இதில் கோர்த்துவிட்ட பெருமை ஒருவரையே சாரும். அவரைப்பற்றியே ஒரு பதிவை  எழுதலாம் என்றிருக்கிறேன். ஆகவே அவரது பெயர் இப்பொழுது வேண்டாம்.
          முதல் நாள் ஒருவிதமான பதற்றத்துடனும் அதே சமயம் இந்த வாய்ப்பை நிச்சயம் நழுவவிடக்கூடாது என்ற உறுதியுடனும் திருமயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பேருந்தில் பயணத்தை துவங்கினேன் .(முதல் நாள் பயிற்சிக்கான  முன்தயாரிப்பு இருக்கிறதே அது பெரிய கதை  ). பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் பள்ளிக்கு சென்ற மாணவனை பார்த்து இங்கு ஆண்கள் பள்ளி எங்கு இருக்கிறது என்று கேட்டவுடன் அப்படியே பின்னாடியே வாங்க என்றான் நடந்துகொண்டே? கையில் பை கனமாக இருக்க அப்பா தம்பி மெதுவா நட என்றால் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் போய்கொண்டே இருந்தான்... ஒருவழியாக பள்ளியின் பின்புற வாயிலுக்கு கொண்டுவந்து  இப்படியே போங்க என்றான்... முதல் நாளே பின்புறமாக போவதா என்ற தயக்கத்துடன் உள்ளே சென்றேன்...

        உள்ளே சென்றவுடன் அங்கே இருந்த ஒரு அலுவலரிடம் வந்த செய்தியை கூற அவரோ ஒரு செய்தித்தாளை கொடுத்து இந்தாங்க அம்மா வரவரைக்கும் இத படிங்க என்று ஒரு அறையில் உட்கார வைத்தார்.  படித்து முடித்தேன், இல்லை படம் பார்த்தேன் என்பதே உண்மை. இதற்குள்ளாக ஒவ்வொருவராக  மற்ற பள்ளிகளிலிருந்து பயிற்சிக்கு வரத்தொடங்கினர். நிறைய தெரிந்த பழகிய முகங்கள் என்பதால் ஒருவித மகிழ்ச்சி, இருப்பினும் அவர்களில் சிலரிடம் விடைத்தாள் திருத்தும் மையத்தில் விடைத்தாள் திருத்துபவராக  பணியாற்றி இருக்கிறேன். அந்த நடுக்கமும் கூடவே இருந்தது. ஒரே நம்பிக்கை என்னவெனில் அங்கே தலைமைபயிற்சியளராக  பி. அழகாபுரி பட்டதாரி ஆசிரியர் பிரபாகரன் அய்யா வந்திருந்ததே. என்ன நடந்தாலும் அவர் பார்த்துக்கொள்வர் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

      பயிற்சி ஒரு சிறிய மனக்கசப்புடனேயே துவங்கியது.(அதை சொல்ல விரும்பவில்லை). முக்கியமான ஒன்றை சொல்லவில்லை, பயிற்சி ஆங்கில ஆசிரியர்களுக்கானது. ஆங்கில பாடத்தில் மாணவர்களின் முன்னேற்றத்தை அதிகபடுத்த கொடுக்கவேண்டிய பயிற்சி. எனவே முதல் இரண்டு பாடவேளைகளும் திரு. பிரபாகரன் அய்யா அவர்கள் பயிற்சியளித்தார்கள். அவர் பயிற்சி கொடுக்க கொடுக்க ஒரு பாஸ்ட் அண்ட் பியுரியசே வயிற்ருக்குள் ஓடியது எனலாம். என்னம்மா நடத்துராருபா!!! இது நடந்துகொண்டிருக்கும்போதே  மதியத்திற்கு கஸ்துரி ரெங்கன் அய்யா அவர்கள்  பயிற்சியளிக்க வருவதாய் அலைபேசியில் சொல்ல இரண்டு ஹாலிவூட் படங்கள் வயிற்ருக்குள் ஓடியது.  இதில் இன்னொரு தர்மசங்கடம் நான் எதை  முன்தயாரிப்பு செய்துவைதிருந்தேனோ அதில் பாதியை பிரபாகரன் அய்யா அவர்கள் முடித்துவிட்டார்கள். பேர் கிரில்ஸ் சொல்வது போல இனி நான் நினைத்தது ஒன்றும் நடக்க போவதில்லை என்றே நினைத்துக்கொண்டேன்.

     மதிய உணவு இடைவேளை முடிந்ததும் என்னுடைய முறையும் வந்தது. என்னுடைய தாய் தந்தைக்கும்,( என்னுடைய தமிழ் அய்யா திரு. அந்தோனிசாமி அவர்கள் நான் ஆறாம் வகுப்பு படிக்கையில் பேச்சு போட்டியில்  முதல் வணக்கம் எப்படி சொல்வது என்று சொல்லிகொடுத்தார் அதிலிருந்தே இப்படித்தான் என்னுடைய உரையை தூக்குவது வழக்கம் ) பிறகு என்னுடைய ஆசிரியர் மற்றும்  நண்பர்களுக்கும் வணக்கம் கூறி மீதமிருந்த வினாக்களை ஒவ்வொன்றாய் நடத்த ஆரம்பித்தேன். நான் ஒவ்வொன்றாக நடத்தும் போதும் அங்கே இருந்தவர்கள் என்னை ஊக்கப்படுதினர். என்னுடைய நடுக்கமும் பயமும் மறைந்து என்னுடைய முழு தயாரிப்பையும் அவர்களிடம் கொண்டு சேர்த்தேன். அடுத்ததாக என்னுடைய தோழி செல்வி. ரம்யபாரதி அவர்கள் மிக சிறப்பாக வகுப்பெடுத்தார்கள். அடுத்ததாக திரு. கஸ்துரி ரெங்கன் அய்யா அவர்கள்  அவருடைய பாணியில் மிகவும் சிறப்பாக வகுப்பை முடித்தார்கள். அன்றைய நாள் மிகவும் இனிதே நிறைவு பெற்றது. 

( அடுத்த பகுதியில் கஸ்துரி ரெங்கன் அய்யா அவர்களும் நானும் ஒரு டீ கடையில் பெற்ற அனுபவத்துடன் மற்றவை எழுதுகிறேன்)

     

3 கருத்துகள்:

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...